தானியேலுக்கு காபிரியேல் அறிவுறுத்தியவைகள் Jeffersonville, Indiana, USA 61-0730M 1காலை வணக்கம், நண்பர்களே, இன்று காலையில் இக்கூடா ரத்தில் நாம் இருக்கிற இவ்வேளையில் மிகவும் உஷ்ணமாக இருந்தபோதிலும், இங்கே இருப்பது மகிமையானதாக இருக்கிறது. எனவே நாம் இன்று இவ்வாராதனைக்கு வர முடிந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். “தானியேலின் எழுபது வாரங்கள்'' என்ற தலைப்பில் ஒரு வேத பாடத்தை நான் போதிக்கப் போவதைப் பற்றி ஏற்கெனவே அறிவிப்பு கொடுத் துள்ளேன். ஏழு முத்திரைகள் கொண்ட ஏழு முத்திரைகளின் செய்தி , ஏழு வாதைகள், ஏழு எக்காளங்கள், மூன்று ஆபத்துக் கள் சூரியனில் நின்ற அந்த ஸ்திரீயானவள், சிவப்பான மிருக மாகிய பிசாசானவன், 1,44,000 பேர்கள் முத்திரையிடப்படல் ஆகிய மீதமுள்ள செய்திகளை நான் பிரசங்கிக்கப் போகுமுன்னர், இச்செய்தியானது மீதமுள்ள செய்திகளை ஒன்றாக்கி பிணைக்கி றதாக இருக்கிறது. இந்த குறிப்பிட்ட காலத்தில் தான் இவைகள் யாவும் சம்பவிக்கின்றன. ஆகவே இவைகளின் வரிசையில் இச்செய்தியையே முதலாவதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் எண்ணினேன். 2இப்பொழுது உஷ்ணமாயிருக்கிறது. நமக்கு இயன்ற அளவுக்கு மேல் நாம் இங்கே இருக்க உத்தேசிக்கவில்லை இப்பருவ காலமானது வழக்கமாக செயல் - நிகழ்ச்சி முதலிய வற்றுக்கு ஏற்றதல்லாத மோசமான பருவகாலமாக இருப்ப தால், மக்கள் அடிக்கடி சபை ஆராதனைகள் ஏற்படுத்திக் கொள்ளு கிறதில்லை. மேலும், விசேஷமாக... அவர்கள் யாவரும் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகளைப் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் அங்கே சௌகரியமாகவே இருக்கும். அவ்வசதியை நாமும் பெற்றிருக்க விரும்புகிறோம்; ஆனால் இந்த வேளையில் நமக்கு அவ்வசதி இல்லை. நமது முற்பிதாக்களில் அநேகர் தகிக்கிற சூரியனின் கீழ் வாழ்ந்திருக்கின்றனர். நமக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை இல்லாததைப்பற்றி நான் எண்ணும் போது, எனது நினைவுகள் எப்பொழுதும் ஆப்பிரிக்க தேசத்திற்கு பின்னிட்டு செல்கிறது. அங்கே மக்கள் சூறாவளிகளிலும் திறந்த வெளி களில் படுத்துக்கொண்டிருக்கவும், அவர்களுடைய பெண்கள் தங்கள் தலை முடியை தங்கள் முகங்களில் தொங்கவிட்டவாறு, இரவும் பகலும் அங்கேயே கிடந்து அவர்கள் கிடக்கிற இடங் களைவிட்டு ஒருபோதும் அகலாமல், புசியாமலும், குடியா மலும், ஒன்றும் செய்யாமல் அவ்வப்பொழுது கிடைக்கிற கர்த்தருடைய ஒன்றிரண்டு வார்த்தைகளை பிடித்துக்கொள்ளும் படி காத்து கிடப்பார்கள். 3மிகவும் வெப்பமாயிருந்த ஒரு சமயத்தில் நான் மெக்ஸி கோவுக்கு சென்றிருந்ததை நான் எண்ணிப்பார்க்க முடிகிறது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறையில் நான் உட்கார்ந் திருக்கையில், மிக மிக உஷ்ணமாயிருந்தபடியால் எனக்கு நானே விசிறிக் கொள்ளவேண்டிய அளவுக்கு இருந்தது என்று நான் நேர்மையாக கூறுகிறேன். அங்கேயிருந்த ஒரு பெரிய அரங்கத்தின் மணற்பரப்பில் மக்கள் காலையில் ஒன்பது மணி துவங்கியே வந்து விட்டதை நான் கண்டேன். அங்கே அமரு வதற்கு இருக்கைகள் கூட இல்லை. வியாதியஸ்தர்கள், கடுமையாக சுகவீனமுற்றவர்கள், மரித்துக்கொண்டிருக்கிற பிணியாளிகள், மரித்துகொண்டிருந்த சிறு குழந்தைகள் ஆகிய யாவரும் அந்த கொதிக்கிற சூரியனின் கீழ் நின்று கொண்டிருந் தனர். அவர்களுக்கு வெயிலுக்கு ஒதுங்க எந்த நிழலும் அங்கே இல்லை. ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு, காலை ஒன்பது மணி முதல் இரவு ஒன்பது மணி வரையிலும் நின்றிருந்து, முப்பது நிமிட பிரசங்கத்தை மொழி பெயர்ப்பாளர் மூலம் கேட்பதற்காகவும், கர்த்தருடைய கிரியைகளைக் காணவுமாக அங்கே காத்து கிடந்தனர். அவர்கள் தங்கள் மேல் பெரிதும் , பழசானதுமான கனமான ஆடைகளை அணிந்தவர்களாய் அமர்ந்து காத்துக்கிடந்தனர். அவர்கள் அவ்விதமான ஆடைகளை குளிர்காலத்திலும், கோடையிலும் அணிகிறார்கள். அவர்க ளுக்கிருந்த ஆடைகள் அவ்வளவுதான். 4காடுகளிலிருந்தும் பிணியாளிகளை அவர்கள் ஏராளமாகக் கொண்டு வருகிற விதத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். அங்கே நாம் நகர்ந்து செல்லக் கூட இயலாதபடி அவர்கள் கூடியிருப்பார்கள். இந்தியாவில் குஷ்டம் மற்றும் இதர வியாதி களோடும் கூடிய மக்களை ஒருவர் மேல் ஒருவர் கிடத்தப்பட்ட நிலையில் கொண்டு வந்து வைத்திருப்பார்கள். தெருக்களில் அவர்களை இழுத்துக்கொண்டு வருவார்கள். வெப்பமண்டலத் தில் தகிக்கிற, கொதிக்கிற, எரிகிற சூரியனின் கீழோ அல்லது புயல்காற்று, மின்னல் மின்னிக் கொண்டிருக்கும்போதோ கூட அவர்கள் அசையாமல் முறையிடாமல் அவ்வப்பொழுது வருகிற தேவனுடைய வார்த்தையை தங்களுடைய ஆத்துமா வுக்காக பிடித்துக்கொள்ளும்படி அவர்கள் காத்துக்கிடந்தனர். அப்படியெல்லாம் இருக்கையில் நமக்கோ நம் தலைகளுக்கு மேலாக மின் விசிறிகள் சுழன்று கொண்டிருக்க, நமக்கு மேலே நல்ல கூரை இருக்க, நாம் ஏன் எதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவேண்டும்? நாம் இதைப் பற்றி முறையிடுவோ மென்றால், நாம் நம்மைக் குறித்து வெட்கமடைய வேண்டி யவர்களாக இருக்கிறோம். 5தெற்கு பசிபிக் மாகடல் பிரதேசத்தில் உள்ள ஒரு தீவில் சமீபத்தில் நடந்ததை நான் நினைத்துப் பார்க்கிறேன். அன்றொரு நாள் இரவில் நான் ஒரு ஆராதனையை நடத்தினேன். அன்று ஒரு புயல் வந்தது. அவ்விதமானதொரு புயலை நான் கண்ட தேயில்லை. எங்கும் மின்னலானது பளிர் பளீரென மாறி மாறி அடித்துக்கொண்டே இருந்தது. காற்று அடித்து மரங்களை கீழே சாய்த்தது. அப்பொழுது, நான், “நல்லது, மக்கள் எவரும் அங்கே வந்திருக்கமாட்டார்கள், எனது உடுப்பை நான் கழற்றி விடுகிறேன்...'' என்று எண்ணினேன். சிறிது நேரம் கழித்து, கதவுக்குப் பின்னால் ஒரு சிறிய கார் வந்து நின்றது; யாரோ கதவைத் தட்டி, ''போக ஆயத்தமாயிருக் கிறீர்களா?' என்று கேட்டார். அங்கே வந்த ஆங்கிலம் தெரிந்த அந்தப் பையனிடம் நான், ''அங்கே மக்கள் வந்திருக்கிறார்களா?“ என்றேன். ''அந்த பெரிய விளையாட்டரங்கத்தில் கூட்டம் நடக்கிற இடத்துக்குப் போகிற வழியில் உள்ள நகர் சதுக்கத்தண்டையில் கூட நெருங்க முடியாதபடி நிலைமை உள்ளது'' என்று அவன் பதிலளித்தான். ''அந்த அளவுக்கு மக்கள் வெள்ளம் அங்கே இருக்கிறது என்று நீ கூறுகிறாயா, இத்தனை புயலிலும் கூட'' என்று நான் வினவினேன். ''அவர்கள் தேவனை குறித்து கேட்க விரும்புகின்றனர்'' என்று பதிலளித்தான். 6எனவே நான் அங்கே சென்றேன். அங்கே ஸ்திரீகள், வாலிபப் பெண்கள், வாலிபர்கள் கூடியிருந்தனர். அவர்கள் கேலி பரிகாசமாக நகைத்துக்கொண்டிருக்காமலும், மெல்லும் பசையை (Chewing gum) மென்று கொண்டிருக்காமலும், தங்களுடைய சிநேக பையன்களைப் பற்றி கதையடித்துக் கொண்டிருக்காமலும், ஒவ்வொரு வார்த்தையையும் அப்ப டியே அமைதியாக நின்று கவனித்துக் கொண்டேயிருந்தனர். பீட அழைப்பைக் கொடுத்தபொழுது, ஆயிரக்கணக்கானவர் கள் கண்ணீர் மல்க எழுந்து நின்று தேவனுக்கு நேராக தங்கள் கரங்களை உயர்த்தியவாறு தங்களுடைய ஆத்துமாக்களுக்கு இரக்கம் வேண்டிக் கேட்டவாறு இருந்தனர். அவர்களில், பதினேழு, பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம் பெண் களும், வாலிபர்களும் இருந்தனர். இங்கே வயதான வர்களைக் கூட வார்த்தையை கேட்க வைப்பதென்றால் மிகவும் கடினமா யுள்ளது. நீங்கள் இவ்வித நிலையை கண்டீர்களா? நமக்கு முறையிட ஒன்றுமேயில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. தேவனுக்கு நன்றியுண்டாவதாக. ஆம், ஐயா! அமெரிக்காவில் ஏனைய இடங்களில் உள்ளதைப் போல நாமும் நவீனமயமாக யாவும் நமக்கு இருக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் நமக்கு அந்த விதமாக இருக்கவில்லை. எனவே நமக்கு இருப்பதைக் கொண்டு நடத்திச் செல்லுவோம். 7இப்பொழுது கூடாரத்தில் மீண்டுமாக செய்ய நான் விரும்பி கவனித்துணர்ந்த சிறு காரியம் ஒன்றுண்டு. எத்தனை பேர்களிடத்தில் வேதாகமங்கள் உண்டு? கரங்களை உயர்த்திக் காண்பியுங்கள். நல்லது! ஜெபத்திற்கு முன்னால் நாம் 99ம் சங்கீதத்தை எடுத்துக்கொள்வோமாக. நாம் இதை அநேக ஆண்டுகளுக்கு முன் செய்வது வழக்கம். அப்படித்தானே சகோதரன் நெவில் அவர்களே! நீங்கள் ஏற்கெனவே ஒரு சங்கீதத்தை வாசித்து விட்டீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. இல்லை... சங்கீதங்களை சபையார் வாசிக்க வேண்டு மென நான் விரும்புகிறேன். இன்று காலையில் நான் எனது படிக்கும் அறையில் அமர்ந்து இச்செய்தியின் பேரிலும், வார்த்தையின் பேரிலும் தியானித்துக் கொண்டிக்கையில், “மக்கள் யாவரையும் மறுபடியுமாக ஒரு சங்கீதத்தை வாசிக்கச் செய்யவேண்டும், அது நன்றாக இருக்கும்'' என்று எண்ணினேன். நான் இங்கே வர சற்று தாமத மானதற்கு காரணம் என்னவெனில், நான் இங்கு வருவதற்குப் புறப்படும் முன்னர் தொலை தூரத்திலிருந்து, அதாவது ஷையானா என்ற இடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதுதான் தாமதத்திற்குக் காரணம் ஆகும். நான் இந்த சங்கீதத்தை எடுத்துக்கொள்ளும் வேளையில், அறிவிக்கும்படியாக அறிவிப்புகள் உள்ளன. அவைகள் இப் பொழுதுதான் என்னிடம் கொடுக்கப்பட்டன; இப்பொழுது சங்கீதம் 99. 8'இது முதற்கொண்டு இக்கூடாரத்தில் நடக்கும் கூட்டங்களைப் பற்றியும், வெளியில் நடக்கும் கூட்டங்களைப் பற்றியும் உள்ள அறிவிப்புகள் ஜெபர்சன்வில்லில் உள்ள அலு வலகத்தில் இருந்தே வரும். கூட்டங்களைப் பற்றிய தகவல் அறிய விரும்புவோர் தங்கள் பெயரையும், முகவரியையும் எழுதி இன்றிரவில் ஆராதனைக்குப் பின்பு, பிரசங்க பீடத்தில் வைக்கவேண்டும். கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு வசதியாக, உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ளத்தக்கதாக, உங்களுக்கு உரிய நேரத்தில் அறிவிப்பு அனுப்பப்படும்'' எங்கே நாங்கள் கூட்டங்கள் நடத்த உள்ளோம் என்பதைப் பற்றி எதிர்காலத்தில் அறிய விரும்பும் எவருக்கும் அதற்கு வசதியாக இப்பொழுது அங்கே அலுவலகத்தில் ஒரு ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் உங்களது பெயர் முகவரியை எழுதி இங்கே வைத்துவிடுவீர்களானால், எங்கே கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றியும், ஒருவேளை எந்தப் பொருளின் பேரில் செய்தி கொடுக்கப்படும் என்பதைப்பற்றியும், இன்னும் என்னென்ன தகவல்கள் தரப்பட வேண்டுமோ அவைகளையும் பற்றி ஒரு கார்டில் எழுதி உங்களுக்கு தகவலளிக்கப்படும். உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால் வரலாம். தகவல் வருவதற்கு அதிகாரபூர்வமுள்ள ஒரு இடம் உங்களுக்கு இல்லாமல் போனால், அப்பொழுது ஒருவர் ஒன்றைச் சொல்லவும், இன்னொருவர் இன்னொன்றைச் சொல்லவுமாக அதினால் நீங்கள் சரியான தகவலைப் பெற்றுக் கொள்ள இயலாமல் போய்விடும். எனவே, உங்களது பெயர் முகவரி ஆகியவைகளை ஒரு தாளில் எழுதி இங்கே வைத்து விடுவீர்களானால், பில்லி பால் அதை எடுத்துக்கொண்டு, அறிவிப்பை அனுப்புவார். 9இப்பொழுது இன்னொரு விஷயமும் கேட்கப்படுகிறது. மேற்கொண்டும்... இருக்குமா, “சகோ. பிரான்ஹாமே, கூடாரத் தில் மேற்கொண்டும் பகுத்தறியும் வரம் கிரியை செய்தலோடு கூடிய சுகமளிக்கும் ஆராதனைகள் நடத்துவீர்களா?'' என்று கேட்கப்படுகிறது. இல்லை, இல்லை பகுத்தறிதல்கள் நமது இன்னொரு குழவினரால் அளிக்கப்படும். நமக்கு சகோ. நெவில் அவர்கள் இருக்கிறார். அவருக்கு தீர்க்கதரிசன வரம் இருக்கிறது. அதினால் அவர் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கையில் தீர்க்க தரிசனம் உரைத்து, அவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை களைப் பற்றி அறியச் செய்வார். நம்மிடையே ஹிக்கின் பாதம் என்ற பெயருள்ள ஒரு சகோதரன் உண்டு. அவர் தர்ம கர்த்தாக்களில் ஒருவராவார். அவர் உண்மையுடன் நமது மன்றக் குழுவில் பணி புரிந்தவர். அவரை நான் இன்று காலையில் இங்கு காணவில்லை. ஆனால் அவர் வழக்கமாக அன்னிய பாஷையில் பேசும் வரத்தையுடையவர். இங்கே ஒரு சிறிய பெண்மணியும் உண்டு, அவள் பெயர் ஆர்கன் ப்ரைட் என்பதாகும். அவள் மிகவும் இனிமையான சிறிய சகோதரியாவார். அவளுக்கு பாஷைகளுக்கு அர்த்தம் உரைக்கும் வரம் உண்டு. 10இவர்கள் மூலம் அளிக்கப்படும் செய்திகள் தேவனால் உண்டானவைகளென நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அவைகள் ஒழுங்கோடும் கிரமத்தோடும் வருகின்ற னவையாக இருக்கின்றன. அவைகள் கிரமத்தோடு உள்ளவை யாகும். இவ்வரங்கள் சபையில் குவிய ஆரம்பித்த உடனேயே, சபைக்குரிய ஒழுங்கில் அவைகளை ஒழுங்குபடுத்த நாம் முயலப்போகிறோம். வெகு விரைவில் நான் அதைக் குறித்து கவனிக்கப்போகிறேன், அதினால் ஆராதனைகளை கர்த்தருடைய ஒழுங்கின்படி பரிபூரணமாக கொண்டு செல்ல இயலும். ஆனால் இந்த அருமையான மக்களை, அவர்கள் மூலம் வரும் செய்திகளை எனது அண்டை வீட்டுக் காரியான திருமதி வுட் அவர்கள் ஒரு மைக்கை இங்கே பொருத்தி, ஒலிநாடாவில் கூட்டத்தின் நிகழ்ச்சி பூராவையும் பதிவு செய்து, அதின் மூலம் இவர்கள் உரைக்கும் இச்செய்தி களை பெற்றுக்கொண்டு அவைகளை எழுதியெடுத்து, அவைகள் சரிதானா இல்லையா என்று பரிசோதிப்பதாகக் கூறுகிறார். அவ்விதமாகத்தான் அவைகளை அச்சகோதரி சோதிக்கிறார். திருமதி வுட் அவர்கள் ஒரு நேர்மையான பெண்மணியாவார். அவர்கள் கூறிய அநேக காரியங்கள் நிறைவேறியிருக்கிறதாக அச்சகோதரி என்னிடம் கூறுகிறார். 11எனவே நாம் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நான் வீட்டுக்கு திரும்பி வருகையில் இதனால் எப்பேர்ப்பட்ட பாரம் நீங்கின உணர்வு எனக்கு வீட்டில் ஏற்படும்! தீர்க்க தரிசனம் ஊழியத்தின் பாகத்தில் அந்த பகுத்தறிதலினால் இரகசியத்தை வெளிப்படுத்தும் ஊழியமானது என்னை அப்படியே குலைத்து விடுகிறது. எனவே, தேவன் சபையில் தீர்க்கதரிசனம் உரைத்தல், அன்னிய பாலை யில் பேசி அர்த்தம் உரைத்தல் இவைகளை அளித்ததின் மூலம் எனக்கு கொஞ்சம் சுமையை நீக்கி விடுதலை அளித்துள்ளார். அந்நிய பாஷையில் பேசி அர்த்தம் உரைத்தல் தீர்க்கதரிசன வரமாய் இருக்கிறது. அன்னிய பாஷையில் பேசுவதாவது. . . அங்கே இரண்டு பேர்கள் தீர்க்கதரிசனம் உரைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அன்னிய பாஷைகளில் பேசுகிறார். இன்னொருவர் முதலாமவர், அன்னிய பாஷைகளில் பேசுவது என்ன என்பதை வியாக்கி யானிக்கும் வரத்தினால் புரிந்துகொள்கிறார், எனவே அது நிச்சயமாகவே தீர்க்கதரிசனம் உரைத்தலாகத்தான் இருக்கிறது. 12இங்கு நடக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும், நமக்கு ஜெப வரிசையானது இருக்கும் பொழுதெல்லாம், அது நமக்கு உண்டாயிருக்கிறது. யாரோ ஒருவர் அந்த வரத்தைப் பற்றி கேட்டார். ஆம் நான் இன்னமும் அதை உடையவனாகத்தான் இருக்கிறேன். ஆனால் நான் அதை தனிப்பட்ட நேர்முகப் பேட்டிகளில் (Private Interviews) மட்டுமே உபயோகிக்கி றேன். நேர்முகப் பேட்டியை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பதைப்பற்றி அறிவிப்புப் பலகையில் தெரிவிக்கப்பட் டுள்ளது என்று நான் நம்புகிறேன். அதற்காக அனுமதியைப் பெறவும், உங்களுக்குரிய நேரத்தை ஒழுங்குப்படுத்தித் தரவும் என் மகன் பில்லி பவுல் உள்ளார். இங்கே இக்கூட்டங்களுக்குப் பிறகோ, வெளியில் எங்கேயாவதோ, நேர்முகப் பேட்டி காண வேண்டுமெனில், பில்லி பவுல் வழங்கும் ஒரு கார்ட் உங்களிடம் இருக்க வேண்டும் - உங்கள் வாழ்க்கையில் நீங்கள் புரிந்துகொள்ள இயலாத காரியம் உண்டென்றால், அதினின்று நீங்கள் விடுவிக்கப்பட வழி காணாமல், அதற்காக நீங்கள் கர்த்தருடைய ஞானத்தைத் தேடுவீர்களானால், அப்பொழுது செயலாளராக உள்ள என் மகன் பில்லி பவுலைப் போய் பாருங்கள். அவர் உங்களுக்கு ஒரு சிறிய அட்டையைக் கொடுத்து, அதில் ஒரு தேதியையும், நேரத்தையும் குறிப்பிட்டுத் தருவார். அவ்விதமான நேர்முகப் பேட்டிகளை நாம் நடத்தும் பொழுது, பேட்டிக்காக வரும் நீங்கள் நானும் மட்டும் அங்கே இருப்போம். வருவது ஸ்திரீயாக இருப்பின் அப்பொழுது என் மனைவியும் கூட இருப்பாள். அப்பொழுது நாம் கர்த்தரை தேடி நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி அவரிடம் கேட்போம். 13ஏனைய சிறிய விஷயங்களை சகோதரன் நெவில் அவரிக ளிடத்திலும், சகோதரன் ஹிக்கின்பாதம் அவர்களிடத்திலும் சகோதரி ஆர்கன் ப்ரைட்டினிடத்திலும் இங்கே சபையில் இருக்கிற, அன்னிய பாஷைகளில் பேசி வியாக்கியானிக்கிற ஏனையோரிடத்திலும் ஒப்படைப்போம். ஆகவே நாம் யாத்திரை செய்கிறவர்களைப் போல் இருக்கி றோம். ஒரு சமயம் யெத்ரோ இவ்வாறு மோசேயிடம் கூறினான் என்று நம்புகிறேன்; சில மூப்பர்களை தெரிவு செய்வோம்...'' என்று மோசேயினிடத்திலிருந்த தேவ ஆவியானவர் எழுபது மூப்பர்களில் பகிரப்பட்டு அவர்கள் தீர்க்கதரினம் உரைத்தார்கள். பெரியதும், கடினமானதுமான விஷயங்கள் மட்டுமே மோசேயிடம் கொண்டு வரப்பட்டன. இப்பொழுது நாம் மோசேயல்ல, இவர்கள் எழுபது மூப்பர்களுமல்ல. ஆனால் நாம் இன்னமும் அதே யேகோவா தேவனை, வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திற்கு நம்மை நடத்திச் செல்கிற அதே அக்கினி ஸ்தம்பத்தை உடையவர்களாய், சேவித்துக் கொண்டிருக்கி றோம். வியாக்கியானங்களும், பகுத்தறிதலினால் இரகசியங்களை வெளிப்படுத்துதலும் உண்டாயிருக்கிற பிற கூட்டங்கள் நாம் நடத்தப் போகிறோம். அதுதானே ஜெபத்திலும் வேத வாசிப் பிலும் இருப்பதற்குரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்து, இந்த நேர்முகப் பேட்டிகள் வரப்போகும் நாட்களை அறிந்தவனாய், அதற்கென்று நான் ஆயத்தமாவேன். நமது ஊழிய செயலாளராகிய பில்லி பவுல் பிரான்ஹாம் அவர்கள் இதற்குரியவைகளை செய்வார். அதைப்பற்றி தர்மகர்த் தாக்களினால், பின்னால் இருக்கிற அறிவிப்புப் பலகையில் குறிப் பிடபட்டுள்ளது. மக்கள் வெளியே செல்லுகையில், அறிவிப்பு பலகையில் அதைப்பற்றி வாசித்து அறிந்து கொள்ள வேண்டி யது என்று மக்களுக்கு அறிவிக்கும்படியாக என்னிடம் ஒரு சிறு குறிப்பு கொடுக்கப்பட்டது. 14இப்பொழுது, இக்காலையில், நாம் ஒரு மகத்தான பாடத்தை உடையவர்களாயிருக்கிறோம். இன்றிரவிலும் அதை தொடர்ந்து நாம் பார்க்கலாம். கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த ஞாயிற்றுக் கிழமையில் அதற்குள்ளான இன்னொரு பாகத்தை யும் பார்ப்போம். நான் அதைப் பற்றி படித்து ஆராய்கிற வரை யிலும், அது எவ்வளவு ஆழமானது என்பதைப் பற்றி அறியா திருந்தேன். இன்னமும் அது எனக்கு இரகசியமானதாகத்தான் இருக்கிறது. எனவே நான் கர்த்தரையே சார்ந்து கொண்டிருக் கிறேன். 15இப்பொழுது வேதாகமம் உள்ளவர்கள், 99ம் சங்கீதத்திற்கு நாம் திருப்புவோம். முதலில் நான் ஒரு வசனத்தை வாசிக்கவும், அடுத்த வசனத்தை நீங்கள் வாசிக்கவும், இவ்வாறு மாறி மாறி வாசித்து, முடிவில் கடைசி வசனத்தை நாம் யாவரும் சேர்ந்து வாசிப்போம். இவ்வாறு நான் முதலாம் வசனத்தை வாசிக்கவும் சபையார் இரண்டாம் வசனத்தை வாசிக்கவும் மறுபடி நான் மூன்றாவது வசனத்தையும் சபையோர் நான்காவது வசனத்தை வாசிக்கவும் செய்து, இப்படியாக கடைசி வரைக்கிலும் செய்து கடைசி வசனத்தை நாம் யாவரும் சேர்ந்து வாசிப்போமாக. தேவ வசனத்தை வாசிக்கையில் நாம் யாவரும் எழுந்து நிற்போமாக. கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் , ஜனங்கள் தத்தளிப்பார் களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள் மேலும் உயர்ந்தவர். மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது. தேவரீர் நியாயத்தை நிலை நிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாத படியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத் தைப் பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார். மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் கைக்கொண்டார்கள். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டின போதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். 16இப்பொழுது வேதாகமம் உள்ளவர்கள், 99ம் சங்கீதத்திற்கு நாம் திருப்புவோம். முதலில் நான் ஒரு வசனத்தை வாசிக்கவும், அடுத்த வசனத்தை நீங்கள் வாசிக்கவும், இவ்வாறு மாறி மாறி வாசித்து, முடிவில் கடைசி வசனத்தை நாம் யாவரும் சேர்ந்து வாசிப்போம். இவ்வாறு நான் முதலாம் வசனத்தை வாசிக்கவும் சபையார் இரண்டாம் வசனத்தை வாசிக்கவும் மறுபடி நான் மூன்றாவது வசனத்தையும் சபையோர் நான்காவது வசனத்தை வாசிக்கவும் செய்து, இப்படியாக கடைசி வரைக்கிலும் செய்து கடைசி வசனத்தை நாம் யாவரும் சேர்ந்து வாசிப்போமாக. தேவ வசனத்தை வாசிக்கையில் நாம் யாவரும் எழுந்து நிற்போமாக. கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார் , ஜனங்கள் தத்தளிப்பார் களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள் மேலும் உயர்ந்தவர். மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது. தேவரீர் நியாயத்தை நிலை நிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாத படியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத் தைப் பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார். மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும் கைக்கொண்டார்கள். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டின போதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். 17எங்கள் தேவனே, மிகவும் உத்தமமானதும், பய பக்திக்குரியதுமான வசனங்களிலொன்றை நாம் அணுகிக் கொண்டிருக்கிற வேளையில், இத்தனை ஆண்டுகளாக இரகசி யமாக வைக்கப்பட்டிருந்த இக்காரியங்களை எங்களுக்கு வெளிப் படுத்தி அருளும் என்று நாங்கள் உம்மிடம் கேட்கிறோம். நீர் இவ்வுலகில் இருக்கும்போது அதைக் குறித்து பேசி, ''வாசிக் கிறவன் சிந்திக்கக்கடவன்'' (மத். 24:15) என்று கூறினீர். எனவே, கர்த்தாவே நாங்கள் உம்மிடம் கனிவுடன் வருகிறோம். என்ன கூறுவது என்பதை நாங்கள் அறியாதிருக்கிற நிலையில் உமது ஞானத்தைத் தேடுகிறோம். இங்கே சில வேதவாக்கியங்களை வரிசையாக எழுதி வைத்திருக்கிறோம். பயபக்தியோடும் பதில் வேண்டி உம்மை முழுமையாக சார்ந்து கொண்டும், வேறு எந்த நோக்கத்திற்கும் அல்ல, நாங்கள் ஜீவிக்கிற வேளையைக் குறித்து அறிந்து கொள்ளும்படியும், எங்களுக்கு முன்னால் இருக்கும் மகத்தான காரியங்களுக்காக நாங்கள் ஆயத்தப்பட்டி ருக்கவுமாக வருகிறோம். அதை நீர் எங்களுக்கு அளிக்க மாட்டீரா, கர்த்தாவே? இவ்விதமாக ஜெபிக்க வேண்டுமென எங்களுக்கு கற்பித்தவருடைய நாமத்தினால் கேட்கிறோம். (சபையார் கர்த்தருடைய ஜெபத்தை ஒன்று சேர்ந்து கூறு கிறார்கள் - ஆசி). ''பரமண்டலங்களிலிருகிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல் எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களை சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும் , மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென். மத். 6:9-13 நீங்கள் அமர்ந்து கொள்ளலாம். 18சகோதரர்களில் யாராவது தங்களது கோட்டுகளை கழற்றிக் கொள்ள விரும்பினால், செய்து கொள்ளுங்கள். சுவற்றின் பக்கங் களில் சுற்றிலும் நின்று கொண்டிருக்கிறவர்களே, உங்களு டைய கால்கள் வலியெடுத்தால், நீங்கள் நகர்ந்து சற்று வெளியே செல்ல விரும்பினால், நீங்கள் அப்படி செய்து கொள்ளலாம். இப்பொழுது, சிறு பிள்ளைகள் தங்களுடைய அறைகளுக்கு போக விரும்புவார்களோ என்று நினைக்கிறேன். அல்லது அவர்களை ஏற்கெனவே போகவிட்டாயிற்றா? மேய்ப்பர் கூறுவ தென்னவெனில், அறைகளிலெல்லாம் கூட்டமானது நிரம்பி வழிகிறபடியால் இன்றைக்கு பிள்ளைகளுக்கு ஞாயிறு நடத்த இயலாது என்று தெரிவிக்கிறார். சிறு பிள்ளைகளே! இன்று காலையில் நாம் ஒரு மகத்தானதும் மிகப் பெரியதுமான ஒரு செய்தியை பிரசங்கிக்க ஆரம்பிக்கப்போகிறோம். அது இங்கேயிருக்கிற உங்களது தகப்பனுக்கும், தாய்க்கும், உங்களுடைய அன்பானவர்களுக்கும், ஏன் சிறு பிள்ளைகளாகிய உங்களுக்கும் கூட மிகவும் மகத்தானதாக இருக்கப்போகிறது; எனவே நீங்கள் எங்களோடு இப்பொழுது ஒத்துழைப்பீர்களானால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். எனவே நாம் அதை மிகவும் பயபக்தி யோடு அணுகுவோமாக. 19இன்று காலையில் கர்த்தருக்கு சித்தமானால், நாம் தானே “தானியேலின் எழுபது வாரங்கள்'' என்ற பொருளை எடுத்துக் கொள்ளப் போகிறோம். இன்று காலையில், சிறையிருப்பில் இருந்த தானியேலைப் பற்றியும், காபிரியேல் எதிர்காலத்தைப் பற்றி அவனுக்கு அறிவுறுத்துவற்காக அவனிடத்தில் பறந்து வந்ததைப் பற்றியும் பேசப்போகிறோம். தானியேல் ஜெபத்தில் இருக்கையில் தூதனாகிய காபிரியேல் அவனை அறிவுறுத்து வதற்காக அவனிடம் வருகிறான். இன்றிரவில் 'காபிரியேலின் விஜயத்தின் ஆறுவிதமான நோக்கம்' என்ற பொருளின் பேரில் பேச விரும்புகிறேன். ஆறு வெவ்வேறு விதமான விஷயங்களை நோக்கமாகக்கொண்டு காபிரியேல் விஜயம் செய்ததைப் பற்றி இன்றிரவில் செய்தி கொண்டு வரப்பட இருக்கிறது. கர்த்தருக்கு சித்தமானால், அடுத்து ஞாயிற்றுக் கிழமை யன்று, ஏழு சபைக் காலங்களில் நோக்கத்தைக் குறித்தும், அவற் றின் காலத்தைக் குறித்தும், எந்த வேளையில் அவைகள் இருக் கின்றன என்பதைப் பற்றியும், நாம் இன்று எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியும் பேச வேண்டுமென விரும்புகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் அது அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் இருக்கும். 20இதன் காரணம் என்னவெனில்... நான் கடைசியாகக் கொடுத்த சில செய்திகளின் பேரில் உள்ள சில சிறு குறிப்புகளை என்னோடு கொண்டு வந்துள்ளேன். இன்று காலையில் நான் இச்செய்தியோடு இசைந்ததாய் இருக்கிற சிலவற்றை பார்க்கப் போகிறேன். ஏனெனில் இச்செய்தியானது ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு உலக முழுவதிலும் உள்ள அநேக நாடுகளுக்கு போகப் போகிறது. அப்பொழுது யாராவது முதன் முதலாக இச்செய்தியை கேட்கும் பொழுது, நான் முந்தைய சில காரியங் களைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினவற்றை, அது என்னவென்று புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்; எனவே இக்காரணத் தினால் தான் நான் இச்செய்தியோடு ஒன்றோடொன்று இசைந்த காரியங்களை முதலில் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த சில மாதங்களாக நாம் வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தின் பேரில் - “இயேசு கிறிஸ்துவைப் பற்றிய வெளிப் படுத்துதல்'' புஸ்தகத்தின் பேரில் - வேத ஆராய்ச்சிக் கூட்டங் களை பெற்றிருந்தோம். நாம் சபைக் காலங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தோம். வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகத்தில் முதல் மூன்று அதிகாரங்கள் சபைக் காலங்களைப் பற்றியதாகும். அதன் பிறகு, யோவான் 4ம் 5ம் அதிகாரங்களில் உன்னதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, இதற்குப் பிறகு சம்பவிக்க வேண்டிய வைகளைப் பற்றி காண்பிக்கப்பட்டான். 6ம் அதிகாரத்தில் அவன் மீண்டும் பூமியில் கீழே இறக்கிவிடப்படுகிறான். எதற்கென் றால், 6ம் அதிகாரம் 1ம் வசனம் துவக்கி 19ம் அதிகாரம் 21ம் வசனம் முடிய உள்ளவற்றில் சம்பவிக்கப் போகிறவைகளை காணும்படியாகத்தான். இப்பகுதிகளில் முத்திரைகள், வாதை கள், ஆபத்துக்கள் வெட்டுக்கிளிகள், சூரியனில் நிற்கிற ஸ்திரீ யானவள், சிவப்பான வலுசர்ப்பம் 1,44,000 பேர்கள் முத்திரை யிடப்பட்டு தீருதல் ஆகிய அனைத்துக் காரியங்களும் வரு கின்றன. 21இவ்வாரமுழுவதும், கடுமையான, வேதத்தைப் படித்து ஆராயுதல் உண்டாயிருந்தது. நேற்றைய தினத்தில், நான் படித்து கொண்டேயிருந்தபடியினால் எனது அறையைவிட்டு கொஞ்சம் கூட வெளியே வரவில்லை. இச்சபையின் ஆதிகாலத்தி லிருந்து இருக்கிறவர்கள் இங்கேயுண்டு, அவர்களுக்கு இதைப் பற்றி நான் முன்பு போதித்துள்ளேன். இது எப்படியிருந்த தெனில், இங்கே தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றிய தாகும் என்று கூறி சிலவற்றை போதித்துள்ளேன், ஆனால் அதை விவரிக்க விளக்குவதற்காக நான் தீவிரமாக முயலவில்லை. ஆனால் இத்தடவையோ, மக்களுக்கு தேவனுடைய கிருபை யினால் அதைச் சரியான முறையில் போதிப்பதற்கென தேவனி டத்தில் அதற்குரிய கிருபையை கேட்கும்படி என்மேல் பொறுப்பை சுமத்திக் கொண்டுள்ளேன். இங்கே நான் ஒன்று கூட அறியாதிருக்கிற விஷயங்களைக் காண்கிறேன். பின்பு, நான் .... 22டாக்டர் லார்கின் எழுதிய புஸ்தகம், டாக்டர் ஸ்மித்தின் புஸ்தகம், ஸ்கோஃபீல்ட்-இன் குறிப்புகள், பல்வேறு மனிதர் கள் எழுதிய வியாக்கியானங்கள் ஆகியவற்றை நான் படித்துக் கொண்டிருந்தேன். ஆயினும் அவர்களுடைய கருத்துக்களை எல்லாம் ஒன்று திரட்டி சரியாக உருவகப்படுத்த என்னால் இயல வில்லை. எனவே நான் இவ்வாரத்தில்... கென்டக்கியிலுள்ள சில நூலகங்களுக்கு விஜயம் செய்து, சில காலண்டர்கள், காலங் கள் ஆகியவைகளைப் பற்றிய விளக்கம் பழங்காலத்திய வான் கோளங்களின் ஆய்வியல் புஸ்தகங்களையும், மற்றும் நூலகங்களிலுள்ள சம்பந்தப்பட்ட தொன்மை வாய்ந்த புஸ்தகங்களையும் எடுத்து படித்து ஆராய்ந்தேன். இவ்வாறு என்னால் இயன்ற அளவு சிறிதளவாவது செய்து, என் முழு நம்பிக்கையும் இயேசு கிறிஸ்துவின் பேரில் பயபக்தியுடன் வைத்துள்ளேன். எதற்கென்றால், அவர் எனக்கு அதைக் குறித்து வெளிப்படுத்தித் தரும்படியாகத்தான். ஏனெனில், எனக்கு இது தெரியும், எனக்கு அது தெரியும் என்று நான் கூறிட விரும்பவில்லை. அவர் என் இருதயத்தை அறிவார். நான் கூறுவதை அவர் கேட்கிறார். அவரு டைய ஜனங்களை நான் பிரகாசிப்பிக்கச் செய்ய வேண்டு மென்றே நான் விரும்புகிறேன். ஆகையால், அவர் எனக்கு அதைத் தருவார் என்றே நான் விசுவாசிக்கிறேன். இன்னமும் அது என்னவென்று எனக்குத் தெரியாது; ஆனால் அடுத்த ஞாயிற் றுக்கிழமைக்காக நான் அவரையே நம்பிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் எழுபது வாரங்களை அறிந்து கொண்டு அவற்றை சரியாக பொருத்துவதான மிகப் பெரிய காரியமாக அது இருக்கப் போகிறது. ஒவ்வொன்றும் வெவ்வேறு ஸ்தானம் உடையதாய் இருக் கிறது. நீங்கள் அதை ஒன்றாக வைத்துப் பார்ப்பீர்களானால் அது பிழையாகத் தான் வெளிவரும்; அவைகள் சரியான கருத்தை, முடிவை தெரிவிக்காது. எனவே அதை பிழையின்றி கொடுக்க என்னால் இயலாது போகலாம். ஆனால் நான் அதற்காக கர்த்தரையே நம்பியிருக்கப்போகிறேன். 23ஒரு சமயம் சாலொமோன் தேவனாகிய கர்த்தரிடத்தில் தனக்கு ஞானத்தைத் தரும்படி ஜெபித்தது என் நினைவுக்கு வருகிறது. அவன் தனக்காக அதை கேட்கவில்லை. அவன் தனக்கு நீடித்த ஆயுளையோ, ஐசுவரியத்தையோ கேட்காமல், தேவனுடைய ஜனங்களை எவ்வாறு நியாயந்தீர்ப்பது என்று அறியத்தக்க ஞானத்தைத் தரும்படி ஞானத்தைக் கேட்டான். தேவன் அந்த ஜெபத்தை கனம் பண்ணி, சாலொமோன் கேட்ட ஞானத்தை அவனுக்குத் தந்தார். ஏனெனில் அது அவருடைய ஜனங்களுக் காக உள்ளதாகும். ஆகவே தான் இந்த எழுபது வாரங்கள் என்ன என்பதை எனக்குத் தெரியப்படுத்துமாறு தேவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், அது நாம் வாழ்கிற இக்காலத் திற்குரிய சரியான காலண்டராக இருக்கிறது எனவே நான் அதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் அதைப் பற்றி அறிய வேண்டுமென எனக் காக விரும்பவில்லை. அப்படியென்றால், ''நான் அறிய விரும்ப வில்லை'' என்ற அர்த்தத்தில் நான் அப்படி சொல்லவில்லை. நான் அறிய விரும்புகிறேன். ஏனெனில், நாம் எந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நான் அறிய விரும்புகிறேன். என்ன வேளையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய விரும்புகிறேன். அது கொடுக்கப்பட்டுள்ளது என்று நான் அறிவேன். 24வெகுகாலத்திற்கு முன்பு வெவ்றுே நபர்கள் அதைப் பற்றி அது இன்னின்னவாறு இருக்கும் என்று கணித்துள்ளனர். ஒருவர் எழுதியதை நான் படித்துக்கொண்டிருந்தேன். அவர் எழுபது வாரங்களும் 1919 ஆண்டிலேயே முற்றுப் பெறுவதாகக் கூறி யுள்ளார். நல்லது, அது அவ்வாறு அல்ல. எழுபது வாரங்களின் முடிவில் எல்லாம் முடிவு பெறுகிறது. எனவே நாம் சத்தியத்தை அறியவே விரும்புகிறோம். சத்தியத்தை கொடுக்குபடியாக நான் தேவனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். 25இப்பொழுது இதன் பின்னணியைப் பார்ப்பதற்காக இதற்கு முன்புள்ளவற்றை நான் திரும்பவும் கூறப் போகிறேன். எனவே, மக்கள் புரிந்துகொள்ளும்படியாக, 4ம், 5ம் அதிகாரங் களின் பேரில் நான் எழுதி வைத்துள்ள சில குறிப்புகளை நான் கொண்டு வந்துள்ளேன். முதலாவதாக நாம் இதை எடுத்துக்கொள்ளும் முன்னர், இதனோடு இணைந்து செல்லுகிற காரியத்தை எடுத்துப் பார்ப் போம். அதினால் நீங்கள் 4ம் அதிகாத்திலிருந்து புரிந்து கொள்ளுவீர்கள். 3ம் அதிகாரம் லவோதிக்கேயா சபையின் காலம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். லவோதிக்கேயா முடிவில் சபையானதுமேலே எடுத்துக் கொள்ளப்படுகிறது. 26அதைப் பற்றி நான் என் மனைவியிடம் விளக்கிட முயன்று கொண்டிருந்தேன். என் மகள் பெக்கியும் உடனிருந்தாள். எங்களுக்கு கிடைக்க முடிந்த அளவு வெவ்வேறு வகையான அகராதிகளும் விஷயங்களும் எங்களோடிருந்தன. அவைகள் உரிய பதிலை அளிக்கவில்லை. வேதாகம அகராதியும் என்னிடத்திலுண்டு. பழைய கிரேக்க மொழி அகாரதியும் என்னிடத்தில் இருந்தது. வெப்ஸ்டர்ஸ் அகராதியும் இன்னும் அநேக புஸ்த கங்களும் இருந்தன. நவீன அகராதிகளும் இருந்தன. அவைகள் ஒன்றும் எவ்விதத்திலும் உரிய வார்த்தைகளையோ அல்லது உரிய பதிலையோ அளிக்க இயலவில்லை. என் மனைவி என்னிடம் “நமது ஜனங்கள் ஏழைகளும் அவர்களில் அநேகர் நம்மைப்போல் கல்வியறிவு இல்லாதவர் களுமாய் இருக்கிற சூழ்நிலையில் அவ்விதமானதொரு விஷ யத்தை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று எங்ஙனம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள். “தேவனே தக்க பதிலை அளிப்பார்'' என்று நான் பதிலளித் தேன். அது எவ்வளவு சிக்கலானதாக இருந்தபோதிலும் தேவன் அதை உடைத்து எளிதாக்கிக் கொடுக்க முடியும். ஏனெனில் நாம் அந்த ஜனங்களின் ஒரு பாகமாக இருக்கிறோம். அவர்கள் அந்த நாளுக்காகவும் வேளைக்காகவும் ஏங்கித்தவித்து, ஜெபித் துக்கொண்டிருக்கிறார்களே, மேலும் நமது கண்கள் பரலோ கத்தை நோக்கி பார்த்த வண்ணம் இருந்து கொண்டி ருக்க, நாம் அவரது வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் நமக்கு அதை காண்பிப்பார் என்று நிச்சயமுள்ள வனாக இருக்கிறேன். அந்த நாளையாவது, அந்த நாழிகையை யாவது பற்றி நமக்குத் தெரிவிக்கப்படமாட்டாது, ஏனெனில் ஒரு மனிதனும் அதை அறியமாட்டான். ஆனால் அது நமக்கு கிடைக்குமென்றால், அந்த வாரத்தில் உள்ள எந்த நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அது நிச்சயமாக நமக்குத் தெரியபடுத்தும். 27இப்பொழுது, சபைக்காலங்கள் முடிவுற்ற பிறகு, உட னேயே 4ம் அதிகாரதில் யோவான் மேலே எடுத்துக் கொள்ளப் படுகிறான். மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட யோவான், அதற்கு முன்பாக சபைக்காலங்கள் முழுவதையும் கண்டான். அந்த இடத்தில் தான் நான் ஒரு வினாடி நிறுத்திவிட்டு புறஜாதிகளின் காலத்தில் ஏதோ ஒரு மகத்தான, பெரிய, வல்லமையான காரியம் நடைபெற வேண்டும் என்று அநேகர் எதிர்பார்த்திருக் கிறார்களே, அவர்கள் தவறாயிருக்கிறார்கள் என்று கூறிட நான் விரும்புகிறேன். சபைக் காலங்களைப் பற்றியும், புறஜாதிகளின் ஆளுகையில் நடைபெறப்போகிற அனைத்துக் காரியங்களைப் பற்றி உள்ள விஷயங்களும், வெயிப்படுத்தின விசேஷம் 1முதல் 3முடிய உள்ள அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு சபையானது மகிமையில் எடுக்கப்படுகிறது. அதன்பிறகு 19ம் அதிகாரம் முடிய உள்ள காரியங்களெல்லாம் யூத இனத் திற்கு நேரிடுகிற காரியங்களாகும். சபையானது உன்னதத்திற்கு எடுக்கப்பட்ட பிறகு உள்ளதாகும். இவையெல்லாம் அப் பொழுது மகா உபத்திரவ காலமாகும், அப்பொழுது, புறஜாதிகள் அவர்கள் வெட்டப்படுவதைக் தவிர வேறு ஒன்றும் நடைபெறப் போவதில்லை. எனவே நாம் அவைகளை எடுத்துக் கொண்டு பார்ப்போமாக. ஆனால் சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரத்தின் கடைசி வசனத்திலேயே, கடைசி சபைக் கால மாகிய லவோதிக்கேயா சபைக் காலம் முடிவுற்றவுடனேயே, எடுத்துக்கொள்ளப்பட்டு விடுகிறது. 28நாம் ஒவ்வொரு சபைக் காலத்தையும் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வேளையையும், நடைபெற்ற ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி பார்த்து, ஒவ்வொரு சபைக் காலத்து தூதனையும் பற்றிப் பார்த்து, அவர்களின் சுபாவத்தையும் கண்டறிந்து, அவர் கள் என்ன செய்தார்கள் என்பதையும் குறித்து அறிந்து கொண்டு, யாவற்றையும் வரலாற்றின் வாயிலாகவும் சரி பார்த்து கடைசி சபைக் காலம் வரைக்கும் இவ்வாறு பார்த்துக் கொண்டே வந்தோம். நாம் இவ்வாறு இவை யாவற்றையும் குறித்து படித்து முடிந்த போது, பரிசுத்த ஆவியானவர் உள்ளே வந்து பக்கச் சுவற்றில் அதே காரியத்தைப் பற்றிய ஒரு வட்டத்தை வரைந்து நாம் வரைந்ததைப் போல அதே விதமாக வரைப்படத்தையும் அவர் வரைந்து காட்டி, நம் யாவருக்கும் தம்மை வெளிப் படுத்திக்காட்டினார். இப்பொழுது இதை நாம் எடுத்துக்கொண்டிருக்கையில், இதன் முடிவிலும் கூட, அவர் மகத்தானதொரு காரியத்தோடு வந்து, மீண்டும் நமக்கு நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை காண்பிப்பார் என்று நான் நம்புகிறேன். 29ஜனாதிபதி கென்னடி அவர்களின் பேச்சை, அவரது மதிப் புரைகளை உங்களில் எத்தனை பேர்கள் கேட்டீர்கள்? ஜனவரி 1ம் தேதி வாக்கில் அமெரிக்கா ஐக்கிய நாடுகளும், ருஷியா ஆகிய இரு நாடுகளுமே எரிமலை சாம்பலாக ஆகிவிடும் என்ற அவரு டைய அனுமானமான முன்னறிவிப்பை கேட்டிருக்கிறீர்கள்? அது தான் நமக்குத் தேவையாயிருக்கிறது. நாம் நினைப்பதைவிட நேரம் அதிகம் ஆகிவிட்டது, பார்த்தீர்களா? இந்த பயங்கரமான காரியம் நடக்கப்போகிறது என்று மனிதனும் கூட முன்னு ரைக்கும் காரியத்திற்கு நாம் சமீபமாக இருப்போமென்றால், நாம் சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் நல்லது, நம்மில் நாம் யாவையும் சரி செய்து கொண்டு எல்லாவிதமான அறிக்கைகளும் செய்து எல்லாம் ஆயத்தமாக இருக்கும்படி செய்வோம்; ஏனெனில் எந்த வேளையில் நமது கர்த்தர் நம்மை அழைக்கப் போகிறார் என்பதை நாம் அறியோம். மேலே ஏறி வா'' என்று அவர் நமக்கு அந்த அழைப்பைக் கொடுக்கையில் போவதற்கு நாம் ஆயத்தமாக இருக்கக்கடவோம். நீங்கள் நினையாத நாழிகையில் அது வரப்போகிறது. 30மகத்தான பெந்தெகொஸ்தே எழுப்புதலானது இப் பொழுது முடிவடைந்து கொண்டேயிருக்கிறது. அதை நாம் எங்கணும் காண்கிறோம். அந்த கடைசியான மகத்தான அசைவைக் காண்கிறோம். செய்தியானது சென்று விட்டது. எல்லாமே இப்பொழுது ஆயத்தமாயிருந்து, காத்துக் கொண் டிருக்கிறது. சபையானது ஏற்கெனவே முத்திரையிடப்பட்டாகி விட்டது. துன்மார்க்கர் இன்னும் துன்மார்க்கராகிக் கொண்டே யிருக்கிறார்கள். சபைகள் வர வர மிகவும் சடங்காச்சாரமாக ஆகிக் கொண்டேயிருக்கின்றன. பரிசுத்தவான்கள் இன்னும் தேவனிடம் நெருங்கி வந்து கொண்டேயிருக்கிறார்கள். சிறிய குழுக்களில் ஆவியின் வரங்கள் பலுகிப் பெருகத் துவங்கி விட்டன. நாம் கடைசி வேளையில் இருக்கிறோம். ஓ, சபையில் நாம் வழக்கமாகப் பாடும் அந்தப் பாடலை நான் நேசிக்கிறேன். துதிக்கப்படும் நமது கர்த்தர் வந்து காத்து நிற்கும் மணவாட்டியை எடுத்துச் செல்லும் ஆயிரமாண்டு அரசாட்சியின் சந்தோஷ நாளுக்காக நான் எதிர்பார்க்கிறேன். ஓ, எனது இதயம் அந்த இனிமையான விடுதலை அளிக்கும் அந்நாளுக்காக கதறுகிறது, தாகமாயிருக்கிறது அப்போது நமது இரட்சகர் பூமிக்குத் திரும்பி வந்திடுவாரே. அந்த நாழிக்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். 31இப்பொழுது நாம் நமது முந்தைய பாடத்தில் 5ம் அதிகாரம் 5ம் வசனத்தில் இனத்தான் மீட்பரைப் பற்றி பார்த்தோம். அவர் தானே கிறிஸ்துவாயிருக்கிறார். முன்னடை யாளமாயிருக்கிற ரூத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தோம். ரூத் தீர்மானித்தல், ரூத் பணிவிடை செய்தல், ரூத் இளைப்பாறிக் கொண்டிருத்தல். தீர்மானித்தல் தான் நீதிமானாகுதல் ஆகும். பணிவிடை செய்தல் தான் அவள் தன்னை ஆயத்தமாகிக் கொண்டதாகும்; அது பரிசுத்தமாகுதலை காண்பிக்கிறது; இளைப்பாறுதல், கலியாண விருந்து வரையிலும் பரிசுத்த ஆவியில் இளைப்பாறிக் கொண்டிருத்தலைக் காண்பிக்கிறது எவ்வளவு அழகாக இருக்கிறது! சபையானது மார்டின் லூத்தர் மூலமாக நீதிமானாகு தலுக்குள் வந்தது; ஜான் வெஸ்லியின் மூலமாக பரிசுத்தமாகு தலுக்குள் வந்தது; பெந்தெகோஸ்தேயின் மூலமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்குள் வந்தது, இப்பொழுது அவள் தன்னுடைய கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டு ஆவியில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறாள். பூரணமானதாக இருக்கிறது. நமது இனத்தான் மீட்பர், நியாயாதிபதியாக ஆவதற்காக சிங்கமாக ஆகப்போகையில், மூப்பர்கள் அவரை ஒரு ஆட்டுக் குட்டி என அழைத்தது சரியே, ஏழு முத்திரைகளால் முத்திரை யிடப்பட்ட புஸ்தகத்தை உடையவராக அவர் ஒரு ஆட்டுக் குட்டியாக இருக்கிறார். அப்புஸ்தகம் கையிலெடுக்கப்பட்ட பொழுது மத்தியஸ்த ஊழியமானது முடிவுற்றது. 32மூன்றாம் அதிகாரத்தில் சபையானது எடுத்துக்கொள்ளப் பட்டு விடுகிறது. ஆனால் இப்பொழுது மீட்பானது வெளிப் படுத்தப்பட வேண்டியுள்ளது. எங்ஙனம் சபையானது மீட்கப் பட்டது என்கிற விஷயம் வெளிப்படுத்தப்படுகிறது. சபை யானது போய்விடுகிறது, பாருங்கள். எனவே இப்பொழுது 5ம் அதிகாரத்தில், அவர், தாம் அதை எவ்வாறு செய்தார் என்பதை காண்பிக்கிறார், என்ன நடைபெற்றது, எவ்வாறு தாம் தமது சபையை முத்திரையிட்டார் என்பதையும் அவரது நாமத்தைப் பற்றிய வெளிப்பாடு, அவரது நாமத்தை உபயோகித்து தண்ணீர் ஞானஸ்நானம், நித்திய ஜீவனுண்டு, நித்திய நரகம் இல்லை, சர்ப்பத்தின் வித்து, நித்திய பாதுகாப்பு ஆகிய இந்த அனைத்தும் மகத்தான உபதேசங்களையும், சபை முன்குறிக்கப்படுதல் ஆகியவைகளையும் சபைக்கு வெளிப்படுத்தப்பட்டதை, தாம் அவைகளை எவ்வாறு செய்தார் என்பதை காண்பித்துக் கொண்டிருக்கிறார். 33மூலமுதலான உரிமைக்காரனானவரிடத்திலிருந்து நமது இனத்தான் மீட்பருக்கு ஏழு முத்திரைகளால் முத்திரையிடப் பட்ட ஒரு மீட்பின் புஸ்தகமானது கையளிக்கப்பட்டது. ஆமென்! யார் அந்த மூலமுதலான உரிமைக்காரனானவர்? தேவன்தாமே 'ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.'' (வெளி5:7). யார் அந்த ஆட்டுக்குட்டியானவர்? மீட்பர், நமது இனத்தான் மீட்பர் - சபைக்கு நெருங்கிய இனத்தானவர். அவர் வந்து இஸ்ரவேலை மீட்டுக்கொண்டார். அதைக் குறித்து இன்று காலையில் நாம் பார்க்கப் போகிறோம். இஸ்ரவேல் மீட்கப்பட்டது. ஆனால் அது அவர் களுக்கு சம்பந்தமுள்ளதாக ஆகவில்லை. ஏனெனில் அவர்கள் அவரை புறக்கணித்தனர். ஆனால் சபையோ தங்களது மீட்பை ஏற்றுக் கொண்டது. அவரே நமது நெருங்கின இனத்தானாகிய மீட்பராய் இருக்கிறார். போவாஸ் புறஜாதியாளாகிய , அந்நிய தேசத்தாளாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத்தை மீட்க வேண்டு மெனில் நகோமியையும் மீட்க வேண்டியதாயிருந்தது. அதைப் போலவே கிறிஸ்துவும் இஸ்ரவேலை மீட்டுக்கொண்டார். அவர் அதை அவர்களுக்கு அளித்த போதிலும் அவர் புறக்கணிக்கப் பட்டார். 34உள்நாட்டுப் போரின்போது, நல்லவனாக ஒரு மனிதன் இருந்தபோது, அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டும். அவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்பதைப் பற்றி சிற்சில சமயங் களில் நான் குறிப்பிடுவதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக் கிறீர்களா? அவன் நிரபராதியான மனிதன் : அவர்கள் அவனை குற்றமுள்ளவனாகத் தீர்த்தார்கள். யுத்தத்தின் போது சண்டை யிடாமல் அவன் ஓடிப்போய்விட்டான் என்ற வகையில் அவன் குற்றமுள்ளவனாகக் காணப்பட்டான். அவர்கள் அவனை குற்றவாளியாகத் தீர்த்து அவனை சுட்டுக்கொல்ல இருந்தார்கள். ஒரு மனிதன் ஜனாதிபதி லிங்கன் அவர்களிடத்தில் ஓடிச்சென்று, “லிங்கன் அவர்களே, இந்த மனிதன் ஒரு கிறிஸ்தவன். அவ்வாலிபன் பயந்து போய் விட்டான். அவனது ஜனங்களை நான் அறிவேன், அவன் பயந்து போய்விட்டான்: அவனுக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. அவன் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் ஓடிப்போய்விட்டான். திரு. லிங்கன் அவர்களே, அது உம்முடைய கரங்களில் தான் உள்ளது. அவனை நீர்தான் மன்னிக்க முடியும்” என்று கூறினான். திரு லிங்கன் அவர்கள் ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து, “இன்னாரை மன்னிக் கிறேன் - ஆபிரகாம் லிங்கன்'' என்று எழுதி கையொப்பமிட்டுக் கொடுத்தார். அம்மனிதன் சிறைச்சாலைக்கு விரைவாகத் திரும்பி வந்து, “உம்முடைய மன்னிப்பை வாங்கி வந்திருக்கிறேன். இதோ அது இங்கே இருக்கிறது'' என்று கூறினான். 35அதற்கு அம்மனிதன், ''நான் அதை நோக்கிப் பார்க்கவே மறுக்கிறேன். அவ்விதமான உத்தரவில் ஒரு பெரிய முத்திரை உண்டாயிருக்குமே. அதுதான் எல்லாமாயிருக்கிறது. நீர் என்னை ஒரு கேலிக்குரியவனாக ஆக்கவே முயற்சிக்கிறீர். அதில் கையொப்பமிட்டிருப்பது ஆபிரகாம் லிங்கன் அல்ல. எவர் வேண்டுமானாலும் தன் பெயரை கையொப்பமிட்டுக் கொள்ள லாம். அது அவரிடத்திலிருந்து வருமென்றால் அவரது முத்தி ரையால் அது தஸ்தாவேஜாக ஆக்கப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டான். மன்னிப்பை வாங்கி வந்த மனிதன் அவனிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும், சிறையில் இருந்த மனிதன் தன்னை அவன் விளையாட்டுத் தனமாக ஏமாற்றப் பார்க்கிறதாக நினைத்து, அங்கிருந்து கடந்து சென்றுவிட்டான். அடுத்த நாள் காலையில் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவன் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, சமஷ்டி நீதிமன்றம் விசாரணை நடத்தி யது. ஏனெனில் அம்மனிதன் சுடப்படுவதற்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன்பாக ஆபிரகாம் லிங்கன் இம்மனிதன் மன்னிக்கப்பட்டான் என்று எழுதி கையொப்பமிட்டுள்ளார். அதற்குப் பிறகும் எவ்வாறாயினும் அரசாங்கம் அவனை சுட்டுக் கொன்றுவிட்டது. பிறகு என்ன? அப்பொழுது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சமஷ்டி நீதிமன்றம், “ஒரு மன்னிப்பானது, ஒரு மன்னிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலொழிய அது மன்னிப்பாக ஆக மாட்டாது'' என்ற தீர்மானத்திற்கு வந்து அவ்வாறே தீர்ப்பு வழங்கியது. 36கல்வாரியில் இயேசுவானவர் இஸ்ரவேலை மீட்டுக் கொண் டார். ஆனால், அவர்களுக்கு அது ஒரு மன்னிப்பாக இருக்க வில்லை, ஏனெனில் அவர்கள் அதை ஒரு மன்னிப்பாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் 70 வாரங்களைப் பற்றிய நமது இந்தப் பாடத்தில் அவர்கள் திரும்பி வந்து தங்களுக்கென உள்ள மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று நாம் காண்கிறோம். ஆனால் அவர் சபையை மீட்டுக்கொண்டார். பிறகு நாம் மன்னிக்கப்பட்டோம். ஏனெனில் நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை நமது மன்னிப்பாக ஏற்றுக்கொண்டுவிட்டோம். 37இப்பொழுது, அவரே நமது நெருங்கின இனத்தான் மீட்ப ராயிருந்தார் என்றும், அவர் மூலமுதலான உரிமைக்காரனான வரின் கரத்திலிருந்து அந்தப் புஸ்தகத்தை எடுத்துக் கொண்டார் என்றும் காண்கிறோம். அப்புஸ்தகமானது, மீட்புக்கான உடைமையுரிமைப் பத்திரமாக இருக்கிறது. அதைக் குறித்து நாம் பார்த்தோம். அப்பாடத்தை நீங்கள் ஞாபகத்தில் கொண் டுள்ளீர்களா? அது மீட்புக்கான உடைமையுரிமைப் பத்திரமாக இருக்கிறது. மொத்த விஷயங்களையும் சுருக்கி வரைந்து தந்திருக் கிற ஒரு பத்திரமாக இருக்கிறது. அதில் மரணத்தை நீக்குவதற் காக ஜீவன் கொடுக்கப்படவேண்டும் என தேவன் விதித்திருந் தார். அப்பொழுது ஏதேன் தோட்டத்தினில், நீதிமானாகிய இயேசுவானவர் மரித்து, ஒரு உடைமை உரிமைச் சாசனத்தை எடுத்துக்கொண்டார். அவரால் முத்திரைகளை உடைத்து, அவை களில் என்ன உள்ளன என்பதைப் பற்றி வெளிப்படுத்தவும், அவருடைய சொந்தமான சுதந்தரத்தை தன் - ஜனங்களுக்கு கொடுக்கவும் இயன்றது. அதைச் செய்ததின் மூலமாக அவர் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொண்டார். தமது சொந்த ஜீவனை கல்வாரியில் ஈந்து, அதை நம் மத்தியில் பரிசுத்த ஆவியினால் பகிர்ந்தளித்தார். ஆமென்! அவர் இவ்வாறு செய்ததன் மூலமாக உள்ள நேசத்தை, அது எத்தகையது என்பதைப் பற்றி ஒரு மனிதனும் ஒரு போதும் கிரகித்துக்கொள்ளவே இயலாது. தோட்டத்தில் ஏற்பட்ட விழுகையினால் சுதந்தரத்தை தன் கைவசப்படுத்திக்கொண்ட சாத்தானானவன் கட்டி அக்கினி கடலில் தள்ளப்படுகிறான். அவனது நாட்கள் முடிவுற்றன. 38சுவிசேஷத்தில் இயேசுவுக்குள்ள நான்கு பட்டங்களை நாம் பார்த்தோம். தாவீதின் குமாரனாக அவர் சிங்காசனத்திற்கு சுதந்திரவாளியாக ஆனார். ஆபிரகாமின் குமாரன் என்ற முறை யில் ராஜரீக உரிமைக்கு சுதந்திரவாளியாக அவர் ஆனார். மனுஷக் குமாரன் என்ற நிலையில், பூமிக்குரிய சுதந்திரவாளியாக ஆனார். தேவனுடைய குமாரன் என்ற நிலையில், சகலத்துக்கும் சுதந்திர வாளியானார். ராஜரீக உரிமைக்காரனாவர். பழைய ஏற்பாட்டில் சொத்தானது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வைத்துக்கொள்ளப்பட முடியாது. ஐம்பது ஆண்டு களுக்கு மேல் சொத்தின் உரிமைக்காரனானவன் வசம் சொத்து திரும்ப அளிக்கப்படாமல் இருக்க முடியாது. நாற்பதாவது நாளிலே அவர் கிரயத்தைச் செலுத்தினார். ஐம்பதாவது நாளிலே, சபைக்குச் சொந்தமானதும், ஏதேன் தோட்டத்தினில் இழந்து போகப்பட்டதுமான மீட்பும், வல்லமையும் திரும்ப மீட்கப் பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாக ஐம்பதாவது நாளிலே நமக்கு அனுப்பட்டது. 39பிறகு நாம் புஸ்தகச் சுருளை பற்றி எடுத்துக் கொண்டோம். எவ்வாறு புஸ்தக சுருளானது அவர் கையில் அளிக்கப்பட்டது என்று பார்த்தோம். எரேமியா32:6-இல் எரேமியாவிடம் அவனது பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேலின் மூலமாக புஸ்தகச் சுருளானது ஒப்படைக்கப்பட்டது என்று பார்த்தோம். அனாமெயேல் - அவர்கள் யாவரும் சிறையிருப்பில் போகவிருந் தார்கள். அப்பொழுது சில சுதந்தரத்தை விட்டுச் சென்றான். அதைப் பற்றிய பத்திரமானது ஒரு மண்பாண்டத்திலே வைக்கப் பட்து. அச்சுருள் வைக்கப்பட்டவிதம், நமது இருதயத்தினுள் தேவனுடைய வல்லமையும் தேவனுடைய இரகசியங்களும் வைக்கப்படுவதைப் பற்றி எடுத்தியம்புகிறது. நம்முடைய மீட்புக்கான திட்டமானது அதேவிதமாக இம்மண்பாத்திரங் களிலே வைக்கப்பட்டன. இயேசுவின் நாமமும் வெளிப் படுத்துதலும்... 40இப்புஸ்தகமானது ஏழு முத்திரைகளால் முத்திரையிடப் பட்டிருந்தன என்பதைக் குறித்து நாம் கண்டோம். ஒவ்வொரு முத்திரையும் சுற்றிலும் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. வெளிப் படுத்துதலானது புறப்பட்டு வருகையில், அவர் முத்திரையை இழுத்து திறந்தபோது, அம்முத்திரை கூறியதை அவர் படித்தார். பிறகு புஸ்தகச்சுருளை விரித்து, அடுத்ததை திறந்தபொழுது, அடுத்த முத்திரை கூறியதை படித்தார். பிறகு அடுத்ததை இழுத்து வெளியே எடுத்து திறந்து போது, அடுத்து முத்திரை என்ன கூறியதோ அதைக் கண்டு அதன் வெளிப்படுத்துதல் என்னவென்று கூறினார். விரைவில் நாம் ஏழு முத்திரைகளைக் குறித்து காணப்போகிறோம். அவைகளில் இவ்வாறு தான் நடந்தது. ஒவ்வொரு முத்திரைகளும் அப்புஸ்தகத்திலிருந்து திறந்து கொடுக்கப்படும் பொழுது அங்கே என்ன நடைபெற்றது என்பதைக் காண்பித்துவிடும். மீட்பின் திட்டத்தில் ஐந்து ஏழுகள் உள்ளன என்று நாம் கண்டோம். ஐந்து என்ற எண்ணில் உள்ளது. அது அங்கே ஐந்து ஏழுகள் உள்ளன. ஏழு முத்திரைகள், ஏழு ஆவிகள், ஏழு தூதர்கள், ஏழு எக்காளங்கள், ஏழு சபைக் காலங்கள். ஆகவே, ஐந்து ஏழுகள் என்பது கிருபையைக் குறிக்கும் என்பதை நீங்கள் பாருங்கள். ஐந்து என்ற எண் கிருபையைக் குறிக்கும். ஏழு என்பது பரிபூரணத்தைக் குறிக்கும். ஆகவே அது மிகவும் சரியாக பரிபூரணத்தில் ஓடிச் கொண்டிருக்கிறது. 41அந்தந்தக் காலத்திற்குரிய மனிதனுக்கு, எந்த காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், அந்தக் காலத்திற்குரிய ஆவியைப் பற்றியும், அக்காலத்திற்குரிய சபை யைப் பற்றியும், தேவனுடைய வார்த்தையில் ஒவ்வொரு முத்தி ரையும் திறக்கப்படுகையில் வெளிப்படுத்தப்படுகிறது. வெளிப் படுத்தின விசேஷம் 10 அதிகாரத்தில், முடிவின் வேளையில், கடைசி முத்திரையானது உடைக்கப்படுகையில், அத்தூ தனானவர் நிலத்தின் மேல் ஒரு பாதத்தையும் சமுத்திரத்தின் மேல் ஒரு பாதத்தையும் வைத்தவராய், தன் கரங்களை வானத் திற்கு நேராக, உயர்த்தியிருக்க, அவர் தலை மேல் வானவில் சூழ்ந்திருக்கவும், சதாகாலமும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிட்டு, கடைசி முத்திரையிலே இனிக் காலம் செல்லாது என்று கூறுகிறதை நாம் காண்கிறோம். நாம் முத்திரைகளைப் படிக்கப் போகையில் அந்த முத்திரை எங்கே உள்ளது என்று பார்க்கிற வரையிலும் காத்திருங்கள். எழுபது வாரங்களை நீங்கள் பார்த்த பிறகு, முத்திரைகள் எங்கே உள்ளன என்பதைப் பாருங்கள். நேரமானது கடந்து விட்டது. மீட்பானது முடி வடைந்துவிட்டது - அவர் இப்பொழுது சிங்கமாகவும், நியாயா திபதியாகவும் உள்ளார். இன்று காலையில் அவர் உங்களுடைய இரட்சகராயிருக்கிறார். ஆனால் ஒரு நாளிலே அவர் உங்களு டைய நியாயாதிபதியாக இருப்பார். 425ம் அதிகாரத்திலிருந்து 8ம் வசனத்திலிருந்து 14ம் வசனம் முடிய உள்ள வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர் பரலோகத்திலும் பூலோகத்திலும் தொழுது கொள்ளப்பட வேண்டிய வராயிருக்கிறார் என்பதற்குரிய வேளையை வெளிப்படுத்து கிறது. ஏழு முத்திரைகளால் முத்திரையிடப்பட்ட புஸ்தகம் - பாத்திரரான ஆட்டுக்குட்டியானவர் - நெருங்கின இனத்தான் மீட்பர், 8ம் வசனத்திலிருந்து 14 வசனம் முடிய உள்ள வசனங் களில், தூதர் அவரை தொழுது கொண்டார்கள்; மூப்பர்கள் அவரை தொழுது கொண்டனர். ஜீவன்கள் அவரை தொழுது கொண்டன. “வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும் ஆட்டுக்குட்டியானவருக்கு ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்.'' (வெளி.5:13) என்று யோவான் சொல்லுகிற அளவுக்கு அவனும் அவரைத் தொழுது கொண்டான். இராஜாவாகிய ஆட்டுக்குட்டியானவர் தொழுது கொள்ளப்படும் வேளையாகும் அது. 43இப்பொழுது சபையானது போய்விட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்பொழுது தானியேலின் 9ம் அதிகாரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 முதல் 3முடிய உள்ள வசனங்களை வாசிப்போம். அதன்பிறகு நாம் 20ம் வசனம் முதல் 27ம் வசனம் முடிய எடுத்துக்கொள்ளப் போகிறோம். ஏனெனில் இது தானியேலின் ஜெபம் மாத்திரமே. வாரம் முழுவதிலும், இதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக, மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கும்படி நான் உங்களை கேட்டுக்கொள்ளுகிறேன். கல்தேயருடைய ராஜ்யத்தின் மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம் பண்ணுகிற முதலாம் வருஷத்திலே. தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறை வேறித்தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்து கொண்டேன். (இப்பொழுது அடுத்து வசனம்) நான் உபவாசம் பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங் களினாலும் தேட என் முகத்தை அவருக்கு நேராக்கி, என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம் பண்ணி, பாவ அறிக்கை செய்து... (இவ்வாறு வசனம் 20ம் வசனம் வருகிற வரையிலும் இது தொடர்ந்து இப்படியே போகிறது). தானி. 9:1-4 44நேரத்தை மிச்சப்படுத்தத்தக்கதாகவும், ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறபடியாலும், இப்பொழுது நாம் நேரே 20ம் வசனத்திற்குப் போய்விடுவோம். இப்படி நான் சொல்லி, ஜெபம் பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப் பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக் கொண்டிருந்தேன். அப்படி நான் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேக மாய்ப் பறந்து வந்து, அந்திப் பலியின் நேரமாகிய வேளை யிலே என்னைத் தொட்டான். அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடே பேசி : தானி யேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப் பட்டு வந்தேன். தானி 9:20-22 நாமெல்லாம் அங்கே இருந்திருக்கக் கூடுமென்றால் எப்படி யிருக்கும்! எவ்வாறு அவனை அவன் கண்டு கொண்டான்? ஜெபத்திலே மனிதனாகிய அந்த தூதனை, அவன் (தானியேல் - தமிழாக்கியோன்) அவனை (தூதனை தமிழாக்கியோன்) “மனிதன் என்று அழைத்தான் (தமிழ் வேதாகமத்தில் ”புருஷன்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கில வேதாகமத்தில் “Man” என்று உள்ளது - தமிழாக்கியோன்). நீ மிகவும் பிரியமானவன் ஆதலால், நீ வேண்டிக் கொள்ளத் தொடங்கின போதே கட்டளை வெளிப்பட்டது... அவன் (போவதற்காக வெளிப்பட்டது).... நான் அதை அறிவிக்க வந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக் கேட்டு தரிசனத்தை அறிந்துகொள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின் மேலும், உன் பரிசுத்த நகரத்தின் மேலும் ... (அல்லது உன் நகரம்).... எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. (அவனது வருகையின் ஆறுவிதமான காரணங்கள் அங்கே காணப்படு கின்றன இப்பொழுது கவனியுங்கள்). இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்... (இப்பொழுது கவனியுங்கள்)... எருசலே மைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப் படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்க மான காலங்களில் இப்படியாகும். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின்.... (வரப் போகிற பிரபு).... ஜனங்கள் அழித்துப் போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம் போல இருக்கும். முடிவு பரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி... (கவனியுங்கள்)... இப்வெழுபது வாரங் களில் ஒன்றில்)..... அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகி கிறவன் மேல் தீருமட்டும் சொரியும் என்றான். தானி 9:23-27 45இப்பொழுது அதில் நமக்கு அடுத்த மூன்று, நான்கு அல்லது ஐந்து கூட்டங்களுக்கான பாடமானது உள்ளது. எழுபது வாரங்களைப் பற்றி கர்த்தர் எதையெல்லாம் வெளிப்படுத்தப் போகிறாரோ அது. இப்பொழுது டாக் அவர்களை, எனது கரும்பலகையை இன்றிரவில் அங்கே வைக்கக்கூடுமா என்று கேட்கப் போகி றேன்; அதினால் நான் அதில் வரைந்து குறிப்பிட்டுக் காட்ட இயலும். இப்பொழுது நீங்கள் தவறவிடக் கூடாது என்று நான் விரும்புகிறேன். நீங்கள் என்னோடு சேர்ந்து இதைப் படிக்க வேண்டும். ஆழமாக அதைக் குறித்துப் படிக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் அதை தறவிட்டு விடுவீர்கள். நான் இவைகளைக் குறித்து கரும்பலகையில் வரைந்திட வேண்டு மென்று விரும்புகிறேன். நீங்கள் உங்களது பென்சில்களையும், பேப்பர்களையும் கொண்டு வந்து, இவைகளில் சம்மந்தப் பட்டுள்ள தேதிகளையும், இந்தக் காலங்களையும் சம்மந்தப்பட்ட அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சபையானது எடுக்கப்பட்ட பிறகு எழுபதாவது வாரமானது ஆரம்பிக்கிறது (இப்பொழுது இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்.)இப்பொழுது இதை புரிந்துகொண்டவர்கள் யாவரும் ''ஆமென்'' என்று சொல்லுங்கள். (சபையார் 'ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி) சபையானது எடுக்கப்பட்ட பிறகு. சபைய 46வெளிப்படுத்தின விசேஷம் 6:1 முதல் 19:21 முடிய உள்ள விஷயங்கள் எழுபதாவது வாரத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. எனவே நாம் இங்கே நிறுத்தி, மேற்கொண்டு போகிறதற்கு முன்பாக இதை விளக்கியாக வேண்டும். நாம் இங்கே நிறுத்தி, ஏன் இந்த எழுபதாம் வாரம் உள்ளது என்பதை விளக்கியாக வேண்டும். ஏனெனில் நீங்கள் அவ்வாறு செய்யா விடில் நீங்கள் முத்திரைகளை குறித்து காணத் தவறிவிடுவீர்கள். எக்காளங்களையும் தவற விட்டுவிடுவீர்கள். கோப கலசங்களைத் தவறவிட்டு வீடுவீர்கள். வாதைகளை தவறவிட்டுவிடுவீர்கள்; தவளைகளைப் போன்ற அசுத்த ஆவிகளையும் குறித்து காணத் தவறவிட்டுவிடுவீர்கள். அம்மூன்று ஆபத்துக்களைக் காணத் தவறிவிடுவீர்கள். சிவப்பான வலுசர்ப்பம், சூரியனில் உள்ள ஸ்திரீ ஆகியவைகளையும் காணத் தவறிவிடுவீர்கள். இந்த எழுப தாவது வாரத்திலேயே மேற்சொன்ன அனைத்துக் காரியங்களும் சம்பவிக்கிறவைகளாக இருக்கிறப்படியினால், அதை நீங்கள் படிக்கத் தவறினால், அவைகள் யாவையும் உங்களால் கண்டு கொள்ள முடியாமல் போய்விடும். அங்கேதான் அது சம்பவிக்கிறது. 47தீர்க்கதரிசியாகிய தானியேல் பாபிலோனில் அறுபத் தெட்டு ஆண்டுகள் இருந்தான். நான் இதைக் குறித்து சம்மந்தப் பட்ட குறிப்புகளைத் தேடி அறுபத்தெட்டு ஆண்டுகள் என்ப தைக் கண்டு கொண்டேன்; எனவே குறிப்புகளைத் தேடிப் பார்த்து கண்டு கொள்ள விரும்புகிறவர்கள், இப்பொழுது நேரத்தை மிச்சப்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் நான் அதை செய்திருக்கிறேன். அறுபத்தெட்டு ஆண்டுகள், அவன் கி.மு.606-ல் சிறையிருப்பிற்குள் சென்றான். அந்த தரிசனம் அவனுக்கு வந்தபோது அது கி.மு.538 ஆக இருந்தது. 538 முதல் 606 முடிய 68 ஆண்டுகள் ஆகும். அந்த அஞ்ஞானிகள் மத்தியில் பாபிலோன் தேசத்தில் அவன் 68 ஆண்டுகள் இருந்திருந்தும் அவன் ஜெயத்தை உடையவனாகவே இருந்தான். ஆமென்! நம்மால் ஒரு மணிநேரம் கூட தங்கியிருக்க முடியாது. ஆனால் அவனோ அவர்களின் மத்தியிலேயே அந்த மூன்று தோழர்களைத் தவிர வேறு யாருடைய துணையுமின்றி அங்கே இருந்துவிட்டான். அம்மூவரும் கூட அந்த இராஜ்யத்தின் வெவ்வேறு பாகங்களில் இருந்து வந்தார்கள். ஆனால் தானி யேலோ தேவனோடு தனித்திருந்து அறுபத்தெட்டு ஆண்டுகள் வெற்றியை தொடர்ந்து பெற்றவனாகக் காணப்பட்டான். அதைக் குறித்து எண்ணிப் பாருங்கள் (நான் பிரசங்கிக்க ஆரம்பிக்க விரும்பவில்லை; ஏனெனில் இது ஒரு போத கமான செய்தியாகும்) ஆனால் அவனோ பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இல்லாமல் அவனுக்காக பரிந்து பேசும்படி இயேசு கிறிஸ்துவின் இரத்தமுமில்லாதவனாக, அத்தேசத்தின் அஞ் ஞான பாரம்பரியங்களினிமித்தமாக இரகசியமாக செலுத்தும் படி நேர்ந்த இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தை மட்டும் உடையவனாக இருக்கும் போதே அவன் தேவனுக்கு முன்பாக கறைபடாதவனாக, அறுபத்தெட்டு ஆண்டுகள் வெற்றியை நிலைநாட்டியவனாகக் காணப்பட்டான். அவர்கள் அங்கு பிடித்துச் செல்லப் பட்டார்கள். அவர்கள் அவ்வாறு சிறையிருப்பில் போவார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசி அவர்களைப் பற்றி தீர்க்கதரிசனமாக கூறியிருந்தான். 48இப்பொழுது தானியேல்... ஓ, என்னே! இன்று நாம் காண்கிறப்படி, அவன் அன்றைக்கு, நேரமானது நெருங்கிக் கொண்டிருக்கிறதைக் குறித்து காண ஆரம்பித்தான். புஸ்தகங் களை வாசித்ததின் வாயிலாக அவன் அறிந்துகொள்ள ஆரம்பித்ததாக அவன் கூறினான். தானியேலின் ஆளுகையில் முதலா மாண்டில்... ஆளுகையில்... தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறை வேறித் தீர எழுபது வருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையை புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். தானி.9:2. கி.மு. 606. ல் எரேமியா, தீர்க்கதரிசியானவன், அவர்க ளுடைய பாவங்களினிமித்தமும், அவபக்தியினிமித்தமும், எழுபது ஆண்டுகள் சிறையிருப்பில் போவார்கள் என்று முன்னுரைத்தான். 49அந்நாளில் அங்கே இன்னொரு தீர்க்கதரிசியும் இருந்தான் என்பது உங்களுக்கு நினைவிலிருக்கும். இந்நேரத்தில் அவனது பெயரை குறிப்பிட என்னால் இயலவில்லை. நான் சற்று திரும்பி அதைப் பற்றி தேடிப் பார்த்தால், இன்னும் சில நிமிடங்க ளுக்குள் உங்களுக்கு அவனது பெயர் இன்னதென்று குறிப்பிட்டுவிட முடியும். ஆனால் அவன் வந்து, ''எரேமியா, நீ தவறாயிருக்கிறாய், தேவன் இஸ்ரவேலை சில ஆண்டுகளுக்கு மாத்திரம், இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் அங்கே வைத் திருக்கப் போகிறார்'' என்று கூறினான். எரேமியா அதற்குப் பதிலாக, ''அப்படியே ஆகக்கடவது ஆமென்! ஆனால் ஒரு நிமிடம் பொறு. தீர்க்கதரிசிகள் என்ற முறையில் நாம் இருவர் ஒருவரோடொருவர் சரிபார்த்துக் கொள்வோம். நமக்கு முன்னால் தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள், அவர்கள் தவறான காரியங்களை தீர்க்கதரிசனமாக உரைத்தனர். அவர்கள் அவ்வாறு தவறான வைகளை உரைத்ததற்காக தேவன் அவர்களை தண்டித்திருக்கிறார். ஆகவே நாம் நிச்சயமுடையவர்களாயிருப்போம். ஆனால் தேவனாகிய கர்த்தர் என்னிடம் எழுபது ஆண்டுகள் செல்லும் என்று கூறியிருக்கிறார்'' என்று கூறினான். தேவன் அந்தக் கள்ளத்தீர்க்கதரிசியை அடித்து, அதே ஆண்டில் அவனது ஜீவனை எடுத்துக்கொண்டார். ஏனெனில் தேவன் இந்த உண்மையான தீர்க்கதரிசியிடம் எழுபது ஆண்டுகள் செல்லும் என்று கூறியிருந்தார். 50நீங்கள் கவனிக்கும்படியாக நான் விரும்புகிறதென்ன வென்றால், எவ்வாறு தானியேல் ஒரு அந்நிய தேசத்தவனாக இருந்தபோதிலும், தன் சபையை விட்டு புறம்பாக்கப்பட்டு, ஒரு சபை ஆராதனை கூட அவனுக்கில்லாதிருந்த நிலையிலும், அவன் தனக்குத் தானே பாடிக் கொண்டதைக் தவிர துதிப் பாடல்கள் ஒன்றும் இல்லாத நிலையிலும், இவை யாவற்றின் மத்தியிலும் கூட, அத்தீர்க்கதரிசி என்ன கூறினானோ அவைகளை விடாமல் பற்றிக் கொண்டிருந்தானே, அதைத்தான். ஆமென்! ஆமென்! போவதற்கு அவனுக்கு எந்த சபையும் இல்லை, யாருடனும் ஐக்கியங்கொள்ள ஒருவரும் இல்லாத நிலை. யாவரும் அந்நிய தேவனுடைய கோவில்களுக்கு சென்றார்கள், யாவரும் தங்களுடைய விக்கிரங்கங்களையே வணங்கி வந்த நிலை, கிறிஸ் தவ பாடல்கள் ஒன்றும் இல்லாத நிலை, அவன் விசுவாசித்த அநே காரியங்களை விசுவாசிக்க வேறு யாரும் இல்லை. அப்ப டிப்பட்ட நிலையில் அவன் தனது பன்னிரண்டு, அல்லது பதினான்கு வயதில் அங்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டதிலிருந்து அறுபத்தெட்டு ஆண்டுகள் அவன் தேவனுக்கு உண்மையுள்ளவனாயிருந்தான். எரேமியா தீர்க்க தரிசி கூறியவற்றிலிருந்து, அந்நாட்கள் ஏறத்தாழ நிறைவேறி விட்டன என்பதை அறிந்து கொண்டான். ஆகவே இக்காரியம் எந்தவொரு உண்மையான தீர்க்கதரிசியின் இருதயத்தையும் எப்படியாய் எச்சரிக்கை செய்திடும் என்றும் அதினால் நாம் பின்னால் திரும்பிப் பார்த்து, இந்த உண்மையான தீர்க்கதரிசி என்ன கூறினான் என்பதைக் கண்டு, நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளச் செய்திடும் என்பதைப் பாருங்கள். அவன் கூறினான்: “எனது சகோதரனாகிய எரேமியாவின் புஸ்தகங்களின் வாயிலாக, இஸ்ரவேல் மக்கள் இத்தேசத்தில் எழுபது ஆண்டுகள் தங்குவார்கள் என்று தீர்க்கதரிசனமாக உரைத்தான் என்ப தையும், அவன் முன்னுரைத்த நாட்கள் நிறைவேறிவிட்டன என்பதையும் நான் அறிந்து கொண்டேன்'' என்று அவன் தன்னை ஆயத்தம் பண்ணிக் கொண்டவனாய், உபவாசமெடுத்து, தன்னைதானே பரிசுத்தப்படுத்தினவனாய், தன் தலையில் சாம்பலை அள்ளிப்போட்டுக்கொண்டு, இரட்டிலும், சாம்பலிலும் உட் கார்ந்து, உபவாசத்தினாலும் ஜெபத்தினாலும் அவர்கள் வாழ்ந்த நாளானது என்னவென்பதை அறிந்து கொள்ள பார்த்தான். 51கர்த்தருடைய தீர்க்கதரிசியாகிய தானியேல் எரேமியாவின் புஸ்தகங்களை ஆராய்ந்து அதினால், இஸ்ரவேல் மக்கள் பாபி லோனை விட்டு உயிரோடு வெளியே வந்து, தங்கள் சொந்த தேசத்திற்குத் திருப்பிப் போவதற்கான வேளை நெருங்கி விட்டது என்பதை அறிந்து கொண்டபோது, அது அவனை இரட்டிலும் சாம்பலிலும் உட்காரத்தக்கதாக செய்யக் கூடுமானால், ஜீவ னுள்ள தேவனுடைய சபையானது, காலமானது மங்கி கொண் டேயிருக்கிறதும் இனிகாலம் செல்லாது என்றும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையும் ஆயிரமாண்டு அரசாட்சியும் வருவதற்கு ஆயத்தமாகவுள்ளன என்பதை அறிந்து கொள்ளும் படியாக இருக்கையில், அந்நிலை எவ்வளவு அதிகமாக அதற்கு செய்வதாக இருக்கும்? எவ்வாறு நாம் நேரத்தை சூதாட்டத் திலும் நீச்சல் குளங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வீணாக செலவு பண்ணவும், கர்த்தருக்கென்று நேரமில்லாதவர்களாகவும் இருக்கமுடியும்? உங்கள் மேய்ப்பர் நீங்கள் விரும்பாத ஏதாவதொரு விஷயத்தைக் குறித்து பேசினால் உடனே எழும்பி வெளியேறி விடுகிறீர்கள். சபை ஆராதனையானது நீண்ட நேரம் நடக்குமானால் நீங்கள் அதிருப்தியடைந்து விடுகிறீர்கள். அது ஏன்? நமது நிலைமையை நாம் நோக்கிப் பார்க்கக்கடவோம். நாம் என்ன செய்கிறோம் என்பதை பாருங்கள். அத்தீர்க்க தரிசியின் ஜீவியத்தோடு நமது ஜீவியங்களை நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம். எந்த சபை ஆராதனைக்கும் போகவே முடியாத நிலையில் ஒரு இராஜ்யத்தில் அவன் இருந்தான், எவரிடத்திற்கும் அவன் போகமுடியாத நிலை; அவனது நகரம் உடைத்து நொறுக்கப்பட்டு சுட்டெரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அவனது ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அறுபத் தெட்டு ஆண்டுகள் கடந்து விட்டன. எழுபது ஆண்டுகள் ஆவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளே மீதமாயிருந்தது. 52ஆகவே அவன் அந்த புஸ்தகத்தில் வாசிக்க ஆரம்பித்து, நேரமானது நிறைவேறுதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் கண்டபோது, அவன் அதைக் குறித்து கண்டு பிடிக்க தேவனிடத்தில் ஜெபத்தின் மூலம் போனான். என்னே ஒரு நேரம் அது! தேசங்கள் உடைந்து கொண்டிருக்கவும், சமுத்திரம் முழக்கமாயிருந்து கொண்டிருக்கவும், மனுஷருடைய இருதயங்கள் பயத்தினாலும், காலத்தைப் பற்றி தடுமாற்றத்தினா லும் இவைகள் யாவற்றினிமித்தமும், சோர்வடைந்து போயிருக் கவுமான இப்படிப்பட்ட வேளையில், சுவற்றில் தோன்றிய கையுறுப்பினிமித்தமும், இனப்பாகுபாட்டினால் ஒற்றுமைக் குலைவு ஏற்படுவதுமான நிலையிலும், இவ்வுலகில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் எல்லா தீங்குகளும் உள்ள நிலையில், வீண் சச்சரவுகள், சண்டைகள், கலக்கங்கள், ஆயுதங்கள் தலைக்கு மேலே தொங்கிக்கொண்டிருத்தல் ஆகிய இவ்விதமான மோசமான நிலையில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இங்கே உள்ள சிறிய அளவுள்ள கியூபா தேசமானது பத்து நிமிடங்களுக்குள்ளாக உலகையே அழித்து விடுமாம். தேவனையும் அவருடைய வல்லமையையும் அறியாத அந்த அவபக்தியான மனிதர் ஒருவரோடொருவர் சச்சரவிட்டு கொண் டிருக்கின்றனர். சபையிலோ பரிசுத்த ஆவியானவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டிருந்து, இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், தாம் ஜீவனோடிருக் கிறவர் என்பதைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்; அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதைக் காண்பித்துக்கொண்டிருக்கிறார். காரியங்கள் இவ்வாறிருக் கையில், நாம் எவ்வாறு அசதியாயிருக்க முடியும்? அவைகளைக் கண்டும் காணாதவர்கள் போல் எவ்வாறிருக்க முடியும்? நாம் சோதித்துக் கொண்டு, அம்மகத்தான வேளை நெருங்குவதாக விழிப்பாய் கவனித்துக்கொண்டேயிருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. 53இப்பொழுது அவன் எரேமியாவின் புஸ்தகத்தில் 25 ம் அதிகாரத்திலிருந்துதான் வாசித்தான். நாம் இப்பொழுது எரேமியா 25ம் அதிகாரத்திற்கு, அங்கே அவன் என்ன கூறுகிறான் என்பதைப் பார்ப்போம். சரியாக நாம் 8ம் வசனத்தில் துவங்குவோமாக. ஏனெனில் அது... அதை சரியாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். வாசிப் பதற்காக எனது குறிப்பில் இங்கே நான் 11ம் வசனத்தையே குறித்து வைத்துள்ளேன். ஆனால் நாமோ 8ம் வசனத்திலிருந்தே வாசிக்கத் துவங்குவோமாக. ஆகவே சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்... (நான் அவ்விதமாகக் கூறுவதை விரும்புகிறேன். ஒரு தீர்க்கதரிசியானவன் “தேவனாகிய கர்த்தர் உரைப்பது என்ன வென்றால்'' என்ற வார்த்தையோடு எழுந்து நின்று கூறுவதை நான் கேட்க முடிகிறதென்றால், சகோதரனே, அதுதான் சரியான காரியமாகும். என்னைப் பொறுத்த மட்டில் அதுவே தீர்வாயிருக் கிறது. அதுவே எல்லாமாயிருக்கிறது). சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் (ஆங்கில வேதாகமத்தில் 8ம் வசனத்தில் இந்த வார்த்தையோடு தான் வசனம் துவங்குகிறது. ஆனால் தமிழ் வேதாகமத்திலோ 9ம் வசனத்தில் தான் இவ்வசனம் இருக்கிறது தமிழாக்கியோன்) நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால். இதோ நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை யும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதன் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப் பண்ணி, அவைகளைச் சங்காரத் துக்கு ஒப்புக் கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக் குறியாகிய ஈசல் போடுதலாகவும் நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன்... (தேவன் தம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் தான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் தேவ னற்றவர்களல்ல, சபை அங்கத்தினர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). மகிழ்ச்சியின் சத்தத்தையும் சந்தோஷத்தின் சத்தத்தையும் (இன்றைக்கு நமக்கு ராக் அண்ட் ரோல், ரிக்கி, எல்விஸ் ஆகிய வைகள் இருப்பதைப் போல ஓ...) மணவாளனின் சத்தத்தையும் மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும், அவர்களிலிருந்து நீங்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். இந்த தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்..... (அத் தீர்க்கதரிசி கதறுவதைக் கேளுங்கள். இம்மகத்தான தேவ ஊழியக்காரனைப் போலவே பாவனை செய்வதற்கில்லை. நான் தீர்க்கதரிசனமாக உரைப்பது என்னவென்றால், இந்த முழுத் தேசமும் வனாந்தரமும் பாழுமாகும். தேவன் இத்தேசத்தை அதன் பாவங்களுக்காக தண்டிப்பார். அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் ஆபிரகாமின் வித்துமாயிருந்த இஸ்ர வேலரோடு தேவன் உடன்படிக்கை செய்து அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்து கொடுத்திருந்தார். அவர்களையே தேவன் தப்பவிடவில்லை. அவர்கள் தேவ பக்தியுள்ளவர்களாகக் காணப் பட்டிருந்தாலும், பெரிய ஆலயக் கட்டிடங்களை உடையவர் களாய் இருந்தாலும், ஆசாரியர்கள், போதகர்களைக் கொண்டிருந் தாலும், அவர்களுடைய ஒழுக்கக்கேடான காரியங்களுக் காவும், அவர்கள் மத்தியில் காணப்பட்ட இன்னபிற காரியங் களுக்காகவும், அவர்கள் விதைத்ததை அறுக்கும்படி தேவன் செய்தார். அதே விதமாக நமக்கும் கிடைக்கும்!) (11ம் வசனம்) இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்;. இகழ்ச்சிக்குறியாகிய ஈசல் போடுதலாகவும்.... (அதாவது யாவரும் அவர்களை உற்று நோக்கி, “இதோ பார் அவர்களை, அவர்கள் மகத்தானவர்களாய் இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் இருக்கிற நிலையைப் பாருங்கள் என் பார்கள்)... இந்த ஜாதிகளோ எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவை சேவிப்பார்கள். (அதுதானே ஒரு ஜீவியகாலமாகும். அதுதானே ஆசீர்வதிக்கப்பட்ட உனது சொந்த தாயார் ஒரு குழந்தையாக இருந்தபோது ஆரம்பித்ததாகும். அவர்கள் அங்கே தேவனற்று இருந்தார்கள். ஒரு சபையில்லாமல் இருந்தார்கள், பாடல் இல்லாமல் இருந்தார்கள்; எந்தவொன்றும் இல்லாமல் ஒரு முழு சந்ததியின் காலத்திற்கும் இருந்தார்கள்; இவ்வண்ண மாக அந்த பாவ சந்ததியார் யாவரும் முற்றாக மரித்து ஒழிந்து போகும் வரையிலும் அங்கே இருந்தார்கள்). எழுபது வருஷம் நிறைவேறின பின்பு , நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து அதை நித்திய பாழிடமாக்கி நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தை களையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்க தரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது மான யாவையும் அதின் மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமை கொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்க தாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத் தால் அவர்கள் தள்ளாடி புத்தி கெட்டுப் போகும்படிக்கு (பட்டயத் தால் என்பதற்குப் பதிலாக 'வார்த்தையால்'' என்று தீர்க்கதரிசி இந்த இடத்தில் வாசிக்கிறார் - தமிழாக்கியோன்). இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார். (இன்னொரு விதமாகக் கூறுவதானால், “எரேமி யாவே, நான் உன்னிடம் இந்தச் செய்தியைக் கொடுத்திருக் கிறேன். அமரிக்கையாக உட்கார்ந்திருக்காதே. ஒரே இடத்தில் தங்கியிருக்காதே. சகல ஜாதிகளுக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தி டுவாயாக'' என்றார். இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? ''சகல தேசத்தாருக்கும் தீர்க்கதரிசனம் உரைப்பாயாக. எனது அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பி. நான் வந்து இதைச் செய்ய போகிறேன் என்பதை அவர்கள் அதின் மூலம் அறிந்து கொள்வார்களாக). எரே 25:8-16. 54இந்த நாளில் அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்கள் உங்களை கள்ளத்தீர்க்கதரிசி என்றும், ஒத்துப் போகிறவன் என்றும், மதவெறியன் என்றும், குறி சொல்லுகிறவன் என்றும் சொப்பனக்காரன் என்றும் அல்லது ஒரு விதமான மனோவசிய முறையில் உள்ளத்தை அறிந்து சொல்லுகிறவன் என்றும் அழைக்கிறார்கள். ''அவர்கள் புத்தி கெட்டுப் போவார்கள்'' புத்திகெட்டு போகுதல் என்ற இவ்வார்த்தையை பகுத்துப் பார்த்தால், இதற்கு “பித்துப்பிடித்த'' என்ற அர்த்தமும் இருக்கிறது. சரியாக அவர்கள் பித்துப் பிடித்த'' என்று அர்த்த மும் இருக்கிறது. சரியாக அவர்கள் ”பித்துப் பிடித்தவர்களாக ஆவார்கள். அதினால், அவர்கள் “ஆ, அந்த பரிசுத்த உருளை கூறுகிறதற்கு நீங்கள் ஒரு கவனமும் செலுத்த வேண்டாம். அந்த அபத்தத்தை பொருட்படுத்த வேண்டாம்'' என்பார்கள். ''நான் அவர்கள் மத்தியில் அனுப்பும் வார்த்தையினால் அவர்கள் இப்படியாவார்கள்.'' 55வரலாறானது திரும்புகிறது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? எரேமியா அவர்களுடைய பரிசேயரோடும், சதுசேயரோடும், ஏரோதியரோடும் இன்னும் அவர்கள் யாரா யிருந்தாலும் சரி அவர்களோடு ஒத்துப் பேசவில்லை. அவன் வார்த்தையை அப்படியே உரைத்தான். அதுதானே அவர்களை அவன் மேல் வெறி கொள்ளச் செய்தது. இப்பொழுது கவனி யுங்கள். அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதி களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்.... (எரேமியா வீட்டில் தங்கி யிருக்கவில்லை. எரேமியா ஒரு சிறிய இடத்தில் தங்கியிருக்க வில்லை, ஆனால் அவனோ சகல ஜாதிகளிடத்திலும் போய் அவர்கள் அதைக் குடிக்கும்படி செய்தான்). எரே. 25:17. 56எரேமியா அவருடைய வார்த்தையாகிய மதுவை, கர்த்தருடைய வார்த்தையை எடுத்துக்கொண்டான். அம்மது அவருடைய வார்த்தையின் வல்லமையாக இருக்கிறது. மதுவுக்கு ஒரு வல்லமை உண்டு. மது போதையூட்டுவதாக இருக்கிறது. மது அதன் பின்னால் ஒரு வல்லமையுடையதாக இருக்கிறது. “நான் கர்த்தருடைய வார்த்தையை எடுத்து'' என்று எரேமியா கூறுகிறான். ”அது பிரத்தியட்சமாகும்படி செய்தேன்'' என்று கூறுகிறான். “மதுவில் வல்லமையுண்டு, அதை நான் அவர்களுக்கு முன்பாக கிரியை செய்யும்படி செய்தேன். அவர்களோ செவி கொடுக்க மறுக்கின்றனர்'' என்றான். ”அப்படியென்றால் நான் அவர்களை எழுபது ஆண்டுக் காலம் பாபிலோனுக்கு அனுப்பி விடுவேன்'' என்று தேவன் கூறினார். அதைதான் அவர் செய்தார். நீதிமானும் சென்றான். துன் மார்க்கனும் சென்றான். 57இப்பொழுது பாடத்திற்கு மீண்டும் வருவோம். தானி யேல் புஸ்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தான். எண்ணிப் பாருங்கள். இன்று காலையில் நாம் வாசித்த அதே வசனங்களையே தானியேலும் வாசித்தான். நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதை உங்களுக்கு காண்பிக்கும்படி அடுத்த சில செய்திகளின் போது தானியேல் வாசித்த அதே வேதாகமத்தை, அதே புள்ளிகளோடு, அதே வாக்கியங்களை அதே விஷயங்களை தேவனுடைய உதவியைக் கொண்டு நான் வாசித்துக் காண்பிப் பேன்; தானியேலின் வார்த்தையை எரேமியாவிடத்திலிருந்து எடுத்துக்கொண்டு, பாபிலோனுக்குள் செல்கிறான். அவன் தானே அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாக இருந்தான். (ஒலிநாடாவில் இரண்டாம் பக்கம் அரைகுறையாக ஆரம்பிக்கிறது - ஆசி)... அவர்கள் மத்தியில் அற்புதங்கள்... ஆயினும் அவன் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தான். ஆமென்! அவன் தனியாக நின்றான். 58ஆனால் எரேமியா அனேகமனேகமாண்டுகளுக்கு முன்பாக அவ்வசனங்களை எழுதியிருந்தான். பிறகு தானியேல் வார்த்தையின் வியாக்கியானத்தைப் பெற்றான். அதினால் அவன் கூறினான், “ஒரு நிமிஷம் பொறுங்கள். நாம் கால முடிவில் அரு கில் வந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் நான் இந்த தேசத்தில் ஏற்கெனவே அறுபத்தெட்டு ஆண்டுகள் இருந்து விட்டேன். கர்த்தருடைய தீர்க்கதரிசி (ஆமென்!) எனது சகோதரன், தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியானவன், தன்னை உண்மையான தீர்க்கதரிசிதான் என்று நிரூபித்துக் காண் பித்தவன். நமக்கு தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளான். 'எழுபது ஆண்டுகள் நிறைவேறித் தீரும் என்று அவன் முன்னுரைத்ததை இங்கே ஒரு புஸ்தகத்தில் எழுதி வைத்துள்ளேன்'' என்று கூறினான். 'அந்தச் சந்ததியாரெல்லாரும் மரித்துப் போய் விட்டனர். இப்பொழுது நீர் என்ன செய்யப்போகிறீர் கர்த் தாவே? நீர் எங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவதாக வாக்கு ரைத்தீரே'' என்று ஜெபித்தான். அவன் விண்ணப்பம் பண்ணு வதற்காக தன்னை ஆயத்தப்படுத்தினான். 59ஓ, தேவனே, ஜெபிப்பதற்காக நாங்கள் உமக்கு நேராக எங்களைத் திருப்பிக்கொள்ள வேண்டுமென ஒருவேளை உண் டென்றால், அது இப்பொழுதுதான், அவருடைய உண்மையான ஊழியக்காரர் நாங்கள் என்ற ரீதியில், அப்போஸ்தலருடைய நிரூபங்களைக்கொண்டும், பரிசுத்த ஆவியானவரின் எச்சரிக் கையை கொண்டும், நாம் கடைசி நாளில் இருக்கிறோம் என் பதைக் காண்பிக்கிறோம். கடைசி நாட்களில் மனிதர் துணி கரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவ பிரியராயிராமல் சுகப்போகப்பிரியராயும், இணங்காதவர் களாயும், அவதூறு செய்கிறவர்களாயும் நல்லோரைப் பகைக் கிறவர்களாயும் இருப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் கூறுகிறார். அந்நிருபத்தின் மூலம் அதை புரிந்து கொள்கிறேன். 60கடைசி நாட்களில் பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்பதை நான் அறிகிறேன். கடைசி நாட்களில் ஜாதிக்கு விரோதமாக ஜாதி இருக்கும் என்பதை நான் அறிகிறேன். கடைசி நாட்களில் கடல் கொந்தளிப்பினால் பேரலைகள் ஏற்படும் என்பதை நான் அறிவேன். பறக்கும் தட்டுகளாகிய அச்சமூட்டக்கூடிய காட்சிகள், வானங்களில் மர்மமான தோற்றங்கள் ஏற்படும் என்றும், மனுஷருடைய இருதயங்கள் அச்சத்தினால் சோர்ந்து போகும் என்றும் நான் அறிவேன். காலத்தைக் குறித்து திகைப்பு, மக்கள் மத்தியில் இக்கட்டுகள் ஏற்படும். கடைசி நாட்களில் அவர்கள் யாவரும் சங்கங்களுக் குள்ளும், ஸ்தாபனங்களுக்குள்ளும் போய், சபைகளின் சமஷ்டி அமைப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள் என்பதைக் குறித்தும் நான் படிக்கிறேன். கடைசி நாட்களில் ஸ்திரீகள் தங்கள் தலைமுடியைக் கத்தரித்துக் கொள்வார்கள் என்பதையும் நான் அறிவேன். அவர்கள் குட்டையான உடைகளை அணிந்து, குதி உயர்ந்த செருப்புகளை அணிந்து நடப்பார்கள் என்றும், அவர்கள் நடந்து செல்லுகையில் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிவார்கள் என்பதையும் நான் படித்து அறிந்துகொண்டுள்ளேன். கடைசி நாட்களில் ஒழுக்கமானது மிகவும் தரந்தாழ்ந்து போய்விடும் என்பதை அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களில் பிரசங்கிகள் கள்ள மேய்ப்பர்களாக, ஒத்துப்போகிறவர்களாக இருந்து தேவனுடைய வார்த்தையை மக்களுக்குப் போஷிக்காமல், அதற்குப் பதிலாக சடங்காச்சாரக் கோட்பாடுகளின் பின்னால் செல்லுகிறவர்களாய் இருப்பார்கள் என்பதை நான் அறிகிறேன். ஆனால் கடைசி நட்களிலே வனாந்தரத்திலிருந்து கூப்பிடுகிற தும், மக்களை மூலமுதலான செய்திக்கு திரும்பும்படி அழைக் கிறதும், தேவனுடைய காரியங்களுக்குத் திரும்பும்படி அழைக் கிறதுமான ஒரு சப்தம் உண்டாயிருக்கும் என்று நான் அறிகி றேன். இப்படியாக புஸ்தகத்தின் வாயிலாக மேற்சொன்ன காரியங்களெல்லாம் சம்பவிக்கும் என்பதை வாசித்து அறிந்துகொண்டுள்ளேன். 61கடைசி நாட்களிலே ஒரு பஞ்சம் உண்டாகும் என்பதையும் அறிந்திருக்கிறேன். கடைசி நாட்களிலே ஆகாரக் குறை வினாலும், ஜலக்குறைவினாலும் மட்டும் உண்டாகிற பஞ்ச மல்ல, உண்மையான தேவ வார்த்தையைக் கேட்கக் கிடைக்காத பஞ்சம் ஏற்படும் என்றும், அந்த அளவுக்கு சபைகள் சடங்காச்சார மதஸ்தாபனங்களாக ஆகிவிடும்; ஆனால் மக்களோ, தேவனுடைய மெய்யான வார்த்தையைக் கேட் பதற்காக கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும், தெற்கி லிருந்தும் புறப்பட்டுச் செல்வார்கள். ஆனால் சபைக ளோ, வெற்று சடங்காச்சார மதஸ்தாபனங்களாக ஆகி இறுக்க மடைந்து போய் வார்த்தைக்கு செவி கொடாதவர்களாக ஆகிவிடுவார்கள். இவையெல்லாம் நான் புஸ்தகங்களிலிருந்து அறிந்துகொண்டுள்ளேன். ஆனால் அந்நாளிலோ, ஓ, தேவனே, தாவீதிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். கடைசி காலத்திலே அந்த நாள் வருவதற்கும் முன்பாக அவர் எலியாவை அனுப்புவார் என்றும், அவன் ஒரு செய்தியை உடையவனாயிருந்து, பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்க ளுடைய இருதயத்திற்குத் திருப்பி, அவர்களை மூலமுதலான உபதேசத்திற்குத் திருப்பி அங்கிருந்து அவர்களை துவங்கும்படி செய்வார் என்றும் அறிந்துகொண்டுள்ளேன். ஆவியானவர் புறஜாதி சபையை விட்டு யூதர்களிடமாகத் திரும்புவதற்காக சற்று முன்பாக அந்தக் காரியம் நடக்கும் என்பதை நான் அறிவேன். 62எழுத்தின் வாயிலாக மாத்திரமல்ல, வார்த்தையின் மூலமாகவும், எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும், இஸ்ரவேல் தனது சொந்த நாட்டிற்கு திரும்பிடும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவள் அங்கே உள்ளே போய்க் கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். தீர்க்கதரிசிகளின் எழுத்துக்களின் வாயிலாக இஸ்ரவே லானது ஒரு தேசமாக உருவெடுக்கும் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் ஆலய வழிபாட்டை திரும்ப ஏற்படுத்துவார்கள். அவள் தன் சுயதேசத்திற்கு திரும்பி வந்திருக் கையில் தேவன் அவர்களோடு இடைபடும்படி போவார். ஓ! அவர்களுக்காக இரண்டு தீர்க்கதரிசிகள் கடைசி நாட்களில் எழும்புவார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். புறஜாதி சபையானது கடந்து செல்லுகையில் இரண்டு தீர்க்கதரிசி களாகிய எலியாவும், மோசேயும் இஸ்ரவேல் மக்களுக்காக அவர்களிடம் வருவார்கள். நாம் இவைகளை படிக்கையில் அதைக் குறித்து பார்ப்போம். பாபிலோனில் அவர்கள் இருக்கவேண்டிய காலமானது ஏற்குறைய நிறைவேறித் தீர்ந்தது என்பதை தீர்க்கதரிசிகள் கண்டனர். அது சரிதான். 63தானியேல் கேட்ட விஷயங்களைப் பற்றி மட்டும் காபிரியேல் அங்கே வெளிப்படுத்த வந்திருப்பதாகத் தோன்றவில்லை. முடிவு காலம் வரையில் யூத இனத்திற்கு என்ன தீர்மானிக் கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி காலங்கள் பூராவிலும் உள்ள விஷங்களையும் அவன் அவனுக்குக் கூறுகிறான். ஆமென்! ஒரு சிறிதளவு விஷயத்தைப் பற்றித்தான் அவன் கேட்டிருந்தான். ஆனால் அவனுக்கோ முழு விஷயமும் கொடுக்கப்பட்டது. அவன் விரும்பிக் கேட்டதெல்லாம்... 'இன்னும் எவ்வளவு காலம் செல்லும், கர்த்தாவே?'' என்று கேட்டு தானியேல் அதைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தான். ''எனது சகோதரனும் உமது ஊழியக்காரனு மாகிய எரேமியா அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக தீர்க்கதரிசனமாக, இந்த மக்கள் இத்தேசத்தில் எழுபது ஆண்டு கள் இருப்பார்கள் என்று முன்னுரைத்திருந்தான். இப்பொழுது பழைய சந்ததியினர் யாவரும் மாண்டு போய் விட்டனர்'' என்று ஜெபித்தான். 64நாற்பதாண்டுகளுக்கு முன்பாக ஒரு பழைய பெந்தெ கோஸ்தே சந்ததியினர் எழும்பினர். அவர்கள் “முதுபெரும் வீரர்கள்'' என்று அழைக்கப்பட்ட அவர்கள் ஸ்தாபனமாக ஆகி, தம்பட்டமடித்துக்கொண்டு வெற்று ஆரவாரம் செய்து, ஹோரேப், நேபா மலைகள் வழியாகக் கடந்து சென்றார்கள். ஆனால் நாம் இறுதியாக இப்பொழுது அந்நதியண்டை வந்து விட்டோம். தேவன் ஒரு புதிய சந்ததியை எழுப்பி அவர்கள் நதியைக் கடந்து செல்ல யோசுவா என்ற ஒருவனை எழும்பச் செய்யப்போகிறார். நியாயப் பிரமாணம் தவறினது; மோசே அதனுடன் சென்றான். மோசே தவறினான். யோசுவா அவர்களை நடத்திச்சென்றான். ஸ்தாபனங்கள் தவறிவிட்டன என்றும் ஆனால் தேவ ஆவியானவர் (யோசுவா - யோசுவா என்ற வார்த்தை இயேசு நமது இரட்சகர்'' என்று பொருள்படும்) பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் பிரவேசித்து, மேலே போக, யோர்தான் நதியைக் கடக்கும்படி செய்ய, அவளை ஆயத்தம் செய்வார். அதுதான் நடைபெறப் போகிறது என்பதை நான் புஸ்தகத்தை வாசித்ததன் வாயிலாக அறிந்து கொண்டுள்ளேன்; இப்பொழுது நான் என்னத் தேடிக் கொண்டி ருக்கிறேன் என்பதை தேவன் அறிவார். தேவனுடைய ஜனங் களைத் தேற்றி இப்பொழுது என்ன சமீபமாயிருக்கிறது என்ப தைப் பற்றி அவர்களுக்கு கூறவும், இன்று இக்காலையில் இங்கே பிரசன்னமாயிருப்பவர்களுக்கும், இந்த ஒலிநாடாக்கள் உலகம் பூராவிலும் போகப் போகிறதே அவ்விடங்களிலுள்ள தேசங் களில் இதைக் கேட்பவர்களுக்கும், நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம் என்பதைக் கூறத்தக்கதாகவே நான் இருக்கிறேன். 65இராஜ்யமானது முற்றாக திரும்ப அளிக்கப்படுகிற வரையிலும் உள்ள காலம் முழுவதிலும் உள்ளவற்றையும், ஆயிர மாண்டு அரசாட்சி துவங்கும் வரையிலும் உள்ள காரியங்க ளெல்லாம் அவர் வெளிப்படுத்தினார். அது காபிரியேலின் செய்தியாக இருந்தது. “உன் ஜனங்கள் மேல் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டுள்ளது. யூத சந்ததியினரின் முடிவு வரைக்கிலும் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டுள்ளது என்பதை உனக்கு அறிவிக்கும்படியாக நான் வந்தேன்'' என்றான். அவன் அவன் என்ன கூறினான் என்பதை இப்பொழுது கவனியுங்கள். திரும்பக் கட்டுவற்காக கட்டளை வெளிப்படுவது முதல் ... ''.... உன் ஜனத்தின் மேலும், உன் ... நகரத்தின் மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது...' (உன் நகரம்! பாபிலோன் அவனது நகரமல்ல. அவனது நகரமானது எது? அது எருசலேமாகும்). 66நாம் அந்த ஏழு, இல்லை ஆறு விதமான உறுதியான விஷயங்களைப் பற்றி படிக்கும் போது, அந்நகரமானது என்ன என்றும், அதை நிறுவியது யார் என்பதையும் நிரூபித்து அது எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றியும் நாம் பார்ப்போம். எவ்வளவு காலம் அது நிலை நிற்கும்? அது திரும்பக் கட்டப் படுமா? அது எப்பொழுது? என்பதையும் பார்க்கலாம். நமக் காக மகத்தான விஷயங்கள் வைத்து வைக்கப்பட்டுள்ளன. ''மீறுதலைக் தவிர்க்கிறதற்கும், எழுபது வாரங்கள் மேலும் உன்... நகரத்தின் மேலும் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது...'' (அவர் கூறவில்லை ... 'தானியேலே...'' அந்த எழுபது வாரங்கள் பற்றி அவன் அவனிடம்... நான் கூற வந்தது எழுபது வருடங் களைப் பற்றி; அறுபத்தெட்டு ஆண்டுகள் முடிந்து இன்னும் இரண்டு ஆண்டுகளே இருந்தன. எரேமியாவின் தீர்க்கதரிசனம் மிகவும் சரியாக நிறைவேறியது என்று நாம் கண்டோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் அங்கிருந்து வெளி யேறினர். நெகேமியா மன்னனிடம் சென்று, உத்தரவு பெற்று, இடுக்கமான காலங்களில் அலங்கங்களை கட்டினான், அவர்கள் வேலை செய்தார்கள்... அவன் கூறினான். ''அலங்கம்...'' இதற்கு செவி கொடுங்கள்) ''மீறுதலைக் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும்“ (பாவங்களைத் தொலைக்கிறதற்கும்! யாருக்கு? யூதர்களுக்கு... உன் ஜனத்தின் மேலும் குறிக்கப்பட்டிருக் கிறது'' புறஜாதியர்கள் மேல் அல்ல- உன் ஜனத்தின் மேல் அதாவது யூதர்கள் மேல் உன்... நகரத்தின் மேலும்...'' அது நியூயார்க் அல்ல, போஸ்ட்டன் அல்ல, பிலதெல்பியா அல்ல, சிக்காகோ அல்ல, லாஸ் ஏஞ்சலிஸ் அல்ல, ரோம் அல்ல, ஆனால் எருசலேம் நகரத்தின் மேல்தான்) மீறுதலைத் தவிர்க் கிறதற்கும், பாவத்தைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணு கிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத் தையும் தீர்க்க தரிசனத்தையும் முத்தரிக்கிறதற்கும் மகா பரிசுத்த முள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும்.'' (கவனியுங்கள்). இப்போது நீ அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால் எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டு (அது அவரது நகரம்) கிறதற்காக கட்டளை வெளிப்படுவது முதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும்...'' எழுபது வாரங்களின் இந்த ஏழு வாரங்கள். 67அதை நாம் எடுத்துக்கொள்ளுகிற வரையிலும் பொறுத்தி ருங்கள். ஓ, என்னே ! அது ஒரு ஆசீர்வாதமாயிருக்கிறது. எனவே நான் ஒரு கயிற்றை எனக்கு எடுத்துக்கொண்டு இங்கே இந்த இடத்தில் என்னைக் கட்டி வைத்துவிடப்போகிறேன்.... முழுக்காலமும் முடிவு வரையிலும் அதை வெளிப் படுத்தினான். ''அந்த இரண்டு ஆண்டுகள் முடிந்து சிறை யிருப்பும் நிறைவேறித் தீரப்போகிறது என்கிற விஷயத்தை மட்டும் நான் உன்னிடம் கூறப்போகிறதில்லை“ என்று அவன் கூறினான். அந்தத் தீர்க்கதரிசி கூறிய வண்ணமாகவே, அவர்கள் அங்கே சரியாக எழுபது ஆண்டுகள் மாத்திரமே தங்கியிருந் தார்கள். அதன் முடிவில் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்கள். ஏசாயா - நான் தானியேலைப் பற்றி குறிப் பிடுகிறேன். தானியேல் அத்தீர்க்கதரிசியை விசுவாசித்தான். எனவே அவன் இங்கே ஆயத்தமாக இருந்தான். அவன்... காபிரியேல் வந்தபொழுது, “முடிவு வரைக் கிலும் உள்ள சகல காலத்தின் காரியத்தையும் நான் உனக்குக் காண்பிக்கவே வந்திருக்கிறேன்'' என்று அவனிடம் கூறினான். பாருங்கள்? ...அருவருப்பானது... முடிவு பரியந்தமும் அவன் பாழாக்கு வான்...'' (சகலவற்றின் முடிவு என்பது தான் அங்கே Consummation என்ற வார்த்தைக்கு அர்த்தமாம்). 68''என்ன நடக்கப்போகிறது என்பதை நான் உனக்குக் காண்பிப்பேன்'' என்றான். இப்பொழுது கவனியுங்கள். இதை அறிந்து கொள்ளுங்கள். 'நான் ...தானியேலே, நான் உன்னிடம் அனுப்பப்பட்டேன். இப்பொழுதிலிருந்து உலக முடிவு வரைக் கிலும், யூதர்களுக்கும், எருசலேமுக்கும் என்ன தீர்மானிக் கப்பட்டுள்ளது என்பதை உனக்கு அறிவிக்கவே வந்தேன். ஏனெனில் பரலோகத்தில் நீ மிகவும் பிரியமானவன். உன் ஜெபம் கேட்கப்பட்டது“ என்றான். இப்பொழுது, போதனை கற்க வந்தோரே இதை புரிந்து கொண்டீர்களா? இந்த எழுபது வாரங்கள் என்னவென்று நாம் கண்டுபிடித்துவிட்டோமானால், அப்பொழுது, சகலவற்றின் முடிவும் எப்பொழுது என்பதையும் நாம் அறிவோம். ஓ, என்னே! அதை அறிய தேவன் நமக்கு உதவி செய்வாராக. இப்பக்கங்களில் ஏதோ ஒன்றில் அதைப் பற்றி சரியாக, அதாவது, அப்பொழுது இருந்த காலத்திலிருந்து இந்தக் காலம் வரையிலும், முடிவு பரியந்தமும் உள்ளவற்றையெல்லாம் சரியாக அப்படியே நமக்குக் கூறுகிறது. ஒரு நிமிடம் கூட அதில் பிசகிப்போகாது. தேவனுடைய மகத்துவமான வார்த்தையானது எப்படிப்பட்டது! 69தேவன் பூமியை உண்டாக்கி, அதை அதன் சுற்றுப் பாதையில் அமைத்தபோது - அன்றொரு நாள் இரவில், ஞாயிறு இரவில் நான் பிரசங்கிக்கையில் எவ்வாறு அங்கே ஒன்றும் பிசகாமல் சரியாக இயங்குகிறது என்பதைப் பற்றிப் பிரசங்கித்தேன். இப்பூமியானது மிகவும் முழுநிறைவாக துல்லியமாக சுழலுகிறது. அதினால் அவர்களால், இன்றிலிருந்து இருபது ஆண்டுகளில் எப்பொழுது சூரியனும் சந்திரனும் கடந்து செல்லும் என்பதை அந்த சரியான நிமிடத்தையும் கூறி கணக்கிட்டுக் கூற முடியும். இவ்வுலகில் நாம் பெற்றிருக்கிற எந்தவொரு கடிகாரத்தையும் கொண்டு சரியாக என்னால் உங்களுக்கு அதைக் கூற முடியாது, நமக்கிருக்கிற மிகச் சிறந்த கடிகாரம் கூட மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் பிந்திப்போகும். அல்லது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் முந்திப் போகும். அந்த அளவுக்கு முழு நிறைவான, துல்லிய மானதை நம்மால் உண்டாக்க இயலாது, ஏனெனில் பரிபூரண மானது, முழு நிறைவானது ஒன்றேயொன்று தான் உண்டு. அவர்தான் தேவன். தேவனும் அவரது வார்த்தையும் ஒன்று தான். எனவே தேவனுடைய வார்த்தையானது முழு நிறை வானது - பரிபூரணமானது. நாம் இந்த நாட்களைப் பற்றி கண்டு கொண்டோமானால், அப்பொழுது, எப்பொழுது சகலவற்றின் முடிவும் இருக்கும் என்பதையும் கண்டு கொள்வோம். அதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? முடிவு பரியந்தமும் அது தீர்மானிக்கப் பட்டுள்ளது. 24ம் வசனம்... உன் ஜனத்தின் மேலும் உன் .... நகரத்தின் மேலும் (அதுதானே எருசலேமாகும்.... 21வது - 24 வசனம் இங்கே இருக்கிறது. இயேசுவும் இதைப் பற்றி மத்தேயு 24ம் அதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார்). 70இப்பொழுது சகோதரர் காலின்ஸ் அவர்களே! - அவர் இக்காலையில் இங்கே இருப்பாரானால்... அவர் இங்கே இருக் கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை - கேள்வி நேரத்தின் போது அவர் அன்றொரு நாள் ஒரு கேள்வியைக் கேட்டார். (சகோதரன் காலின்ஸ் என்று நான் அவரை அழைப்பது சரிதான் என்று நான் கருதுகிறேன்). பாழாக்கும் அருவருப்பு என்றால் என்ன அர்த்தம் என்பதே அவரது கேள்வியாகும். (பார்த்தீர்களா?) இயேசு அதைப் பற்றி மத்தேயு 24 ம் அதிகாரத்தில் பேசினார் என்று நாம் பார்த்தோம். ஆம், மத்தேயு 24:15. இப்பொழுது நான் அதை விரைவாக எடுத்துக்கொள்கி றேன். அப்பொழுது நீங்கள் தானியேலிருந்து குறிப்பிட்டுள்ள அதே காரியத்தைக் குறித்து, இயேசுவும் பேசுவதைக் காண லாம். குறிப்பெடுத்துக் கொள்கிறவர்களுக்காகக் கூறுகிறேன். மத்தேயு 24:15. நீங்கள் ஒவ்வொருவரும் விசேஷமாக இன்றிர விலும், அடுத்த ஞாயிற்றுக்கிழமையிலும், பென்சில்களையும், தாள்களையும் கொண்டு வருமாறு விரும்புகிறேன். ஏனெனில்... 24 ம் அதிகாரம் 15 வசனம் (மத்தேயு). மேலும், பாழாக்கும் அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. (இது 486 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளதாகும்) தானியேல் தீர்க்கதரிசி... ( வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்)... (உங்களுடைய வேதாகமத்தில் பாருங்கள் அது வளை அடைப்புக் குறிகளுக்குள் எழுதப்பட்டுள்ளது) (“வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்'' என்ற வாக்கியம் வளை அடைப்புக்குறிகளுக்குள் தான் ஆங்கில வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழில். அவ்வாறில்லை - தமிழாக்கியோன்). 71இப்பொழுது அவர் யூதர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ''இந்த ஆலயத்தைக் குறித்து என்ன? எப்பொழுது இது அழிக்கப்படும்? எப்பொழுது அது திரும்பக் கட்டப்படும்? ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடி ஆக்கப்படும்? இதெல் லாம் எதுவரைக்கிலும் இருக்கும்?'' என்கிற விஷயங்களை யெல்லாம் அவர்கள் அறிய விரும்பினார்கள். “பாழாக்கும் அருவருப்பை அங்கே நீங்கள் நிற்கக்காணும் போது...'' தானியேல் பரிசுத்த ஸ்தலத்தில் நின்றிருந்த போது.... ''இது வந்து நிறைவேறுவதை நீங்கள் காணும்போது தான் என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றி வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்...'' என்று அவர் கூறினார். எனவே தான் நாம் தேவனிடம் சந்தேகத்தின் நிழல் ஒன்று கூட இல்லாதபடி அதை நமக்காக பரிபூரணமாக நிறைவானதாக ஆக்கித் தரும்படி ஜெபித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஏனெனில் அவ் விஷயங்களுக்கு நாம் நமது சொந்த வியாக்கியானத்தைப் போடக் கூடாது. கர்த்தர் உரைக்கிறதாவது என்னவென்றால் என்பதன் மூலமாகத்தான் அது வரவேண்டும். எனவே, நான் அதை சரியாகப் புரிந்துகொள்ளுகிற வரையிலும் நான் அதை அங்கே தான் விட்டுவிடுகிறேன். 72அவனுக்கு யாவற்றையும் வெளிப்படுத்தினான். அந்த அருவருப்பானது... 'எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்'' என்ற தீர்க்கதரிசனத்திற்கு (ஓசியா 11:1) கூட்டு அர்த்தம் உள்ளது போல, இதுவும் உள்ளது. இஸ்ரவேல் மக்கள் வெளியே அழைக்கப்பட்டனர் (எகிப்தை விட்டு வெளியே வர - தமிழாக்கியோன்) அதே போல் இயேசுவும் வரவழைக்கப்பட்டார் (எகிப்திலிருந்து வரழைக்கப்பட்டார் - தமிழாக்கியோன்) நான் இங்கே நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிஜமாயிருக்கிறதோ, அதே போல அவ்விஷயமும் சரியாக அப்படியே நிச்சயமாக நடக்கும். அவர் யாவற்றையும் மறைவாக ஆக்கி வைத்திருக்கிறார். அதை அவர் ஒரு வழியில் அவ்வாறு செய்திருக்கிறார். யாவற்றையும் சபை அறியாதபடி மறைத்து வைத்திருக்கிறார். ஓ, நாம் அந்த ஆறுவிதமான காரியங்களைப் பற்றி படிக்கப்போகிறோமே, அதற்குள் நாம் போகையில், அப்பொழுது, எவ்வாறு அவர் இதெல்லாவற்றையும் சபை அறியாதபடி மறைத்து வைத்திருக்கிறார் என்பதை யும் அவ்வாறு அவர் செய்ததால், அவர் எப்போது வருவார் என்பதை சபை அறியாததால், சபையானது அசதியாயிராமல் விழிப்பாய் இருக்கட்டும் என்பதற்காக அவர் செய்தார் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் இப்பொழுது, சபைக் காலம் முடிவடையப் போகிறது. ஆகவே, அது வருகைக்காக இப்பொழுது ஆயத்தமாயுள்ளது. அது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. 73வேதப் புஸ்தகத்தில் மிக மிக முக்கியமான வேத வாக்கிய மாக இந்த ஒரு வசனம் இருக்கிறது. அது என்ன கூறுகிறது? அதுதானே யூத தேசத்தின் யூத மக்களின் காலத்தின் முடிவைப் பற்றி கூறுகிறது. இந்த வேதவாக்கியமானது, எழுபது வாரங்களைப்பற்றிய இவ்வேத வாக்கியங்களானது, தானியேல் ஆரம்பித்த அவ்வேளை துவங்கி, உலக முடிவின் காலம் முடிய உள்ளதைப் பற்றி வெளிப்படுத்தி, சரியாக அந்த நேரத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. அது மகத்தான நேரங்காட்டிகளில் ஒன்றாகக் காணப்படுகிறது. ''அந்த வாரத்தின் கிழமை என்ன என்பதை அறிய வேண்டுமானால், காலண்டரைப் பாருங்கள்'' என்றும் “என்ன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிய வேண்டுமானால், யூதர்களைப் பாருங்கள்'' என்றும் நான் கூறுவதுண்டே, அதை எத்தனை பேர்கள் கேட்டிருக்கிறீர்கள்? அது சரிதான். இங்கிருந்து எடுக்கப்பட்ட தேவனுடைய காலண்டர் அங்கே இருக்கிறது. எந்தவொரு வேத விற்பன்னரும், வேத வல்லுனரும், எவரும் கூட யூதர்கள் தான் காலத்தைச் சுட்டிக் காட்டும் கடிகாரமாக இருக்கிறார்கள் என்பதைக் கூறிவிடுவர். இப்பொழுது என்ன சமயம் நமக்கு இருக்கிறது? நாம்... மக்கள் உஷணமடைந்துள்ளனர்... ஓ, நான்..... புறஜாதிகளுக்கும் அதற்கும் சம்மதமேயில்லை. இந்த ஏழு முத்திரைகள், ஏழு வாதைகள், ஏழு ஆபத்துக்கள், ஏழு எக்காளங்கள் ஆகியவற்றுக்கு அவர்களோடு சம்மந்தமேயில்லை. புறஜாதி சபையாகிய நமக்கும் அதற்கும் சம்மந்தமேயில்லை. அது இஸ்ரவேல் மக்களைப் பற்றினதாக மட்டுமே இருக்கிறது. (எழுபது வாரங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கி யோன்) ''தானியேலே உன் ஜனங்கள் மேலும், எருசலேமின் மேலும்'' என்று தான் சொல்லப்பட்டது. 74இப்பொழுது, யூதர்கள் தங்களுடைய சுய தேசத்தில் வந்திருக்கும் போது மாத்திரமே தேவன் அவர்களோடு இடை படுகிறார் என்ற உண்மைகளையும் இது தெரியப்படுத்துகிறது. அல்லேலூயா! அங்கே, சரியாக அங்கேதான் நான் மையப் பகுதியைப் போய் தொட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். தானியேலின் காலத்திலிருந்த இஸ்ரவேல் காலத்திலிருந்து அவர்கள் கணக்கிட்டு... ஒரு பெரிய எழுத்தாளர்... அவரைப் பின்பற்றுகிறவர்கள் சிலர் இங்கேயிருக்கிறார்கள், ஆகவே நான் அதை கூறமாட்டேன். ஆனால் அக்காரணத்தினால் தான் அவர்களிடத்தில் தவறான விஷயங்களெல்லாம் உள்ளது. 75ஏழாம் நாள் ஆசாரிப்பு சபையாக ஆவதற்கு முன்னால் அச்சபையார் மில்லர் என்பாரைப் பின்பற்றிக் கொண்டிருந்த போது, 1919-ல் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் தங்களுக்கு செட்டைகளை உண்டாக்கிக் கட்டிக் கொண்டு, அன்று ஒரு நாள் காலையில் பறக்கப்போகிறோம் என்று கூறி எழுந்தார்கள். அதைப் பற்றி நீங்கள் 'கூரியர்'' என்ற செய்தித்தாளில் பார்த்திருக்கிறீர்கள். அவர்கள் அந்த மில்லரைட்டுகள் அவர்கள் தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி போதிப்பார்கள். பார்த்தீர்களா? சில காலத்திற்குப் பிறகு, அவர்களுடைய தீர்க்கதரிசினியாகக் கருதப்பட்ட திருமதி எல்லன் வொயிட் என்ற அம்மையாரால், தங்களை மாற்றியமைத்துக் கொண்டு தங்களைத் தானே செவன்த் டே அட்வென்டிஸ்டுகள் (ஏழாம் நாள்காரர்கள் - தமிழாக்கியோன்) என்று அழைத்துக் கொண்டார்கள். இப்பொழுது அவர்கள் தங்களுடைய பெயரை, ''தீர்க்கதரிசனத்தின் சத்தம்'' என்று மாற்றிக் கொண்டு விட்டார்கள். ஒரே விதமான மதக் கோட்பாட்டுக்கு மூன்று வெவ்வேறு பெயர்கள். 76இப்பொழுது, அவர்கள் தவறாயிருக்கிறார்கள். ஏனெனில், இந்த எழுபது வாரங்களை யூதர்கள், புறஜாதிகள் ஆகிய இருவருக்குமே சம்பந்தப்படுத்திப் போதிக்கிறார்கள். ஆனால் ஆண்டவரோ, இங்கே, 'அது உன் ஜனங்கள் மேல்...'' என்று தான் குறிப்பிட்டுள்ளார் பாலஸ் தீனாவுக்கு வெளியே யூதர்கள் இருக்கையில் அவர்களோடு தேவன் இடைபடுவதேயில்லை. மேசியா 72வது வாரத்தில் மேசியா சங்கரிக்கப்பட்டார் (தமக்காக அல்ல, நமக்காக) அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் சிதறடிக்கப் பட்டார்கள்; சமீபத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் தங்கள் சுயதேசத்திற்கு வந்தனர். அதுவரைக்கும் அவர்கள் ஒருக்காலும் திரும்பி வரவேயில்லை. ஆகவே அந்த இடைப்பட்ட காலமானது சபைக் காலத்தின் நிமித்தமாக அந்தக் கணக்கில் சேர்க்கப்படவேயில்லை நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்களா? (சபையார் ''ஆமென்'' என்று கூறுகின்றனர்ஆசி) அது 1919ம் ஆண்டு அல்ல. ஒரு காரியம் 1919- இல் நடைபெற்றது என்பதைக் குறித்து நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஆனால் அதுதானே, அந்த மூன்றாவது தூதனின் செய்தியானது உரைக்கப்பட்டபோது நடைபெற்றதாகும். அப்போது தான் சரியாக அந்த ஆபத்து' புறப்பட்டுச் சென்றது. ஆனால் அது அது அல்ல. .. யுத்தமானது மர்மமான முறையில் நின்று போன போதுதான் ஆகும். 7ம் அதிகாரத்திற்கு நாம் போகும் போது அதைக் குறித்துப் பார்க்கலாம். அத்தூதன், ''ஊழியக்காரராகிய யூதர்கள் முத்தியிரையிடப்பட்டுத் தீருமளவும் பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருங்கள்'' என்று தன் செய்தியைக் கூறினான். அதைப் பற்றி நான் அநேக சமயங்களில் பிரசங்கிக்க நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அவர்கள், புறஜாதிகளின் காலமெல்லாம் முடிந்து கடந்து செல்லும் வரையிலும் காத்திருந்தார்கள். அதன் பிறகு அவர் வரும் பொழுது, 1,44,000 யூதர்களை முத்திரையிடுகிறார்; அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிப்படுத்தின விசேஷம் 7ம் அதிகாரத்தில் 1,44,000 பேர்கள் முத்திரையிடப்படு கின்றனர். நீங்கள் அதை படித்திருக்கிறீர்கள். ஏற்கெனவே, “நான் பார்த்த போது, இதோ, தேவனுக்கு முன்பாக சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும், ஜனங்களிலும், பாஷைக் காரரிலுமிருந்து வந்ததும் திரளான கூட்டமாகிய ஜனங்கள் வெள்ளை அங்கி தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு (யோவான் அவர்களைப் பார்த்தான்). அல்லேலூயா, ஆமென், மகிமையும் ஞானமும் கனமும் வல்லமையும் பெலனும் என்றென்றைக்கும் நமது தேவனுக்கே உண்டாவதாக; ஆமென்'' என்று அவர்கள் ஆர்ப்பரித்தார்கள் (வெளி. 7:9-12). 77யோவானால் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவன் திரும்பி சீனாய் மலையின் மேல் (மகிமை!) ஸ்திரீகளால் (சபைகளால்) கறைப்படாத 1,44,000 பேர்களாகிய யூதர்களைக் காண்கிறான். அவர்கள் லூத்தரன், மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியான் போன்ற எந்தவொரு ஸ்தாபனத் தையும் சார்ந்து கொள்ளவில்லை, ஆனால் அவர்கள் துவக்க முதலே யூதர்களாகவே இருந்து தங்கள் யூத ஆசார நெறிகளை வழுவாது காத்து வந்தவர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் தங்களுடைய ஆலயத்தை சீனாய் மலையின் மேல் கொண்டிருந்து, அங்கே தொழுது கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். அவர்கள் தான் அந்த 1,44,000. சபையானது மகிமையில் எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவர்கள் வருகிறார்கள். எனவே திரு. ஸ்மித் அவர்கள் தவறாயிருக்கிறார்கள். அவர் தவறாகத்தான் இருக்க வேண்டும்; ஏனெனில் இதை அவர் 1919இல் முடித்து அதிலிருந்து 1,44,000 பேர்களைப் பற்றிய காரியத்தை துவக்குகிறார். அப்படியானால் நீங்கள் ரஸ்ஸலைட்டு கள் போதனைகளுக்கு மீண்டும் வந்துவிடுகிறீர்கள். அது 1914 - இல் இயேசு வந்து, தமது சபையை 1919-இல் எடுத்துக் கொண்டு விட்டார் என்றும், இப்பொழுது, அவர் தாமே கண்ணுக்குப்புலனாகாத ஒரு இரகசியமான சரீரத்தில் இருந்து கொண்டு பூமி முழுவதும் சுற்றி வந்து, ரஸ்ஸலைட்டு களாகயிருந்த தாத்தா, பாட்டிகளையெல்லாம் கல்லறைகளி லிருந்து உயிர்த்தெழச் செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள். சுத்த அபத்தம் இது! தேவனுடைய வார்த்தைக்கு பொருத்த மற்றதாக இது இருக்கிறது. அது சரியானதாக தோற்ற மளிக்காது. இல்லை, ஐயா, அது சரியாக இருக்காது. 78ஆனால் தேவனிடத்திலிருந்து சத்தியம் இருக்கிறது. தேவன் ஒருவர்தான் அதை வெளிப்படுத்தி, அதை சரியாக அதற்குரிய இடத்தில் வைத்து மிகச் சரியாக நமக்கு காண்பிக்க முடியும். அவர் அதைச் செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன். எனக்கு அது என்னவென்று தெரியாது. நான் உண்மையைச் சொல்லுகி றேன்.... எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அதைச் செய்வார் என்று நான் விசுவாசித்துக்கொண்டிருக்கிறேன். இதை நீங்கள் மனதில் கொள்ளுங்கள். ஆகவே நீங்கள் இதைக் காணுங்கள். இஸ்ரவேல் நாட்டிற்கு யூதர்கள் போகிற வரையிலும் தேவன் அவர்களோடு இடைபடவே மாட்டார். 79இஸ்ரவேலுக்குப் போவதைக் குறித்து பேசிக்கொண்டு இங்கே ஒரு சகோதரன் உட்கார்ந்துகொண்டிருக்கிறார், அவருக்கு நான் இதைத் தான் கூற முயற்சிக்கிறேன். இஸ்ரவேலை விட்டு விலகியிருங்கள்! யூதர்களை மனந்திரும்பச் செய்து குணப்படுத்த வேண்டும் என்று பேசுகிறவர்களே, நீங்கள் யாவரும் அவர்களை விட்டு அகன்று விடுங்கள். இந்த செய்தியானது முடிவடையும் முன்னர், ஒரே இராத்திரியில் வார்த்தையாலும் ஆவியாலும் இஸ்ரவேல் முழு ஜாதியாராக இரட்சிக்கப்படுவார்கள் என்பதை நீங்கள் காண்பீர்கள்; இது கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால் என்பதாக இருக்கிறது. வேதம் அவ்வாறே கூறுகிறது. ஆனால் சுவிசேஷமானது அவர்களுக்கு கூட இல்லை. அங்கே அவர்களுக்குள் சில மதம் மாறுபவர்கள் யூத சமயத்தை விட்டு வெளியேறி வந்து இரட்சிக்கப்படுகிறார்கள். அது உண்மைதான். என் முழு இருதயத்தோடு நான் அதை விசுவா சிக்கிறேன். ஆனால் நினைவில் கொள்ளுங்கள்; இஸ்ரவேல்; தங்கள் சுயதேசத்தை விட்டு வெளியேறியிருக்கையில், அவர்கள் இரட்சிக்கப்படுவதேயில்லை. இப்பொழுது அவர்கள் தங்கள் தேசத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளிலே முழு தேசமாக அவர்கள் யாவரும் இரட்சிக்கப்படுவார்கள், வேதம் அவ்வாறு கூறுகிறது. ஒரு நாளானது இஸ்ரவேலர் எல்லோரையும் முழுவதுமாக தேவனிடத்தில் திரும்பக் கொண்டு வரும். அப்படிப்பட்டதான மகத்தான காரியம் இந்நாட்களில் ஒன்றில் இஸ்ரவேலை சந்திக்கும். அது அத்தேசம் முழுமையையும் அசைக்கும். ''ஒரே நாளில் நீர் இதைச் செய்தீர்'' என்று தீர்க்கதரிசி முழக்கமிட்டான். ஒரே நாளில் அவர்கள் அதைக் காண்பார்கள். 80மகத்துவமுள்ள காரியம் அங்கே உண்டாயிருக்கும். எனது கருத்து என்னவெனில், அவர்களுக்கென ஒரு மகத்தான தீர்க்க தரிசி இஸ்ரவேலுக்கு முன்பாக எழும்பி நின்று, மேசியா இன்னும் ஜீவிக்கிறார் என்றும் அவர்கள் புறக்கணித்த மேசியா வந்திருக்கிறார் என்று நிரூபிப்பான். ஏனெனில்... அவர்கள் இப்பொழுது இஸ்ரவேல் பைபிள் என்ற அந்த சிறிய வேதாகமத்திலிருந்து வாசித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அதை பின்னாலிருந்து முன் நோக்கி வாசிக்கிறவர்கள், அது யூத மொழியில் எழுதப்பட்டுள்ளதால் அவ்வாறு செய்வார் கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். லேவி பெத்ரூஸ் என்பவர் அவர்களுக்கு 10 லட்சம் வேதாகமங்களை அனுப்பி வைத்தார். அவர்கள் அதைப் படித்து விட்டு, “இந்த இயேசுவானவர்...'' அந்த யூதர்களெல்லாம் ஈரான் நாட்டிலிருந்து அங்கே கொண்டு வரப்பட்டவர்களாகும். அவர்கள் மேசியா என்றொரு காரியத் தைக் குறித்தே ஒருபோதும் கேள்விப்பட்டிராதவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் சுயதேசத்திற்கு புறப்பட ஆயத்தமாகையில், அவர்களுக்கென வந்த ஆகாய விமானங்களில் ஏற மறுத்து விட்டனர். அவர்கள் இன்னமும் பழைய கலப்பையை வைத்துத் தான் உழுது கொண்டிருந்தனர். அதைப் பற்றி 'லுக்'' என்ற பத்திரிக்கையில் படித்திருக்கிறீர்கள். எத்தனை பேர்கள் அதைப் பற்றிய கட்டுரைகளை 'லுக்' (Look) 'டைம்' (Time) ஆகிய பத்திரிகைகளில் படித்தீர்கள்? அவர்கள் விமானங்களில் ஏற மாட்டோம் என்றார்கள். அந்த வயது சென்ற அவர்களுடைய ரபீ அங்கே நின்று, ”நாம் நம்முடைய சுயதேசத்திற்கு கழுகின் செட்டைகளில் கொண்டு செல்லப்படுவோம் என்று நம்மு டைய தீர்க்கதரிசி கூறுயிருக்கிறதை நினைவில் கொள்ளுங்கள்'' என்று கூறினார். தேசங்கள் உடைகின்றன; இஸ்ரவேல் விழித்தெழுகிறது வேதம் முன்னுரைத்த அடையாளங்கள் இவைகள் புறஜாதி நாட்கள் எண்ணப்படுகின்றன அச்சங்கள் நிரம்பியுள்ளன சிதறியவரே உமக்குச் சொந்தமானதிற்கு திரும்பிடுவீர் நீங்கள் விழித்துக்கொண்டுவிடுவது நல்லது. நீங்கள் அதைப்பற்றி திரும்ப திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டே யிருக்கிறீர்கள்; ஆனால் இந்நாட்களில் ஒன்றில் இனிமேல் கேட்க முடியாதபடி அது கடைசி வேளையாக இருக்கப்போகிறது. 81இஸ்ரவேல் தன் சுயதேசத்திற்குத் திரும்பிக்கொண்டிருக் கிறது. தேவன் எந்த நாளில் இஸ்ரவேலை ஒரு தேசமாகத் தீர்மானிக்கிறாரோ, அந்த நாள் முதற்கொண்டு தான் வேறெந்த வொரு புறஜாதியானும் இரட்சிக்கப்படமாட்டான். அப்பொழுது இந்த எழுபது வாரங்களைப் பற்றிய விஷயத்திலிருந்து அதை நிரூபிப்பேன். நான் வானவியல் காலண்டரையும், ஜூலியன் காலண்டரையும் வானவியல்.... ரோமானியக் காலண்டரையும் நான் எடுத்து கொள்ளப் போகிறேன். எங்கோ ஏதோ ஒன்று இருக்கிறது. தேவன் அதைப்பற்றி அறிவார். அவரால் அதை வெளிப்படுத்த முடியும். ஜூலியன் காலண்டருக்கு ஒரு வருடத்திற்கு 365 '/, நாட்கள் உண்டு என்பதை நான் அறிவேன். எனவே, அவை யாவும் கலந்து போய்க் கிடக்கின்றன. ஆனால் உண்மை எங்கோ உள்ளது. 82அநேக சபைகளும், அநேக ஸ்தாபனங்களும், அநேக மக்களும், சிலர் இதை வணங்கிக்கொண்டும், சிலர் ''மரியே வாழ்க'' என்று கூறிக்கொண்டும் இன்னொன்றை வணங்கிக் கொண்டும், இவ்வாறு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் எங்கோ ஒரு சத்தியமானது இருக்கவேண்டும். ஏதோ ஓரிடத்தில் தேவன் என்னப்பட்ட ஒருவர் இருக்கவேண்டும். எங்கோ ஒரு செய்தியானது இருக்கவேண்டும். கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்புகிறதையும், இருதயத்தின் இரகசியங்களைப் பகுத்தறிந்து கூறுகிற வரத்தையுடையவர்களைப் போல் பாவனை செய்து கொண்டும், இன்னும் இதைப்போல் பல்வேறு விதமான காரியங்களைக் கொண்டவர்களாயும் செயல்படுகிறதையும் நான் காண்கிறேன். ஆகவே இந்த போலிகள் எல்லாம் ஏதோ ஒரு அசலான நிஜமான ஒன்றைப் பார்த்துத் தான் செய்யப்படுகிறது. ஆகவே அந்த அசலான நிஜமானதொன்று எங்கோ இருக்கிறது. 83மக்கள் மாம்சத்தில் இருந்துகொண்டு, சப்தமிட்டுக் கொண்டும், ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டு, எல்லாவிதமான ஜீவியங்களையும் ஜீவித்துக்கொண்டும் இருக்கிறதை நான் காண்கிறேன். எங்கோ ஒரு இடத்தில் அசலான பரிசுத்த ஆவி இருந்தாக வேண்டும். தேவ பக்தியுள்ளவர்களைப்போல் மக்கள் நடிக்கிறதையும், ஆழ்ந்த பற்றுடையவர்களைப் போலவும் நடக்க முயற்சிக்கிறதையும் நான் காண்கிறேன். உண்மையான தேவன் எங்கோ இருக்கிறார் என்பதை நான் அறிந்திருக்கிறேன். எங்கோ ஒரு உண்மையான ஆவி இருந்து கொண்டுதானிருக் கிறது. ஏனெனில் அந்த பழைய போலியானவன், அந்தப் பழைய மாய்மாலக்காரன், அந்த அசலைப் போலவே உருவாகி யிருக்கிறான். அங்கே உண்மையான ஒரு மனிதன், ஒரு ஜனக் கூட்டம், ஒரு சபை, ஒரு தேவன் இருக்கத்தான் வேண்டும். எங்கோ உண்மையானதொன்று இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் இந்தப் போலிகள் எல்லாம் அந்த அசலானவை களைப் பார்த்துத்தான் அதைப் போல நடித்துக்கொண்டு வந்திருக் கின்றன. ஆகவே எங்கோ அசலானது இருக்கத்தான் செய்கிறது. இந்த சபைக்கு உங்களுடைய வரங்களைப் பற்றி கூறியிருக் கிறேன். உங்களுடைய வரங்களை கவனித்துப் பாருங்கள். அவை களை வேதப்பிரகாரமாக வைத்திருங்கள். வானங்கள் பூராவும் உண்மையானவைகளைக் கொண்டிருக்கையில் பதில்களை எடுத்துக்கொள்ளாதீர்கள். உண்மையானவைகளையே நாம் பாதுகாத்து வைத்துக்கொள்வோம். உண்மையானவைகளையே பெற்றுக் கொள்வோம். அல்லாவிடில் நமக்கு ஒன்றுமே வேண்டாம். ஆமென்! 84இப்போது, முடிவாக, இஸ்ரவேல் தன் சுயதேசத்தில் இருக் கையில் மாத்திரமே தேவன் அவர்களோடு இடைப்படுகிறார் என்பது ஒரு உண்மையாயிருக்கிறது. நாம் எடுத்துக் கொள் வோமாக... தேவன்..... ஆபிரகாம் சுயதேசத்தை விட்டு எகிப் தில் போயிருக்கும் போது என்ன நடந்தது? தேவனுடைய சித்தத்தை விட்டு அவன் விலகிப் போய்விட்டான், ஆகையால் சுயதேசத்திற்கு திரும்பி வருமட்டும் அவன் ஒருபோதும் ஆசீர்வதிக்கப்படவேயில்லை. அவன் சுயதேசத்திற்கு திரும்பி வருகிற வரையிலும், தேவன் அவனுக்கு ஒரு தரிசனத்தைக் கூட கொடுக்கவில்லை. அவனோடு பேசவேயில்லை. இஸ்ரவேலைப் பாருங்கள், அந்த மக்கள் எகிப்தினுள் அனுப்பப்பட்டிருந்தபோது, அங்கே அவர்களிருந்த அந்த நானூறு ஆண்டுக்காலம் முழுவதும் ஒரு அற்புதம் கூட, ஒரு அடையாளம் கூட அவர்கள் மத்தியில் நடக்கவேயில்லை. வேத வரலாற்றில் அதைப் பற்றி குறிப்பு எதுவும் இல்லை. அதே பழைய காரியங்கள் தான்; ஆலயத்திற்குப் போவதும், ஆட்டுக் குட்டியைப் பலியிடுவதும், “மரியே வாழ்க'' என்று வழக்கம் போல் கூறுவதும், அல்லது இதைப் போல் ஏதாவது ஒன்றை திரும்பத் திரும்ப உச்சரிப்பதும் தான் நடைபெற்று வந்தது. அடுத்த ஆண்டிலும் அதேதான். மதகுருக்கள் யாவரும் தர்க்கித்தனர். 'ரபீ இன்னாரைத் தேர்வு செய்தோம். அவர் நல்ல பேரறிவாளர். அவருக்கு எகிப்தியர்களைப் பற்றி நன்கு தெரியும்'' என்றெல்லாம் பேசிக்கொண்டனர். பிரதானமான காரியம் என்னவெனில், அவர்களும் எகிப்தியரும் ஒன்றுபோலவே இருந்தனர். 85அதே காரியம் தான் சபைக்கு நடந்திருக்கிறது. நாம் யாவரும் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் என்ப வர்களாக ஆகும்படி போய்விட்டோம். ''எங்களுக்கு ஹார்ட் போர்ட் பல்கலைக்கழகப் பட்டம் இருக்கிறது'', ''எங்களுக்கு இந்த இடத்திலிருந்து பட்டம் உள்ளது. அல்லது பாப் ஜோன்ஸ்இல் கொடுத்த பட்டம்'', ''எங்களுக்கு இளங்கலைப் பட்டம் உள்ளது'', “எங்களுக்கு டி.டி.பட்டம் அல்லது எல்.எல்.டி பட்டம் உள்ளது'' என்றெல்லாம் கூறிக்கொள்ளுகிறார்கள். இவைகளெல்லாம் இருந்தும் என்ன பயன்? இதெல்லாம் ஒரு கூட்டம் அபத்தம். எகிப்தில் இருந்ததைப் போலவே இவை யாவும் உள்ளன. 86இஸ்ரவேலர் தங்களுடைய சுய தேசத்திற்கு திரும்பி வருகிற வரையிலும் ஒருபோதும் அவர்களோடு தேவன் இடை படவேயில்லை. நான் கூறுவதை கேளுங்கள். கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், சபையானது தனது சுய தேசமாகிய இந்த நேரத்திற்குரிய செய்திக்குள் திரும்பி வராத வரையிலும், தேவன் சபையோடு இடைபடமாட்டார். மூலமுதலானதற்கு திரும்பி வாருங்கள்! உங்களுடைய மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு , பிரஸ் பிடேரியன் கருத்துக்களை விட்டு அகன்றிடுங்கள்; பெந்தெ கொஸ்தேயினரே, அசெம்பிளீஸ் சபையோரே, ஒருத்துவ கூட்டத்தினரே, திரித்துவ கூட்டத்தினரே, ஐந்து தத்துவக் கூட்டத்தினரே, அது எதுவாயிருந்தாலும் சரி, சர்ச் ஆஃப் காட் நசரேய சபைக்காரரே, யாத்திரைப் பரிசுத்த சபையோரே, சர்ச் ஆஃப் காட் சபையோரே, இவை யாவும் அந்திகிறிஸ்துவின் இயக்கங்களாகும், இவைகளை விட்டு அகன்றுவிடுங்கள். இது உலகைக் கலக்குகிறது என்று நான் உணருகிறேன். அவையாவும் தவறாயும், பிசாசினால் உண்டானவைகளாயும் உள்ளன. அவை கள் ஒவ்வொன்றிலும் தேவ மனிதர்கள் உள்ளனர். அவ்வியக்கங்கள் ஒவ்வொன்றிலும் தேவ ஜனங்கள் உள்ளனர். ஆனால் அந்த ஸ்தாபனங்களோ தேவனால் உண்டானவைகள் அல்லவே அல்ல. தேவன் அவைகளை ஒருபோதும் ஆசீர்வதிக்க வே மாட்டார். அவர் ஒருபோதும் அப்படிச் செய்ததில்லை. 87இவ்வொலி நாடாவை கேட்கிற எந்தவொரு வரலாற்று ஆசிரியரையும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். என்னவெனில், கடந்த காலத்தில் எந்தவொரு சபையாகிலும் அது ஸ்தாபனமாக ஆகும் பொழுது, அதற்குப் பிறகு தேவன் அதை இன்னமும் புறக்கணிக்காமல் தான் இருந்தார் என்பதை நிரூபித்து எனக்கு எழுதி தெரியப்படுத்துங்கள் பார்க்கலாம். அது ஸ்தாபனமாக ஆன பிறகு தேவன் அதனோடு இடை படவேயில்லை. லூத்தரன் சபையை, வெஸ்லியின் மேதோ டிஸ்டு சபையை பெந்தெகொஸ்தேயினரை மீண்டும் அவர் எப்பொழுதாவது எழுப்பினாரா என்பதை எனக்குச் சொல்லுங் கள் பார்க்கலாம். தேவன் அப்படி ஒருபோதும் செய்யவில்லை. அந்த ஸ்தாபனமானது அங்கேயே கிடந்து புழு அரித்து அழுகிக் கெட்டுப் போய்விட்டது. தேவன் தனி நபர்களைத் தான் எடுத்து, மக்கள் அவர்களுடைய சுயதேசத்திற்கு திரும்பி வரும்படி சுட்டிக்காட்டவே பார்க்கிறார். அந்த தனிநபராகிய மனிதனோ, மிகவும் பெலவீனமாக இருந்து, பேடியாக இருந்து, ஏதோ ஒரு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஒரு ஸ்தாபனத் தையே உண்டாக்கிக்கொண்டு, அதை முன்னிலும் அதிகமாக இரட்டிப்பான மடங்கு நரகத்தின் மகனாக ஆக்கிப் போடுகிறான். 88ஆனால் எங்கோ ஓரிடத்தில், நிச்சயமாக, யேகோவா தனக் கென ஒரு மனிதனை உடையவராயிருக்கிறார். அவர் அம் மனிதன் மேல் தன் கரங்களை வைப்பார்; அவன் அந்த அவபக்தியுள்ள ஸ்தாபனங்களோடு ஒத்துப்போகாமல், மக்களை கிறிஸ்து இயேசு வாகிய கன்மலையிடம், மூலமுதலான பெந்தெகொஸ்தே அனுப வத்திற்கு, அசலான அற்புத அடையாளங்களுக்கு விசையுடன் திரும்பக் கொண்டு வருவான். அவருக்கு எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒரு மனிதன் இருக்கிறான். அவன் எந்தவொரு உபத்திர வத்திலும் நிலைகுலைந்து போகாதவனாயும், ஊக்கமிழக்காத வனாயும், பெலமிழந்தவனாக இல்லாமலும், வீழ்ச்சியடைந்த வனாகவும் இல்லாமல் வார்த்தையோடு நிலைத்திருக்கிற வனாகவும் இருப்பான். 89இஸ்ரவேல் தன் சொந்த தேசத்திற்கு திரும்பிப்போனா லொழிய அது வரையிலும் தேவன் அவர்களை ஆசீர்வதிப்ப தேயில்லை. மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், கத்தோலிக்கனே, யாத்திரைப் பரிசுத்த சபையே, நசரேயனே, சர்ச் ஆஃப் க்ரைஸ்ட் சபையோனே, அல்லது பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பதேயில்லை. அந்த விதமாக தேவன் உங்களை ஆசீர்வதிக்கமாட்டார். பெந்தெ கொஸ்தே நாளில் சம்பவித்தது போலவே உள்ள மூல பெந்தெ கொஸ்தே அனுபவமாகிய உங்கள் சுயதேசத்திற்கு திரும்பி வாருங்கள். பெந்தெகொஸ்தே நாளிலே ஜீவனுள்ள தேவனு டைய வல்லமையானது அவ்வாயிரக்கணக்கான மக்களை மாற்றி, அவர்களுடைய இதயங்களை தேவனுடைய அக்கினி யால் பற்றயெரியச் செய்தது. அவ்வக்கினி, போலியான அடையாளங்களையல்ல. ஏதோ ஒரு பொய்யானதும், மனோ வசியமானது மல்ல, ஏதோ ஒரு கொஞ்சம் பரிகாசத்துக் குரியது மல்ல. இன்று அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதான யாருக்கு மிகப் பெரிய கூடாரம், யாருக்கு மிகப் பெரிய கூட்டம் வருகிறது என்று மதிக்கெட்ட போட்டி போட்டுக்கொண்டதாக அது இருந்தது. இப்படியெல்லாம் இருப்பதினால் தேவனுக்கு என்ன பயன்? தேவனுக்கு பெரிய கூட்டங்களல்ல, இருதயத்தில் உத்தமத்தைக் கொண்டவர்களாய் மக்கள் இருப்பதையே தேவன் விரும்புகிறார். இங்கு நமக்கெல்லாம் ஒரு மதிகெட்ட போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே, அதைப் போலும் அல்லது. அசலான அடையாளங்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதற்கென்றால், நம்முடைய ஸ்தாபனத்திற்கு மேலும் ஆயிரம் மக்களை கூட்டி சேர்ப்பதற்காகத்தான். இது என்னே ஒரு வெட்கக்கேடான விஷயமாயிருக்கிறது! அது வெட்கக் கேடானது. அவர் நம்மை சத்தியத்திற்கு திரும்பி வரும் படி ஆவியானவரிடம் திரும்பி வரும்படி, ஜீவனுக்குத் திரும்பி வரும்படி கிறிஸ்துவுக்குள்ளான நெடுஞ்சாலையில் திரும்பி வரும்படி, சத்தியத்திற்கு திரும்பி வரும்படியாகவே விரும்பு கிறார். நாம் போய் கொண்டிருக்கிற நமது சுய வழியில் அவர் எப்படி நம்மை ஆசீர்வதிக்க முடியும்? அவர் அவ்விதமாக நம்மை ஆசீர்வதிக்கமாட்டார். 90இஸ்ரவேலர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு திரும்பி வருகிற வரையிலும், தேவன் அவர்களை ஆசீர்வதிக்க வேயில்லை. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்கள் திரும்பி வந்தபோது, அற்புத அடையாளங்கள் அவர்களுக்குள் நடக்க ஆரம்பித்தன. மோசே என்ற பெயருள்ள ஒரு மனிதனை தேவன் அவர்கள் மத்தியில் அனுப்பினார். மெருகூட்டப்பட்ட வேதசாஸ்திரத்தோடு மோசே அவர்கள் மத்தியில் வந்தானா? இளங்கலைப்பட்டத்தோடு அவன் அங்கே வந்தானா? அவன் அங்கே எல்.எல்டி. பி.ஹெச்.டி பட்டங்களோடு வந்தானா? அவன் யேகோவாவின் வல்லமையோடு, “இத்தேசத்திலிருந் தும் சுய தேசத்திற்குத் திரும்புங்கள்'' என்ற ஒரு செய்தியோடும் அங்கே வந்தான். சிறைப்பட்டோரே, உங்கள் சுயதேசத்திற்கு திரும்புங்கள். ஆமென். 91கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக யூதர்கள் தங்களுடைய சுயதேசத்திற்கு வெளியே பூமியின் நான்கு திசை களிலும் சிதறடிக்கப்பட்டவர்களாய் இருந்தனர். விபரமாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக நாம் எவ்வாறு இந்தச் செய்தியை வாரக்கணக்கில் நீடித்துக்கொண்டு செல்ல முடியும்! மேசியாவைப் புறக்கணித்த பொழுது ரோம சாம்ராஜ்யத்தால் எப்பொழுது இஸ்ரவேலர் சிதறடிக்கப்பட்டனர் என்பதை அவர்களுடைய வரலாற்றை திருப்பிப் பார்த்து நாம் கண்டு கொள்ளமுடியும். எவ்வாறு அவர்கள் வானத்தின் கீழே சகல ஜாதிகளுக்குள்ளும் துரத்தப்பட்டார்கள் என்பதையும் நாம் காணலாம். யாக்கோபு - இஸ்ரவேல் எவ்வாறு கோத்திரப் பிதாக்களை ஆசீர்வதித்தான் என்பதையும் கடைசி நாட்களிலே அவர்கள் அங்கே இருப்பார்கள் என்பதையும் குறித்து ஆதியா கமம் 44,45 அதிகாரங்களிலே திருப்பிப் பார்த்து, அங்கே அதைக் குறித்து காண்பிக்க முடியும். இஸ்ர வேலின் கோத்திரங்கள் ஒவ்வொன்றும் எந்தெந்த தேசத்தில் சிதறிப் போயிருப் பார்கள் என்பதைப் பற்றி முன்னுரைக்கப்பட்டதே அதைப் பற்றி சரியாக நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட முடியும். இன்று நாம் இங்கே இருக்கிறாம். 92நாம் அறிந்திருக்கிற இந்த யூதன் உண்மையான யூதனல்ல. உண்மையான யூதன் என்னப்பட்டவன், உண்மையான வைதீக மான மார்க்க நெறி பிறழாதவன் ஆவான். அவன் தன்னை உலகத்தின் காரியங்களால் அசுசிப்படுத்திக் கொள்ளாதவனும், புறப்பட்டுப்போய் மற்ற சபைகளைச் சாராதவனாகவும் இருப்பான். அப்படிப்பட்டவர்கள் தான் அங்கே திரும்பிப் போய்க் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் பாலாடைக்கட்டி (Cheese), ரொட்டி ஆகியவைகளைப் புசித்து, மலைப்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர், பழைய நகரத்தினுள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை. இருமருங்கிலும் இயந்திரத் துப்பாக்கிகள் பயமுறுத்திக் கொண்டிருக்கும், ஆளில்லாத பிரதேசத்தில் இப்பக்கமாக அவர்களுக்கு ஒரு நகரம் கட்ட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் அவள் துளிர்விட ஆரம்பித்து விட்டாள். ஆமென், ஆமென்! நேரமானது நெருங்கிவிட்டது. 93அங்கே இஸ்மவேலும், ஈசாக்கும் இன்னமும் தேசத்தைக் குறித்து தகராறு பண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அத்தேசமோ இஸ்ரவேலுக்கு சொந்தமானது. நீங்கள் அந்த புதிய எருசலேமுக்குப் போக நேர்ந்தால், அவர்கள் உங்களை பழைய எருசலேமுக்கு வருவதற்கு விடமாட்டார்கள். நீங்கள் முதலில் அங்கேதான் போக வேண்டும், இஸ்மவேலின் புத்திர ராகிய அவ்வரேபியர்கள் உங்களுக்கு எல்லாவற்றையும் விளக்கிக்கூறவிடவேண்டும், அப்பொழுது அவர்கள் உங்களை அந்த மறுபக்கத்திற்குள் இட்டுச் செல்வார்கள். ஆனால் பொறுத் துக்கொள்ளுங்கள்; தேவனுடைய பிள்ளைகள் அந்நகரத்தை முழு வதும் எடுத்துக்கொள்ளும் வேளையானது வருகிறது. அப்படித் தான் நடக்கப்போகிறது. எருசலேமானது திரும்பக் கட்டப் படும். அன்றாடக பலி செலுத்துதல் ஏற்படுத்தப்படும். அந்த கடைசி ஏழு வாரங்களுக்கென அவர்களோடு அந்திக்கிறிஸ்து உடன்படிக்கை செய்வான். அவ்வாரத்தின் மத்தியில் அவன் உடன்படிக்கையை முறித்துப் போடுவான். கத்தோலிக்கக் கொள்கைக்கு அவர்களைத் திருப்புவான். அரு வருப்பு சகலத்தின் மேலும் அவ்விதமாக வந்து பரவுதல். அதன் பின்பு முடிவானது வரும். கவனியுங்கள். 94எழுபது வாரங்கள், ஆம் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டு கள் அவர்கள் சிதறிப்போய்விட்டனர். அவர்கள் துரத்திவிடப் பட்டிருந்தனர். பார்வோனின் இருதயமானது அவர்கள் நிமித்த மாக கடினப்படுத்தப்பட்டது போலவே அவர்கள் நிமித்தம் இப்போதும் நடக்கும்படி அவ்விதமான மக்களாக அவர்கள் இருக்கிறார்கள். அவர் ஹிட்லருடைய இருதயத்தை அவர்கள் நிமித்தம் கடினப்படுத்தினார். பல இலட்சக்கணக்கானவர் கொலை செய்யப்பட்டனர். மனுஷ ஆத்துமாக்களாகிய குழந்தை கள் சிறுவர்கள், பெரியவர்கள் உள்ளிட்ட 6 மில்லியன் யூதர்களை கொன்று குவித்த இந்த ஐக்மேன் என்ற குற்றவாளியைப் பாருங்கள். ருஷியாவைப் பாருங்கள், நீங்கள் அவர்களை அங்கிருந்து துரத்திவிட்டீர்கள். அவர்கள் அவர்களை எவ்விடங்களிலும் துரத்திவிட்டனர். அவர்கள் அவர்களுடைய பண ஆசையினி மித்தமாக அசட்டை பண்ணப்பட்ட ஜனமாக இருந்தனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்தனர். ஆனால் அந்த சிறுபான்மை யினரான அவர்கள் பாலஸ்தீனத்திற்குத் திரும்பிக் கொண்டிருக் கின்றனர். ஆமென், சகோதரர்களே. 95அவள் தன் சுயதேசத்திற்குத் திரும்பி வரத் துவங்குவதை நீங்கள் காண்கையில்... 1,44,000 பேர்கள் என்ற எண்ணிக்கை கிடைப்பதற்குப் போதுமான ஜனங்கள் அங்கே வந்து விட்டார் கள். என்ன சம்பவித்துக்கொண்டிருக்கிறது? அவர்கள் தங்கள் யோசேப்பை அறிந்து கொள்ளுவார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஆம் ஐயா! அது சம்பவிப்பதற்காக அவர்கள் யாவரும் அங்கே காத்துக்கொண்டிருக்கின்றனர். அதற்குரிய சரியான அந்த வேளையானது... கடந்த ஆண்டில் தேசங்கள் அவர்களை ஒரு தேசமாக அங்கீகரித்து பிரகடனம் செய்துவிட்டனர். அது நடக்கும்போது, நாம் முடிவுக்கு சமீபமாக இருக்கிறோம். புறஜாதி சபையானது போய்விட்டிருக்கும். ஆகவே, எந்த நேரத்திலும் தேவன், “இஸ்ரவேல் என் ஜனங்களாயிருக்கிறார்கள்'' என்று கூற முடியும். அவ்வாறு ஆகும் பொழுது புறஜாதிகளின் காலம் முடிவடைந்து விடும். 96மத்தேயு 24ல் 'அவர்கள் மிதிப்பார்கள்'' என்று இயேசு கூறினார். (பாழாக்கும் அருவருப்பு). ''புறஜாதிகளின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப் படும்'' (லூக்.21:24). அது முடிவடையும் பொழுது, யூதர்கள் எருசலேமுக்குள் திரும்பி வந்து, ஆலயத்தையும் ஆலய வழிபாட்டையும் திரும்ப ஏற்படுத்துவார்கள். இனி அடுத்து வரும் செய்திகளில், எழுபது வாரங்கள், ஆறுவிதமான நோக்கங்கள் ஆகிய செய்திகளில் இவை யாவற்றையும் பற்றி நாம் பார்க்கலாம். இப்பொழுது, முடிக்கும் முன்னர், நான் அதை வாசிப்பேன், ஏனெனில், நாம் வீட்டுக்குப் போவ தற்குரிய நேரமானது ஆகிவிட்டது. பிறகு நாம் திரும்பவும் இன்றிரவு 7 மணிக்கு வந்தாக வேண்டும். 97முதலாவதாக... நீங்கள் இதை குறித்துக்கொள்கிறீர் களென்றால் எழுதிக்கொள்ளுங்கள். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் தானியேல் 9ம் அதிகாரம் 24ம் வசனம்... மீறுதலை தவிர்க் கிறதற்கும் - (1) பாவங்களைத் தொலைக்கிறதற்கும் - (2) அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும் - (3) நித்திய நீதியை வருவிக்கிறதற்கும் - (4); தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும் - (5); மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும் - (6), ஆகிய இவைகளைப் பற்றித்தான் இன்றிரவில் நாம் பேசப் போகிறோம். தேவன் நிறைவேற்றப் போகிறார். 98கொஞ்சம் பொறுங்கள், அதை நான் மீண்டும் எடுத்துக் கூறட்டும், முதலாவதாக, மீறுதலைத் தவிர்க்கிறதற்கும்; இரண்டாவதாக, பாவங்களைத் தொலைக்கிறதற்கும்; மூன்றா வதாக அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும்; நான்கா வதாக, நித்திய நீதியை வருவிக்கிறதற்கும்; ஐந்தாவதாக, தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும்; ஆறாவதாக மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணு கிறதற்கும். வேதத்திலிருந்து நான் அவைகளை உங்களுக்கு படித்துக் காலபிப்பேனாக. 24ம் வசனம். மீறுதலைத் தவிர்க்கிறதற்கும் - (1) பாவங்களைத் தொலைக்கிற தற்கும் - (2), அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், - (3), நித்திய நீதியை வருவிக்கிதற்கும் - (4), தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தை யும் முத்திரிக்கிறதற்கும் - (5), மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும் - (6), உன் ஜனத்தின் மேலும் (அது யூதர்கள்) உன் பரிசுத்த நகரத்தின் மேலும் (இஸ்ரவேல், யூதர்கள் எருசலேம்) எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. நடப்பிக்கப்படப் போகிற மேற்கண்ட காரியங்களைப் பற்றி அவனிடத்தில் கூறவே அவன் வந்தான். இவைகளுக்குப் பின்பு முடிவு உண்டாகும். இன்றிரவில் அவைகள் என்னவென்று நாம் காணலாம்; மேலும், அவர்களுக்கு நாம் எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதையும் காண்போம். அடுத்த ஞாயிற்றுக் கிழமையன்று, இந்த காலங்களைப் பற்றி உறுதி செய்யும் அடிப்படையான காரியங்களைப் பற்றிப் பார்த்து, அவைகளை சரியாக பொருத்தி, நாம் எங்கே நின்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காண் போமாக. நான் அவரை நேசிக்கிறேன். 99இஸ்ரவேல் தன் சுயதேசத்திற்குத் திரும்பிக் கொண்டிருக் கிறது. இஸ்ரவேல்... நான் இதைக் கூறுவேனாக. இது ஒலிப் பதிவு செய்யப்படவில்லை என்று எண்ணுகிறேன். இப்பொழுது கவனியுங்கள். இங்கே இருக்கிற என் ஜனங்கள் முன்பாக கூறு கிறேன். நான் எப்பொழுதும் ஒரு காரியத்தைக் குறித்து விசுவாசித்திருக்கிறேன். அதன் காரணம் என்னவெனில்... நான் மரிக்கும் முன்னர் இஸ்ரவேலை கர்த்தரிடம் திருப்பும் ஊழியத் தில் எனக்கு ஒரு பங்கு உண்டாயிருக்கும் என்பதே நான் விசு வாசித்து வந்தது ஆகும். ஏனெனில் அப்பொழுது... இஸ்வேலர் சிதறடிக்கப்பட்டு ஒரு ஜாதியாயிராமல் இருந்த இரண்டாயிரம் ஆண்டுகள் காலத்தில் முதன் முதலாக அது ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு, பான் அமெரிக்க நாடுகளால் பிரகடனம் செய்யப்பட்டு, அந்நாடுகள் வெளியிட்ட முதல் தேசப்படம் வெளிவந்தபோது, அதே மணி நேரத்தில் கர்த்தருடைய தூதன் என்னைச் சந்தித்து, சுவிசேஷத்தோடு என்னை அனுப்பினார். அது மே 7,1946 ஆகும். இப்பொழுது, இன்னொரு காரியம் நான் அறியத்தக்கதாக இருக்கிறது; அது பிள்ளைகளின் இருதயத்தை பிதாக்களுக்குத் திருப்புவது; பிதாக்களின் இருதயத்தை பிள்ளைகளிடம் திருப்புவது என்ற செய்தியாகும். மல்கியா 4ம் அதிகாரத்தை கவனியுங்கள். 3ம் அதிகாரம் அல்ல, 4ம் அதிகாரம். 100இன்னொரு விஷயம்; சகோ. ஆர்கன்ப்ரைட் அவர்களுடைய இடத்தில் நாங்கள் யூதர்களைச் சந்தித்த பிறகு, என் மகன் பில்லியும், நானும், சகோதரன் எர்ன் பாக்ஸ்ட்டரும் பாலஸ்தீனாவுக்குப் பயணமானோம். அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டார்கள்... லெவி பெத்ரூஸ் அங்கே அவர்களுக்கு வேதாகமங்களை அனுப்பியிருந்தார். அவர் கூறினார். “இந்த யூதர்கள் என்னிடம் வந்து, 'நீங்கள் ஒரு கூட்டம் இஸ்ரேலியத் தலைவர்களை அழைப்பீர்களென்றால், தங்களுடைய வழிபாட்டுச் சடங்குளைக் கொண்டிருக்கிற இந்தப் புதிய ரபிமார்களையல்ல, ஆனால் உண்மையான இஸ்ரேலிய தலைவர்களை ஒன்று சேர்த்து அழைப்பீர்களென்றால் ..... நாங்கள் இந்த புதிய ஏற்பாட்டை வாசித்திருக்கிறோம். மேசியா வரும் போது, சமாரிய ஸ்திரீ கூறியதைப் போல் அவர் எல்லாவற்றையும் கூறுவார். எங்களு டைய மேசியா ஒரு தீர்க்கதரிசியாயிருப்பார் என்று மோசே கூறியது எங்களுக்குத் தெரியும் என்றனர். நீங்கள் வேத வாக்கியங்களைக்கொண்டு, (இன்றிரவில் உள்ள செய்திகளில் நாம் இவற்றைப் பார்க்கலாம்) புறஜாதிகளின் காலம் இடையில் வரும்படியும் புறஜாதிகளுக்கு ஒப்புரவாகுதலின் காலம் உண்டாயிருக்கும்படியும், அவர்கள் குருடாக்கப்பட்டு, அவர்கள் இருதயங்கள் வெட்டுண்டு போகும்படி செய்யப்பட்டது என்பதையும், யோசேப்பின் காலத்தில் எவ்வாறு அவர்களு டைய இருதயங்கள் கடினப்படுத்தப்பட்டதோ அதே போன்று நடக்கவேண்டும் என்பதையும் நீங்கள் சுட்டிக்காட்டி பேச வேண்டும். பின்பு, எவ்வாறு நீங்கள் புறஜாதிகள் மத்தியில் நடத்தும் கூட்டங்களில் அவர்களை ஆவியானவரின் அசை வினால் பெயர் சொல்லி அழைக்கிறீர்களோ, அதைப் போலவே இவர்களையும் நீங்கள் அழைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் கூறினார்கள், ”இந்த இயேசுவானவர், மேசியாவாக இருப்பாரெனில், உம்முடைய வார்த்தைகள் உண்மையிருக்கு மானால், அப்போது அவர் மரித்தவராயில்லை, அவர் உயிரோ டிருக்கிறார். அவர் உயிரோடிருப்பாரெனில், அவர் தமது ஊழியக்காரர்களுக்குள், சீஷர்களுக்குள், வாசம் பண்ணுவேன் என்று வாக்குரைத்திருக்கிறார். அவ்வாறு ஒரு தீர்க்கதரிசிக்குரிய அடையாளத்தை செய்து காட்டினாரென்றால்; அப்பொழுது நாங்கள் அவரே மேசியா என்ற விசுவாசிப்போம். என்றார்'' எவ்வளவு பூரணமான காரியம், மிகவும் சரியாக இது இருக்கிறது. அப்பொழுது என்ன நடக்கும்? அத்தலைவர்களுக் குள், ஒரே நாளில் ஒரு தேசம் பிறந்து விடும். அவர்கள் ஒவ்வொருவரும், ''நாங்கள் அதை அறிவோம்'' என்று கூறுவார்கள். அந்த ரபீ சொன்னாரென்றால், அதுவே போதுமானது. ஒரே நாளில் ஜாதி பிறந்துவிடும். இஸ்ரவேல் என்னும் தேசம் ஒரே நாளில் பிறந்துவிடும். 101ஆகவே நான் எகிப்தில் உள்ள கெய்ரோவில், எனது வழிபயணத்தில் இருந்தேன், விமான நிலையத்தில் பயணிகள் உள்ளே வரும்படி விடுவிக்கும் அழைப்பு முடிய இன்னும் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்தான் மீதமிருந்தன. அவர்கள் பயணங்களுக்கான அழைப்பை விடுக்க இருந்தார்கள். அப்பொழுது நான் ஒரு இடத்தில் கருங்காலி மரத்தில் செய்யப் பட்ட யானை சிற்பம் தந்தம் பொருத்தப்பட்டு இருந்ததைப் பார்க்கச் சற்று நடந்து சென்றேன். பேப்பர் வெயிட்டாக உபயோகிப்பதற்காக என்னுடைய நண்பரான டாக்டர் சாம் அடெய்ர் அவர்களுக்கு அதை அனுப்பவிருந்தேன். நான் அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்பொழுது, “இப்பொழுது உரிய வேளையல்ல, பாலஸ்தீனத்தைவிட்டு நீங்கியிரு'' என்று யாரோ கூறுவது எனக்குக் கேட்டது. ''நான் தான் இவ்வாறு எண்ணிக்கொண்டிருக்கிறேனோ'' என்று நான் நினைத்தேன். நான் புறப்பட்டுப் போனேன். “இது உரிய வேளையல்ல'' என்று யாரோ என்னிடம் கூறினார். அப்பொழுது நான் ஒரு கொட்டகையின் பின்னால் சென்று என் தலையை தேவனுக்கு நேராக உயர்த்தி, “தேவனே, நீர்தான் என்னோடு பேசிக்கொண்டிருந்தீரா?'' என்று நான் கேட்டேன். “இது உரிய வேளையல்ல, பாலஸ்தீனத்தைவிட்டு அகன்று இரு. இது அதற்குரிய வேலையல்ல' என்று கூறினார். பிறகு நான் எனது டிக்கெட்டை எடுத்து அதை மாற்றிக் கொண்டு அங்கிருந்து ரோமாபுரி வழியாக போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனுக்குச்சென்று, அங்கிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பி வந்துவிட்டேன். 102அதற்குரிய வேளையானது அப்பொழுது வந்திருக்கவில்லை. புறஜாதிகளின் அக்கிரமத்தின் பாத்திரம் இன்னும் நிரம்ப வில்லை. ஆனால் ஒருநாளிலே அது நிறைவாகிவிடும். தேவன் தீர்க்கதரிசியானவன் ஒருவனை ஒரு நாளிலே அங்கே அனுப்பி அவர்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பார். தேவன் அந்த நபரை சீக்கிரமாக எழுப்புவார் என்று நான் விசுவாசிக்கிறேன். அது யாராயிருந்தாலும் சரி, அது வரும் என்று நான் விசுவாசிக்கி றேன். அதற்காகத்தான் நாம் இதைப் படித்துக் கொண்டிருக் கிறோம். நாம் மிகவும் சமீபமாக வந்துவிட்டோம். 103யூதர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் அதே நிமிடம் புறஜாதி சபையானது எடுக்கப்பட்டிருக்கும். பிறகு இங்குள்ள புறஜாதிகள் மேல் வாதைகள் விழும், உபத்திரவகாலம் வரும். பெரிய போதகர்கள் என்று சொல்லப்படக்கூடிய மனிதர் கள் எல்லாம் சபையானது உபத்திரவ காலத்தின் வழியாகச் செல்லும், என்று இவ்வேதத்தைப் படித்துக் கொண்டே எவ் வாறு கூறுகிறார்கள்! ஆனால் வேத வாக்கியங்களிலோ அவ்வாறு கூறக்கூடிய ஒரு வசனம் கூட இல்லை. அவர்களுக்கு ஒன்று கூட இல்லை. 104சமீபத்தில் ஒரு மனிதன் என்னிடத்தில் வந்து, ''சகோதரி மெக்ஃபெர்சன், சபையானது உபத்திரவ காலத்தின் வழியாகச் செல்லும், ஏனெனில், நாம் அக்காலத்தில் பிரகாசிக்கிற வெளிச்சங்களாக இருப்போம் என்று போதித்தார்கள்'' என்று கூறினார். அக்காலத்தில் அது இஸ்ரவேலரைத் தான் குறிக்கும், புறஜாதிகளையல்ல. புறஜாதி சபையின் காலம் ஏற்கெனவே முடிந்து போய்விட்டிருக்கும். அவர்கள் உபத்திரவ காலத்தின் வழியாக செல்ல வேண்டியதிருக்காது. வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றிவிட்டு, மீதியானவர்களோடு யுத்தம் செய்யப் புறப்பட்டுப்போனது (அது 17ம் அதிகாரம்) நித்திரை செய்யும் கன்னியர்... உண்மையான சபையானது ஏற்கெனவே போய்விட்டிருக்கும். அந்தக் காலத்தில் 'அந்த கடைசி வாரத்தில்' சபையானது கலியாண விருந்துக்கு போய் விடும். அப்போது கலியாண விருந்து நடைபெற்றுக் கொண்டி ருக்கும். அப்போது தான் உபத்திரவ காலமானது துவங்கும், அப்போது வெட்டுக்கிளிகளும் உபத்திரவங்களும் சபைகள் மேல் எழுப்பும். பிறகு முடிவில் 19ம் அதிகாரத்தில் அவள் தன்னுடைய மணவாளனுடன் வருவாள் (அல்லேலூயா), இராஜாதி இராஜா, கர்த்தாதி கர்த்தாவாக, இரத்தத்தில் தோய்த்த வஸ்திரம் தரித்தவராய் வருவார், அவரோடு பரலோக சேனைகளும் வெள்ளைக்குதிரைகள் மேல் ஏறி வர, அங்கே அவள் ஆயிரமாண்டு அரசாட்சியில் தன் ஸ்தானத்தை எடுத்துக் கொள்ளவருகிறாள். ஆமென்! ஓ! அவர் நாமம் துதிக்கப்படுவதாக, ஓ, நாமம் துதிக்கப்படுவதாக கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக அவர் நாமம் துதிக்கப்படுவதாக, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக இயேசு தான் அந்நாமம், இயேசு தான் அந்நாமம் இயேசு என்பது கர்த்தருடைய நாமம் இயேசு தான் அந்நாமம், ஓ, இயேசு தான் அந்நாமம் இயேசு என்பது கர்த்தருடைய நாமமாம் அவர் நாமத்தை மகிமைப்படுத்து, அவர் நாமத்தை மகிமைப்படுத்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்து, நாமத்தை மகிமைப்படுத்து, ஒ, அவர் நாமத்தை மகிமைப்படுத்து, கர்த்தருடைய நாமத்தை மகிமைப்படுத்து. 105அதை நீங்கள் எவ்வாறு செய்கிறீர்கள்? நீங்கள் அதை உங்கள் வாழ்க்கையில் மேன்மைப்படுத்துங்கள். ''அதோ அவர் கிறிஸ்துவின் ஊழியக்காரர்'' என்று அவர்கள் கூறத்தக்கதாக அப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள். அவ்வித மாகத்தான் நீங்கள் அவர் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டும். ஓ, நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? இப்பொழுது நமது சிறிய பாடலைப் பாடுவோம். வெகு காலத்திற்கு முன்பு ஒரு புல்லணையில் மானிடரை பாவங்களிலிருந்து இரட்சிக்க குழந்தை ஒன்று பிறந்தது. இதை நான் உண்மையாக அறிவேன்; அவரை யோவான் கடற்கரையில் கண்டான் என்றென்றும் ஜீவிக்கும் ஆட்டுக்குட்டியைக் கண்டான் (ஏழு முத்திரைகளை உடையவராய் அவர் ஒருவரே வானத்திலும் பூமியிலும் அதை கையிலெடுக்க முடியும்) நான் உண்மையாக அறிந்ததென்னவென்றால், வெகு காலம் முன்பு ஒரு புல்லணையில் பாவத்திலிருந்து மானிடரை இரட்சிக்க பாலகன் ஒருவர் பிறந்தார். அவரை யோவான் அக்கரையில் கண்டான் என்றென்றும் ஜீவிக்கும் ஆட்டுக்குட்டியவர் ஒ, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக ஓ, அவர் நாமம் துதிக்கப்படுவதாக ஓ, அவர் நாமம் துதிக்கப்படுவதாக, ஓ , கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக அவர் நாமம் துதிக்கப்படுவதாக நாமம் துதிக்கப்படுவதாக, கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 106நான் தொழுதுகொள்ள விரும்புகிறேன். நீங்கள் விரும்பு கிறீர்களா? நாம் சபைக்கு ஒரு பிரசங்கத்தை மட்டும் கேட்க வரவில்லை. அது ஆராதனையில் ஒரு பாகமாக இருக்கிறது. ஆனால் நாம் சபைக்கு தொழுதுகொள்ளவே வருகிறோம். ஆவியிலும் சத்தியத்திலும் தொழுதுகொள்ளவே வருகிறோம். நீங்கள் சத்தி யத்தை கேட்டிருக்கிறீர்கள். அது வார்த்தையாயிருக்கிறது. தொழுதுகொள்வது என்பது நீங்கள் உங்களையே அவருக்கு வெளியரங்கமாய் தெரியப்படுத்துவது ஆகும். ஓ, நான் அந்தக் கலிலேய மனிதனை நேசிக்கிறேன். அதன் இராகத்தை சற்று மீட்டி தாருங்கள். டெட்டி, அது உங்களுக்குத் தெரியுமா? நான் இப்பொழுது மறந்துவிட்டேன். நாம் முயற் சிப்போம். ஓ, நான் அந்தக் கலிலேய மனிதனை கலிலேயனை நேசிக்கிறேன். அவர் எனக்கு ஏராளம் செய்திருக்கிறார். என்பாவங்கள் அனைத்தையும் மன்னித்தார் எனக்குள் பரிசுத்த ஆவியை வைத்தார் ஓ, நான் நேசிக்கிறேன், அந்த கலிலேய மனிதனை நேசிக்கிறேன். ஆலயத்தில் ஜெபிக்க ஆயக்காரன் ஒருவன் சென்றான் 'கர்த்தாவே என் மேல் இரக்கமாயிரும்'' என்று அவன் கதறினான். அவனது எல்லாப் பாவமும் மன்னிக்கப்பட்டது. ஆழ்ந்த சமாதானம் அவன் உள்ளத்தில் பதிந்தது. “வந்து பாருங்கள் கலிலேயனாகிய இம்மனிதனை'' என்றான். அவர் எனக்கு ஏராளம் செய்திருக்கிறார், என் எல்லா பாவத்தையும் மன்னித்தார் என்னுள்ளில் பரிசுத்த ஆவியை ஈந்தார் நான் நேசிக்கிறேன், ஓ, அக்கலிலேயனாகிய அம்மனிதனை. மூடவனை நடக்கச் செய்தது, ஊமையன் பேசிடச் செய்தது, அன்போடு கடலில் பேசப்பட்ட அவ்வல்லமையே குருடரின் கண்கள் திறக்கப்பட்டன, அது கலிலேயனாகிய அம்மனிதனின் வல்லமையால் மாத்திரம் நடக்கும் என்பதை நான் அறிவேன், கலிலேயனாகிய அம்மனிதனை, அக்கலிலேயனை நான் நேசிக்கிறேன், அவர் எனக்குச் செய்தது அதிகம், என் பாவமெல்லாவற்றையும் அவர் மன்னித்தார் என்னுள்ளில் பரிசுத்தாவி ஈந்தார் ஓ, நான் நேசிக்கிறேன், கலிலேயனாகிய அம்மனிதனை நான் நேசிக்கிறேன் இதைக் கேளுங்கள். கிணற்றண்டையில் நின்ற பெண்ணின் பாவம் அனைத்தையும் அவர் கூறினார் அவளுக்கு ஐந்து புருஷர்கள் உண்டு என்பதையும் அவ்வேளையில் கூறினார் (அதைச் செய்தது அவரே) அவளது ஒவ்வொரு பாவமும் அவளுக்கு மன்னிக்கப்பட்டது. அப்பொழுது அவள், ''வந்து பாருங்கள் கலிலேயனாகிய இம்மனிதனை கலிலேயனாகிய அம்மனிதனை, அக்கலிலேயனை ஓ நான் நேசிக்கிறேன். அவர் எனக்குச் செய்தது எராளம், என் பாவமனைத்தையும் அவர் மன்னித்தார் என்னுள்ளில் பரிசுத்தாவியும் ஈந்தார் ஓ, நான் நேசிக்கிறேன், நான் கலிலேயனாகிய அம்மனிதனை நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கிறேன். நீங்கள் நேசிக்கிறீர்களா? என் முழு இருதயத்தோடும்; நீங்கள் அவ்வாறு செய்கிறீர்களா? அவர் அற்புதமானவராயிருக்கிறாரல்லவா? அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு (அவர் எப்படியிருக்கிறார்?) ஆலோசனைக் கர்த்தராம் வல்ல தேவனாம், பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார், அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம், நம் தலைகளைத் தாழ்த்தி அதைப் பற்றி சிந்திப்போம்: நான் முன்பு காணாமற்போனேன்; ஆனால் இப்போது நான் கண்டுபிடிக்கப்பட்டேன், ஆக்கினைத் தீர்ப்பு எனக்கில்லை (தேசங்கள் உடைகின்றன அதைப்பற்றி கவலையில்லை) முழு விடுதலையும் முழு இரட்சிப்பும் இயேசு தந்தாரே பாவம், இலச்சையினின்றும் என்னை இரட்சிக்கிறார் என் மீட்பர் அற்புதமானவரே, அவர் நாமத்திற்கே ஸ்தோத்திரம். அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம் பாவம் சாபம் யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஓ, அதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள் காணாமற்போன என்னை தேடிக் கண்டுபிடித்தார் ஆக்கினையினின்றும் விடுதலையானேன் இயேசு விடுதலையும், பூரண இரட்சிப்பும் ஈந்தாரே பாவம், வெட்கம், இவற்றினின்று என்னை (அதிலிருந்து தப்பிக்க) இரட்சித்து காக்கிறாரே (அவர் என்ன செய்கிறார்!) அற்புதம் என் மீட்பர், அவர் நாமத்திற்கே துதியுண்டாவதாக இப்பொழுது ஒருமித்து.... அற்புதம், அற்புதம் இயேசு எனக்கு, ஆலோசனைக் கர்த்தராம் வல்ல மீட்பராம் பாவம் சாபம்யாவும் நீக்கி என்னை இரட்சித்தார். அற்புதம் என் இயேசுவுக்கு ஸ்தோத்திரம். ஓ, நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன் (மகிமை) ஓ, நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன் (உங்கள் கரங்களை உயர்த்திப் பாடுங்கள்... நான் அவருக்காக காத்திருக்கிறேன்) அவர் என்னில் முந்தி அன்பு கூர்ந்ததால் ஓ, நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன். இப்பொழுது நமது கரங்களை உயர்த்தின வண்ணமாக, நாம் உண்மையாகவே உளமாறக் கூறுவோமானால் நான் அவரை விட்டு விலகமாட்டேன் நான் அவரை விட்டு விலகமாட்டேன் நான் அவரை விட்டு விலகமாட்டேன் ஏனெனில் அவர் என்னில் முந்தி அவர் அன்பு கூர்ந்தார். 107நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அப்பாடியாயின் நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூறவேண்டும். காண்கிறவர்களில் நீங்கள் அன்பு கூற இயலாவிடில் நீங்கள் கண்டிராத அவரை எவ்வாறு நேசிப்பீர்கள்? ஒருவர் மற்றவருடைய கரத்தை பற்றியவாறே பாடுவோமாக: 108நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன், ஓ, நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன் அவர் என்னில் முந்தி அன்பு கூர்ந்ததால் ஓ, நான் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன். நான் அவரை விட்டு விலகமாட்டேன் நான் அவரை விட்டு விலகமாட்டேன் அவர் என்னில் முந்தி அன்பு கூர்ந்ததால், நான் அவரை விட்டு விலகமாட்டேன் 109சற்று எண்ணிப் பாருங்கள், அவர் இந்த பெரிய வெளிப் பாட்டை நாம் அறியத்தக்கதாக செய்தார். நாம் அவரை நேசிக்கிறதில்லையா? அவர் அற்புதமானவராக இல்லையா? “இதோ, உலகத்தின் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' என்று கூறி நம்மை கைவிடாத நம்முடைய கர்த்தராகிய இயேசுவைப் பற்றி நாம் எவ்வளவாய் நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம்! தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றிய செய்தியில் நாம் களிகூர்ந்தோமா? ஓ, நாம் அவரை நேசிக்கவில்லையா? அது எவ்வாறுள்ளது? கல்வாரியின் ஆட்டுக்குட்டியானவரே, தெய்வீக இரட்சகரே என் விசுவாசம் உம்மை நோக்குகிறது நான் ஜெபிக்கும் போது செவிகொடும் என் பாவமனைத்தையும் அறவே நீக்கிடும் ஓ, இன்றிலிருந்து நான் உம்முடையவனாய் இருப்பேனாக. வாழ்வின் இருளான திகைப்பு என்னைச் சூழ்கையில் என் வழிகாட்டியாக நீர் இரும் (கர்த்தாவே, நீர் வழி நடத்தும்) ஓ இருள் நீங்கிப்போக கட்டளையிடும் வருத்தங்கள் பயங்களை துடைத்தருளும் உம்மைவிட்டு விலகாமல் இருக்க பார்த்துக் கொள்ளும் (சகோ. பிரான்ஹாம் பாடலை இசைக்க ஆரம்பிக்கிறார் - ஆசி) இருதயம் சோர்ந்து போகையில் பெலம் ஈந்தருளும் என் வைராக்கியம் என்னை தூண்டுகிறது இன்றே இருள் அகலச் செய்யும் என் பயங்களையெல்லாம் துடைத்தருளும் இந்நாளிலிருந்து நான் உம்முடையவனாய் இருக்கட்டும். 110ஓ, இயேசுவே, ஏதோ ஒன்றை நாங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறதை காண்கிறோம். தீர்க்கதரிசியாகிய ஏசாயா அதைக் குறித்துப் பேசியிருக்கிறான். எரேமியா அதைக் குறித்து உரைத்திருக்கிறான்; தானியேல் பின்னால் திரும்பிப் பார்த்து அவர்கள் கூறியவைகளைப் பார்த்தான். அவைகள் அவனது இருதயத்தை அசைக்கும்படியாக இருந்தன. அவன் பரலோ கத்திற்கு நேராக தன் முகத்தை திருப்பினான். அவன் இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து உபவாசித்தான். மக்களை எச்சரிக்க தக்கதாக அவன் தேவனிடத்திலிருந்து அவர் பேசக் கேட்க விரும்பினான். 111கர்த்தாவே, புஸ்தகங்களின் வாயிலாக, உமது புஸ்தகம் ஏசாயாவின் புஸ்தகம், எரேமியாவின் புஸ்தகம், யாக்கோபின் புஸ்தகம், யோவானின் புஸ்தகம், லூக்காவான புஸதகம், மாற்கின் புஸ்தகம், மத்தேயுவின் புஸ்தகம், வெளிப்படுத்தின விசேஷப் புஸ்தகம் ஆகிய உம்முடைய புஸ்தகங்களையெல்லாம் நாங்கள் பார்த்து, நாங்கள் முடிவுக்கு சமீபமாயிருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். ஆகவே கர்த்தாவே, நாங்களும், எங்கள் முகங்களை ஜெபத்திலும், வேண்டுதலிலும், பரலோகத்திற்கு நேராக்கி, நாங்கள் எங்கே ஜீவித்துக் கொண் டிருக்கிறோம் என்பதை கண்டு கொள்ளும்படியாக செய்கிறோம். விடியற்கால வெளிச்சம் பரவுகிறதை நாங்கள் காணத் துவங்குகி றோம். கர்த்தாவே, நாங்கள் உம்மிடத்தில் வருகிறோம். இப்பொழுது எங்களுடைய விசுவாசம் உம்மை நோக்கிப்பார்க்கிறது. பாவத்தையும், பாரமான யாவற்றையும் தள்ளிவிட்டு, எங்களை சுற்றி நெருங்கி நிற்கிற அவிசுவாசம் அனைத்தையும் தள்ளிவிட்டு, எங்களுடைய பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கி நாங்கள் தொடருகிறோம். எங்களுடைய காலமானது வரையறுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்தேயிருக்கிறோம். இங்கிருக்கிற மக்களை ஆசீர்வதியும், கர்த்தாவே... அவர்கள் உம்மை நேசிக்கிறார்கள். அவர்கள் உம்முடையவர்களாயிருக் கிறார்கள். அவர்கள் வெளியே வந்திருக்கின்றனர். நீரே வெளிப் படுத்துதலை அருளுகிறவராயிருக்கிறீர். நாங்கள் உமக்காக காத் திருக்கையில் நீரே எங்களுக்கு இவைகளை அளித்தருளுமாறு ஜெபிக்கிறோம். கர்த்தாவே, மதிய வேளையில் நன்கு ஆராய்ச்சி செய்ய எங்களுக்கு உதவியருளும். புரிந்து கொள்ளுதலை எங்களுக்குத் தாரும். இன்றிரவில் எங்களை புத்துணர்ச்சியோடு இங்கே கொண்டு வாரும், கர்த்தாவே. இன்று மதியத்திலே, காபிரி யேலின் விஜயத்தின் ஆறுவிதமான நோக்கத்தைப் பற்றி நான் ஆராய்கையில், நீர் என்னை அபிஷேகித்தருளும். காபிரியேல்.